முன்பெல்லாம் சமையல் சார்ந்த டிவி நிகழ்ச்சிகளை வெறும் இல்லத்தரசிகள் மட்டுமே பார்த்து வந்தனர். ஆனால், தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் சமையல் சார்ந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். இந்த பெருமைக்கு முழு தகுதியும் விஜய் டிவியின் டாப் ரியாலிட்டி நிகழ்ச்சியான 'குக் வித் கோமாளி' (CWC 3) நிகழ்ச்சிக்கு உள்ளது. இல்லத்தரசிகள் மட்டுமே சமையல் தொடர்பான நிகழ்ச்சிகளை எப்போதும் பார்த்து கொண்டிருந்த போது, குடும்பமாக எல்லோரையும் ஒன்று சேர்த்து மக்களை கலகலப்பாக இந்த சமையல் நிகழ்ச்சியை பார்க்க வைத்துள்ளது விஜய் டிவி.
இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் பல தரப்பு மக்களின் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு மூன்றாம் சீசன் நடைபெற்றது. இதில் மக்களுக்கு மிகவும் பிடித்தவர்கள் பல கோமாளிகள் உள்ளனர். புகழ், ஷிவாங்கி, மணிமேகலை, பாலா ஆகியோருக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இவர்களின் ஜாலியான நகைச்சுவைக்காக பலர் இந்த நிகழ்ச்சியை பார்த்து வந்தனர். இந்நிலையில் தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 தொடங்கி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இதையும் படிங்க.. விஜய் டிவி சீரியல் நடிகை ஆனந்தி எடுத்த முடிவு… வரவேற்கும் ரசிகர்கள்!
கடந்த இரண்டு சீசனை போன்றே இந்த சீசனில் சிறப்பான போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதே போன்று கலாட்டா நிறைந்த கோமாளிகளும் இதில் கலந்து கொண்டுள்ளனர். கடந்த சீசன்களில் இருந்த கோமாளிகளும் இந்த சீசனிலும் உள்ளனர். இந்த நிகழ்ச்சியிலும் 10 குக்குகளும், 10 கோமாளிகளும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த மூன்றாம் சீசனில் போட்டியாளர்களாக ரோஷினி, சுருதிகா, மனோ பாலா,
வித்யூ லேகா போன்றவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதே போன்று கோமாளிகளாக முன்னர் இருந்த ஷிவாங்கி, மணிமேகலை, பாலா, சக்தி போன்றவர்களும் உள்ளனர். இதில் புதிதாக சூப்பர் சிங்கர் பரத் மற்றும் மூக்குத்தி முருகன் ஆகியோரும் வந்துள்ளனர்.
இதையும் படிங்க.. அர்ச்சனாவின் ஆட்டத்துக்கு முடிவு கட்டும் சரவணன்.. ராஜா ராணி 2-வில் உச்சக்கட்ட பரபரப்பு!
அதிக எதிர்பார்ப்போடு ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி மிகவும் கலகலப்பாக செல்கிறது. இந்நிலையில் இந்த
சீசன் போட்டியாளர்களில் ஒருவரான நடிகை ஸ்ருதிகா இதிலுள்ள எல்லோருக்கும் சிறப்பான ஒரு விஷயத்தை செய்துள்ளார். இதை பலர் பாராட்டி வருகின்றனர். சீசன் 3-ல் உள்ள எல்லா நட்சத்திரங்களுக்காக இவர் சிறப்பு விருந்து ஒன்றை அளித்துள்ளார். இதை இரவு விருந்தாக அளித்துள்ளார்.
இதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சுனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இந்த பதிவிற்கு தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பலர் இந்த புகைப்படங்களை லைக் செய்தும் வருகின்றனர். இது போன்ற நிகழ்வு இது வரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடந்தது கிடையாது. இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஸ்ருதிகா அளித்த இந்த இரவு விருந்து குறித்த பதிவானது ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. மேலும் அவரின் பாசிட்டிவான குணத்தை பற்றி பல நேர்காணல் மூலமும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.