Home /News /entertainment /

Cook with comali 3 : முதல் ஃபோட்டோவை வெளியிட்ட கோமாளிகள்... ரசிகர்கள் குஷி!

Cook with comali 3 : முதல் ஃபோட்டோவை வெளியிட்ட கோமாளிகள்... ரசிகர்கள் குஷி!

குக் வித் கோமாளி 3

குக் வித் கோமாளி 3

cwc3 : குக்வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியும் விரைவில் தொடங்க உள்ளது என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
    விஜய் டிவியில் ரசிகர்களை கவரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. பிக் பாஸ், சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி என பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக உருவெடுத்தது. கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி பார்வையாளர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    ஒரு சமையல் நகைச்சுவை நிகழ்ச்சி இந்த அளவுக்கு பிரபலமாகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அந்த அளவிற்கு ஊரடங்கு காலத்தில் மக்கள் ரசித்து பார்த்த ஷோவாக குக் வித் கோமாளி புகழ் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் குக்குகளாக நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் புகழ் தீபா, கனி ஆகியோர் இருந்தனர். மேலும் கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா வீஜே பார்வதி, சக்தி ஆகியோர் காணப்பட்டனர். இந்த கோமாளிகளின் நகைச்சுவை இந்த நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமாக இருந்தது.

    இதையும் படிங்க.. பிக் பாஸ் தாமரை உண்மையில் எப்படிப்பட்டவர்? அவரின் கணவர் கூறும் உண்மைகள்!

    முதல் சீசனை விட மிகவும் வரவேற்பு பெற்ற குக் வித் கோமாளி சீசன் 2வில் பங்குபெற்ற போட்டியாளர்கள் பிரபலமானார்கள். இதில் கனி முதல் பரிசை தட்டி சென்ற நிலையில், இரண்டாவது ரன்னர் அப்-ஆக நடிகர் அஷ்வின் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர்.
    முன்னதாக டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கும் என தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது வரை அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.



    தற்போது பிக்பாஸ் சீசன் 5 விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது 12 வாரங்களை கடந்துள்ள நிலையில் இன்னும் இரண்டு வாரங்களே இருப்பதால் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் குக்வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியும் விரைவில் தொடங்க உள்ளது என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கியுள்ள நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர் தொடங்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க.. அடி மேல் அடி வாங்கும் விஜய் டிவி சீரியல்கள்.. தொடர்ந்து டி.ஆர்.பியில் சன் டிவி முதலிடம்!

    கடந்த சில வாரங்களுக்கு முன் 3வது சீசன் படப்பிடிப்பு தொடங்கியதாக கூறப்பட்டது, ஆனால் யார் கலந்துகொள்கிறார் என்ற விவரம் மற்றும் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் கூட வெளியாகவில்லை. இந்நிலையில் குக் வித் கோமாளி 3 செட்டில் இருந்து ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் தங்கதுரை மற்றும் சுனிதா இருவரும் வித்தியாசமான லுக்கில் இருக்கின்றனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Cook With Comali Season 2, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி