Home /News /entertainment /

பிக் பாஸ் தாமரை செல்விக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கிய விஜய் டிவி!

பிக் பாஸ் தாமரை செல்விக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கிய விஜய் டிவி!

பிக் பாஸ் தாமரை செல்வி

பிக் பாஸ் தாமரை செல்வி

தாமரை செல்வி குக் வித் கோமாளி வாய்ப்பு கிடைப்பதோடு மட்டுமல்லாமல் விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்வார்

    பிக் பாஸ் வீட்டின் பல பிரபலங்களுடன் ஒரு சாமானியப் பெண்ணாக கலந்து கொண்ட தாமரைச்செல்வி லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தார். நாடக நடிகையாக தாமரைசெல்வி பிக் பாஸ் வீட்டில், அறியாத ஒரு புது முகமாகத்தான் உள்நுழைந்தார்.

    ஆரம்பத்தில் விளையாட்டை புரியவில்லை என்று சொல்லிக்கொண்டிருந்த தாமரை, ஃபினாலே வாரத்துக்கு முந்தைய வாரம் வரை இருந்தது மிகப்பெரிய சாதனையாகும். வீட்டுவேலைகள் முதல் பிக் பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகள் வரை எல்லா போட்டிகளிலும் கலந்து கொண்டு, யாருக்கும் பயமின்றி தன்னுடைய கருத்துகளை முன்வைத்த தாமரை இறுதிப்போட்டியில் ஃபைனலிஸ்ட்டாக கலந்து கொள்வார் என்று பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

    பணத்தேவை இருந்தும், பிக் பாஸ் பணப்பெட்டி டாஸ்க்கில் 12 லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு வெளியேறவில்லை. எனக்கு வீட்டில் இருக்கவே விருப்பம், பணப்பெட்டி வேண்டாம் என்று மறுத்திருந்தார். அது மட்டுமின்றி, பிக் பாஸ் அவருக்கு வழங்கிய சம்பளம் கடனை அடைக்க போதாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்த நிலையில், அவர் பணப்பெட்டியை எடுத்து கொண்டு செல்லாதது ஆச்சரியம் தான்.

    எதிர்பாராதவிதமாக தாமரைச்செல்வி இறுதி வாரத்திற்கு முன்பு பிக் பாஸ் 5 சீசனின் கடைசி போட்டியாளராக வெளியேற்றப்பட்டார். தாமரைச்செல்வியை எலிமினேட் செய்ததற்கு பலரும் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில் அவருடைய ரசிகர்களுக்கு மற்றொரு ஆச்சரியமான செய்தி காத்திருக்கிறது. தற்போது மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சியில் தாமரைசெல்வி கலந்து கொள்ளப் போகிறார் என்கிற செய்தி  வெளியாகியுள்ளது.

    இதையும் படிங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக இப்படியொரு பொன்னான வாய்ப்பை நிராகரித்த சஞ்சீவ்!

    இன்னும் ஓரிரு வாரத்தில் தொடங்க இருக்கும் குக் வித் கோமாளியின் மூன்றாம் சீஸனில் தாமரைச்செல்வியும் ஒரு போட்டியாளராக கலந்து கொள்ளப் போபோகிறார் என்ற தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. விஜய் டிவியின் மிகப் பெரிய ஹிட்டான ரியாலிட்டி சமையல் நிகழ்ச்சி குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது தொடங்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க.. நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் தொற்று - விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை

    பலரும் பல்வேறு கணிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 3 போட்டியாளராக தாமரையும் கலந்து கொள்வார் என்ற கூறப்படுகிறது. தாமரை பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் புரோமோ ஒளிபரப்பானது. அப்போதே பலரும் தாமரைசெல்வி அருமையாக சமைக்கிறார், எனவே இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பொருத்தமான போட்டியாளராக என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில், குக் வித் கோமாளி சீசன் 3ல் நடிகை ஊர்வசி தொகுப்பாளர், அர்ச்சனா, விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இப்போது வரை போட்டியாளர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. இதுவே நிகழ்ச்சியின் மீது அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    தாமரை செல்வி குக் வித் கோமாளி வாய்ப்பு கிடைப்பதோடு மட்டுமல்லாமல் விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil 5, Cook With Comali Season 2, Vijay tv

    அடுத்த செய்தி