Home /News /entertainment /

விஜய் டிவி குக் வித் கோமாளியில் சூர்யா பட ஹீரோயினா? சொல்லவே இல்லை!

விஜய் டிவி குக் வித் கோமாளியில் சூர்யா பட ஹீரோயினா? சொல்லவே இல்லை!

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி

Cook with Comali 3 cast : பள்ளி படிக்கும் போதே தமிழ் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். 17 வயதிலே இவரின் முதல் படம் ரிலீஸானது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
  ரசிகர்களின் பேராதரவுடன் தொடங்கிய குக் வித் கோமாளியில் சீசன் 3ல், சூர்யா பட நாயகி குக்காக கலந்து கொள்ள போகிறார். நிகழ்ச்சியில் இவர் எண்ட்ரி கொடுக்கும் எபிசோடு இன்று ஒளிப்பரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரெட் ரியாலிட்டி ஷோ லிஸ்டில் இருப்பது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி. வித்தியாசமான முயற்சியில் குக்கிங்யுடன் காமெடி என்ற கான்செப்டில் உருவாக்கப்பட்ட குக் வித் கோமாளி ஷோ சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. 2 சீசன்களை கடந்து தற்போது 3 ஆவது சீசன் நேற்று முதல் ஆரம்பமானது. இந்த சீசனில் கோமாளியாக புகழ் இல்லை என்பது முன்பே தெரிந்து விட்டது. அதற்கு பதிலாக சூப்பர் சிங்கர் பரத், மூக்குத்தி முருகன், குரேஷி ஆகியோர் புதிய கோமாளிகளாக களம் இறக்கப்பட்டுள்ளனர்.

  இதையும் படிங்க.. ரஜினியின் பேட்ட பட விவகாரம் : தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி மீது இரு பிரிவுகளில் வழக்கு!

  அதே போல் குக்குகளாக சின்னத்திரையில் மட்டுமில்லை வெள்ளித்திரையிலும் கலக்கும், கலக்கி கொண்டிருக்கும் நடிகர், நடிகைகளும் போட்டியாளராக வந்துள்ளனனர். நேற்று தான் முதல் எபிசோடு ஒளிப்பரப்பானது. 10 கோமாளிகளின் அறிமுகம் முடிந்தது. அதனைத் தொடர்ந்து, ரோஷினி, மனோபாலா, வித்யுலேகா போன்ற போட்டியாளர்கள்ன் அறிமுகமும் முடிந்தது. இந்நிலையில் இன்று 2 ஆவது நாள் எபிசோடு ஒளிப்பரப்பாகும். இந்நிலையில் இன்று போட்டியாளராக சூர்யாவின் ஸ்ரீ, ஆல்பம் பட ஹீரோயின் ஸ்ருதிகா அர்ஜூன் பங்கேற்கிறார். இதை விஜய் டிவியே உறுதி செய்துள்ளது. அவரின் மினி கிளிப் வீடியோ ஒன்றை விஜய் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

  இதையும் படிங்க.. மிஷன் இம்பாஸிபிள் 7,8 பாகங்களின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  இவர் பழம்பெரும் மூத்த நடிகரான தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார். பள்ளி படிக்கும் போதே தமிழ் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். 17 வயதிலே இவரின் முதல் படம் ரிலீஸானது. வசந்த பாலனின் ஆல்பம் படம், சூர்யாவின் ஸ்ரீ படத்தில் ஹீரோயினாக நடித்தார். தித்திக்குதே படத்திலும் ஜீவாவுடன் நடித்து இருந்தார். அதன் பின்பு சினிமாவுக்கு முடக்கு போட்டு விட்டு படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார். பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த உடனே 23 வயதில் அர்ஜூன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது மனைவியாக, அம்மாவாக, பெண் தொழிலதிபராகவும் கலக்கி கொண்டிருக்கிறார்.  கடந்த ஆண்டு இவர் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக, அதன் பின்பு எல்லா யூடியூப் சேனலிலும் இவரின் பேட்டி தான். மிகவும் கலகலப்பான ஸ்ருதிகா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நம்மை சிரிக்க வைப்பாரோ இல்லையோ அவரே விழுந்து விழுந்து அரைமணி நேரத்திற்கு சிரிப்பார் என்பது கன்ஃபார்ம்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Actor Suriya, Cook With Comali Season 2, Vijay tv

  அடுத்த செய்தி