Home /News /entertainment /

அடுத்த `அஷ்வினே’ ரெடி..! - குக் வித் கோமாளி 3 போட்டியாளர்கள் லிஸ்ட்

அடுத்த `அஷ்வினே’ ரெடி..! - குக் வித் கோமாளி 3 போட்டியாளர்கள் லிஸ்ட்

சந்தோஷ் பிரதாப்

சந்தோஷ் பிரதாப்

Cook with comali season 3 : திரைப்படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருக்கும் சந்தோஷ், சின்னத்திரை பக்கம் வந்திருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. இவர் மட்டுமின்றி இம்முறை போட்டியாளர்களாக கலந்து கொள்ளும் அனைவருமே வெள்ளித்திரையில் பிரபலமானவர்கள் தான்!

மேலும் படிக்கவும் ...

  குக் வித் கோமாளி சீசன் 3 அறிவிப்பு வெளியாகி, ஷூட்டிங்கும் தொடங்கிவிட்டது. தமிழ் சின்னத்திரை வரலாற்றில் ஒரு குக்கிங் ஷோ இந்தளவுக்கு மக்கள் மத்தியில் ரீச் ஆனது இதுவே முதல்முறை. இந்த பெருமை எல்லாம் கோமாளிகளையே சேரும்.


  கொரோனா தொற்று பரவி வருவதால், லாக் டவுன் அமல்படுத்தும் சூழல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதனால் குக் வித் கோமாளி 3 ஷூட்டிங் இரவு பகலாக நடைபெறுகிறதாம். கடந்த வாரம் குக் வித் கோமாளி 3 புரோமோ வெளியானது.


  ப்ரோமோவில் நடுவர்களாக செஃப் தாமு, வெங்கடேஷ் பட், கோமாளிகளாக மணிமேகலை, சுனிதா, பாலா, சிவாங்கி ஆகியோர் இருந்தனர். ஆனால் இந்த ப்ரோமோவில் மெயின் கோமாளி புகழ் இல்லாதது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.


  சினிமா ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் புகழ் இம்முறை குக் வித் கோமாளி -யில் பங்குபெறமாட்டார் என்று தகவல்கள் பரவின.  குக் வித் கோமாளி ரசிகர்கள் விஜய் டிவி பிரபலங்களின் இன்ஸ்டா பதிவுகளில் இதுகுறித்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் செஃப் தாமு தன் இன்ஸ்டாவில் புகழ் ரசிகர்களுக்கு பதில் அளித்து இந்த சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
  Cook with comali 3
  குக் வித் கோமாளி 3

  குக் வித் கோமாளி ப்ரோமோவில் செஃப் தாமு சமூக வலைத்தளத்தில் பகிர, அவரின் பதிவுக்கு கீழ் பலர் ”புகழ் ஏன் புரோமோவில் இல்லை?’’  என்று  கேள்வி எழுப்பியிருந்தனர், அதற்கு அவர், ”குக் வித் கோமாளியில் கண்டிப்பாக  புகழ் இருப்பார். 100% இது உண்மை ‘’ என்று  ரிப்ளை செய்திருந்தார்.  அவரின் ரிப்ளை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால் புகழ் குக் வித் கோமாளி-3இல் இல்லை என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதில் பங்கு பெறப் போகும் போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது, அதிகாரப்பூர்வமாக வெளியாக வில்லை என்றாலும், நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து இந்த பட்டியல் வெளியாகியுள்ளது.
  Vidhyu raman
  வித்யூலேகா


  கிரேஸ் கருணாஸ் 

  பின்னணிப் பாடகி மற்றும் நடிகையான கிரேஸ் கருணாஸ், விஜய் டிவி ஷோக்களில் அடிக்கடி நடுவராக எண்ட்ரி கொடுப்பார். கணவர் கருணாஸ் அரசியல், ஆர்கானிக் தோட்டம்  என பிஸியாக இருக்கிறார். கிரேஸ் விஜய்டிவி ஷோக்களில் பங்கு பெற்று வருகிறார். தற்போது குக் வித் கோமாளியில் போட்டியாளராக களமிறங்குகிறார்.


  மனோபாலா

  40க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள மனோபாலா, சிறந்த குணசித்திர நடிகரும் கூட. தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியிருக்கிறார், இன்ஸ்டாவில் ஆக்டிவ்வாக இருக்கிறார். பன்முக திறமை வாய்ந்த  மனோபாலா தற்போது சமையல் ஷோவில் தன் திறமையை வெளிப்படுத்த தயாராகிவிட்டார்.


  சந்தோஷ் பிரதாப்


   சார்பட்டா பரம்பரை படத்தில் மிக முக்கிய ரோலில் நடித்துள்ளார். திரைப்படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருக்கும் இவர் சின்னத்திரை பக்கம் வந்திருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. இந்த சீசனின் அஷ்வின் இவர் தான் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.


  இதையும் படிங்க..  ட்ரெண்டிங் குடும்பம்! - டாப் 10 சீரியல் ரியல் ஜோடிகள்!


  வித்யுலேகா


  திரைப்படங்களில் காமெடி நடிகையாக அறிமுகமான வித்யூலேகா நடிகர் மோகன் ராமின் மகள் ஆவார். வித்யூலேகா, தனது உடல் எடையை வெகுவாக குறைத்து ஃபிட்னஸில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். இன்ஸ்டாவில் அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்ந்து இன்ஸ்டா சென்சேஷனாக மாறியிருக்கிறார். குக் வித் கோமாளி மூலம் சின்னத்திரைக்கு வருகிறார்.


  அந்தோணி தாசன்  


  நாட்டுப்புற பாடகரான இவர் வெள்ளித்திரையில் நடிப்பு, இசை என இயங்கி வருகிறார். அவ்வபோது விஜய் டிவி ஷோக்களிலும் கலந்து கொள்வார்.


  முதல்கட்ட லிஸ்ட் இதுதான் பிக் பாஸ் அர்ச்சனா, சர்வைவர் வெற்றியாளர் விஜயலட்சுமி ஆகியோரும் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அர்ச்சனாவும், விஜயலட்சுமியும் சமையலில் எக்ஸ்பார்ட். கண்டிப்பாக இந்த முறை போட்டி கலகலப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Aswini S
  First published:

  Tags: Cook With Comali Season 2, Vijay tv

  அடுத்த செய்தி