குக் வித் கோமாளி சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டு சமையலில் பட்டையை கிளப்பி வருகிறார் பாடகியும் நடிகர் கருணாஸின் மனைவியுமான கிரேஸ். இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட இளமைக்கால புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதுமட்டுமில்லை அடிக்கடி கிரேஸை உடல் பருமன் குறித்து கலாய்ப்பவர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகியுள்ளனர்.
மிகப் பெரிய ரியாலிட்டி ஷோவாக உருவெடுத்து விட்டது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. தற்போது
சீசன் 3 ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த பரபரப்பான உலகில் வாய்விட்டு சிரிக்க கூட நேரமில்லாத போது 1 மணி நேரம் சிரிப்பை தவிர வேற எதையும் யோசிக்க மாட்டீர்கள் , குக்கிங் உடன் சேர்ந்த காமெடி நிகழ்ச்சி என்ற கான்ஸ்ப்டில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சி டி.ஆர்.பியில் கலக்கி வருகிறது. அதுமட்டுமில்ல முதல் 2 சீசன்களில் சின்னத்திரை பிரபலங்கள் தான் அதிகம் கலந்து கொண்டனர். ஆனால் சீசன் 3ல் வெள்ளித்திரை நட்சத்திரங்கள் படையெடுத்து வந்துள்ளனர். அதில் ஒருவர் தான் கிரேஸ் கருணாஸ்.
இதையும் படிங்க.. கலர்ஸ் தமிழில் மீண்டும் மண்வாசனை சீரியல்.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
இவரை பல்வேறு விஜய் டிவி நிகழ்ச்சியில் பார்த்து இருப்பீர்கள். குறிப்பாக காமெடி நிகழ்ச்சி சார்ந்த எல்லா விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் கிரேஸ் இருப்பார். மிகவும் ஜாலி கேரக்டரான கிரேஸ் எவ்வளவு கலாய்த்தாலும் அதை ஸ்போடிவ்வாக எடுத்துக் கொள்வார். இவரின் உருவத்தை வைத்து பல பாடி ஷேமிங் காமெடிகளை செய்தாலும் கூட அதை டேக் இட் ஈஸி ஊர்வசி என கடந்து போவார். ஆனால் இவரின் உருவத்தை வைத்து
விஜய் டிவி காமெடி நட்சத்திரங்கள் செய்யும் மொக்க ஜோக்குகளை பலமுறை இணையவாசிகள் வசைப்பாடியுள்ளனர்.
இந்நிலையில் கிரேஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவரின் இளமைக்கால புகைப்படங்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பழைய கிரேஸ் பள்ளி பருவத்திலும் சரி, இளமைக்காலத்திலும் சரி ஜப்பி கேர்ள் போல் செம்ம கியூட்டாக இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு வழக்கம் போல் பெண்கள் சந்திக்கும் அதே உடல் பிரச்சனைகளால் கிரேஸ் வெயிட் போட்டு இருக்கிறார் என்பது பலருக்கும் தெரிகிறது.
இதையும் படிங்க.. ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் கலர்ஸ் அம்மன் 3 சீரியல் நடிகை.. என்ன காரணம்?
கிரேஸின் இந்த பதிவுக்கு கீழ் ஏகப்பட்ட பாசிடிவ் கமெண்டுகளை பார்க்க முடிகிறது. குறிப்பாக குக் வித் கோமாளியில் யாராவது உங்களை குண்டு என்றல் இந்த புகைப்படத்தை காட்டுங்கள் கிரேஸ் அக்கா என பல ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.