Home /News /entertainment /

Cook with comali : காலில் விழுந்த புகழ்.. எட்டி உதைத்த செஃப்! இது தேவையா?

Cook with comali : காலில் விழுந்த புகழ்.. எட்டி உதைத்த செஃப்! இது தேவையா?

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி

Cook with comali 3: புகழ் கோமாளியாக வந்துள்ளாரா அல்லது சிறப்பு விருந்தினாராக என்ட்ரி கொடுத்துள்ளார் என்பது குறித்து தெரியவில்லை.

    குக் வித் கோமாளியில் மீண்டும் புகழ் என்ட்ரி கொடுத்துள்ளார். செட்டுக்கு என்ட்ரி கொடுக்கும் புகழை வழக்கம் போல் வச்சி செய்கிறார் செஃப் வெங்கடேஷ் பட்

    ரசிகர்களின் பேராதரவுடன் கடந்த வாரம் முதல் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி ஒளிப்பரப்பாக தொடங்கியது. வித்தியாசமான முயற்சியில் குக்கிங்யுடன் காமெடி என்ற கான்செப்டில் உருவாக்கப்பட்ட குக் வித் கோமாளி ஷோ ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரெட் ரியாலிட்டி ஷோ லிஸ்டில் இருக்கிறது. இந்த சீசனில் கோமாளியாக புகழ் இல்லை என்பது முன்பே தெரிந்து விட்டது. அதற்கு பதிலாக சூப்பர் சிங்கர் பரத், மூக்குத்தி முருகன், குரேஷி ஆகியோர் புதிய கோமாளிகளாக களம் இறக்கப்பட்டனர். முதல் வார எபிசோடில் இவர்களின் அட்ராசிட்டிகளை பார்க்க முடிந்தது.

    இதையும் படிங்க.. இனி சீரியல்களில் என்னை பார்க்க முடியாது... ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலை சொன்ன பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜூ!

    அதே போல் குக்குகளாக சின்னத்திரையில் மட்டுமில்லை வெள்ளித்திரையிலும் கலக்கும், கலக்கி கொண்டிருக்கும் நடிகர், நடிகைகளும் போட்டியாளராக வந்துள்ளனனர். ரோஷினி, மனோபாலா, வித்யுலேகா, சூர்யாவின் ஸ்ரீ, ஆல்பம் பட ஹீரோயின் ஸ்ருதிகா அர்ஜூன், கிரேஸ் கருணாஸ், ராகுல் தாத்தா, அம்மு அபிராமி என பல நட்சத்திரங்கள் குக் வித் கோமாளி 2ல் நுழைந்துள்ளனர். இருப்பினும் புகழ் இல்லாதது ஒரு குறையாகவே பார்க்கப்பட்டது. முதல் 2 சீசன்கள் வெற்றி பெற புகழின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது.

    இதையும் படிங்க.. செவ்வாய்கிழமை யாராவது கல்யாணம் பண்ணுவாங்களா? விஜய் டிவியின் பதிவுக்கு ரசிகர்களின் ரிப்ளை!

    குக்குகளுடன் மட்டுமில்லை செஃப் தாமு, வெங்கடேஷ் பட்டுடனும் புகழுக்கு சூப்பரான கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆனது. இதனால் இந்த ஷோவுக்கு வேற லெவலில்ல் ரீச் கிடைத்தது. இந்நிலையில் திரைப்படங்களில் புகழ் நடிக்க தொடங்கியதால் , வெள்ளித்திரையில் பிஸி ஆனதால் குக் வித் கோமாளி 3ல் அவரை பார்க்க முடியவில்லை.



    இந்நிலையில் மீண்டு, இந்த நிகழ்ச்சிக்கு புகழ் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அவர் கோமாளியாக வந்துள்ளாரா அல்லது சிறப்பு விருந்தினாராக என்ட்ரி கொடுத்துள்ளார் என்பது குறித்து தெரியவில்லை. ஆனால் அவர் குக் வித் கோமாளி 3 செட்டுக்கு வரும் புரமோ தற்போது வெளியாகியுள்ளது. வந்த உடனே மரியாதைக்கு செஃப் தாமு காலில் புகழ் விழுகிறார். அவரை கலாய்க்க செய் பட் எட்டி உதைக்கிறார். உடனே உங்களை மிஸ் செய்வதாக புகழ் பிட்டு போட ரக்‌ஷன் வழக்கம் போல் புகழை கலாய்க்கிறார். இந்த புரமோவை பார்த்த குக் வித் கோமாளி ரசிகர்கள் ஆவலுடன் இந்த வார எபிசோடுக்காக காத்திருக்கின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Cook With Comali Season 2, Vijay tv

    அடுத்த செய்தி