வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன், உமா ரியாஸ்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்ட குக் வித் கோமாளி முதல் சீசன் வெற்றி பெற்றதை அடுத்து இரண்டாவது சீசன் கடந்த ஆண்டு நவம்பர் 14-ம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது.
நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் தீபா மற்றும் கனி ஆகியோர் இடம்பெற்றிருக்கும் இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வீஜே பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் உள்ளனர். இவர்களின் நகைச்சுவையை ரசிக்க பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.
குக் வித் கோமாளி சீசன் 2-வுக்கு என்ட் கார்ட் போட வேண்டாம் என்ற கோரிக்கை ரசிகர்கள் வைத்து வரும் நிலையில் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் ஃபைனல் சமீபத்தில் நடந்து முடிந்திருப்பதாக கூறப்படுகிறது. அதில் இந்த சீசனின் வின்னராக கனியும் முதல் ரன்னராக நடிகை ஷகிலாவும் இரண்டாவது ரன்னராக அஸ்வினும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் குக் வித் கோமாளி ஃபைனல் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என தெரிகிறது.
முதல் சீசனில் நடிகை வனிதா விஜயகுமார் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். ரம்யா பாண்டியனுக்கு இரண்டாவது இடமும் நடிகை ரேகாவுக்கு மூன்றாவது இடமும் கிடைத்தது. இந்நிகழ்ச்சி தமிழில் ஹிட் அடித்திருப்பதைத் தொடர்ந்து கன்னடம் மொழியிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
Published by:Sheik Hanifah
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.