குக் வித் கோமாளி சீசன் 3 இந்த வார எபிசோடில் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த, நீண்ட நாள் எதிர்பார்த்த அந்த சம்பவம் நடந்து விட்டது.ஆமாம், இந்த சீசனின் அண்ணன் - தங்கைகளான தர்ஷனும் சிவாங்கியும் இந்த வார எபிசோடில் ஜோடி சேர்ந்து விட்டனர்.
வார வாரம் ஆரவாரம் கதையாக இந்த வாரம் குக் விக் கோமாளி எபிசோடில் வில்லன்கள் கெட்டப். தமிழ் சினிமாவை கலக்கிய வில்லன்கள் கெட்டப்பில் கோமாளிகள் குக்குகளின் உயிர்களை வாங்க போகிறார்கள். இதுக் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது. ரஜினி, கமல், அஜித், ரகுவரன், விக்ரம் என கோமாளிகள் இறங்கி கலக்குகின்றனர். சீசன் 3 ல் இதுவரை 3 போட்டியாளர்கள் எவிக்ட் செய்யப்பட்டுள்ளனர். மீதம் இருக்கும் 7 போட்டியாளர்களில் ஒருவரை கூட எவிக்ட் செய்ய மக்களுக்கு மனசு இல்லை. அதே போல தான் நடுவர்களுக்கும். இதனால் முந்தைய வாரம் நோ எவிக்ஷன் என்று அறிவித்தனர்.
வெறித்தனமான விஜய் ஃபேன்ஸ் போல... பீஸ்ட் படத்திற்காக பிரபல சின்னத்திரை ஜோடி செய்த காரியம்!
போன வாரம் முழுவதும் செலபிரேஷன் ரவுண்டில் குக்குகள் ஜாலியாக இருந்தனர். இந்த வாரம், மீண்டும் போட்டி தொடங்கிவிட்டது. தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 டி.ஆர்.பியில் கலக்கி கொண்டிருக்கிறது. மற்ற எல்லா ரியாலிட்டி நிகழ்ச்சிகளை காட்டிலும் குக் வித் கோமாளி தான் நம்பரில் பெஸ்ட். இப்படி இருக்கையில் இப்பொதே குக் வித் கோமாளி 3 டைட்டில் வின்னர் குறித்த பேச்சும் இணையத்தில் பரவ தொடங்கி விட்டது. தர்ஷன் தான் அந்த டைட்டில் வின்னர் என பலரும் சொல்கின்றனர்.
இதன் மூலம் தர்ஷனுக்கு நிறை ஃபேன் பேஸ் உருவாகி இருப்பது தெரிகிறது. இப்படி இருக்கையில், தர்ஷனின் செல்ல தங்கையாக சுற்றி வரும் சிவாங்கி இதுவரை இந்த சீசனில் ஒருமுறை கூட தர்ஷனுடன் ஜோடி சேரவில்லை. இந்த நிகழ்வை ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர். இந்த வாரம் அது நடக்கிறது. முதன்முறையக தர்ஷனுடன் சிவாங்கி ஜோடி சேர்கிறார். அதுவும் ரஜினிகாந்த் எந்திரன் கெட்டப்பில் சிவாங்கி இந்த வாரம் என்ட்ரி ஆகுகிறார்.
Axis Bank : இனிமேல் மினிமம் பேலன்ஸ் ரூ.12,000.. ஷாக்கில் வாடிக்கையாளர்கள்!
புரமோவில் இதைப்பார்த்த ரசிகர்கள் வீக் எண்ட் எபிசோடுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.