Home /News /entertainment /

பாஜக ஊடகங்களை மிரட்டலாம், ஆனால்... தனியார் சேனல் சர்ச்சை குறித்து ஜோதிமணி எம்.பி

பாஜக ஊடகங்களை மிரட்டலாம், ஆனால்... தனியார் சேனல் சர்ச்சை குறித்து ஜோதிமணி எம்.பி

ஜோதிமணி எம்.பி

ஜோதிமணி எம்.பி

பிரதமரின் மாண்பு அவரது ஆட்சியால், செயல்பாடுகளால் தீர்மானிக்கப்படும். அந்த ஆட்சியின் மீது வைக்கப்படும் விமர்சனங்களால் அல்ல.

    தனியார் தொலைக்காட்சியில் பிரதமர் மோடி அவமதிக்கப்பட்டதாக எழுந்த பாஜக-வினர் புகாருக்கு, பாஜக ஊடகங்களை மிரட்டலாம். ஆனால் 8 கோடி தமிழக மக்களை எதுவும் செய்ய முடியாது என மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

    பிரபல தனியார் தொலைக்காட்சியின் நசைச்சுவை ரியாலிட்டி ஷோ-வில், புலிகேசி மன்னர் போலவும், மங்குனி அமைச்சராகவும் இரு குழந்தைகள் செய்த நகைச்சுவைக் காட்சி தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்த இரண்டு குழந்தைகளும் பிரதமர் மோடியின் கருப்பு பண நடவடிக்கை, பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வது உள்ளிட்ட நிகழ்வுகளை விமர்சித்து வசனங்களை பேசியிருந்தனர். அதோடு வட மாநிலங்களில் தாங்கள் மாறுவேடத்தில் செல்ல வேண்டும் எனவும், தென்னகத்தில் மன்னராகவே வந்தாலும் யாரும் மதிக்க மாட்டார்கள் எனவும் நசைச்சுவையாக தெரிவித்தனர்.

    இதற்கு பாஜக தரப்பில் கடும் கண்டனங்களும், பாஜக எதிர்ப்பு மனநிலையில் இருப்பவர்களிடத்தில் அமோக ஆதரவும் கிடைத்து வருகின்றன. இது குறித்து ட்விட்டரில் பதிவு செய்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, “மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு.முருகன் அவர்கள் தொடர்பு கொண்டு தமிழகத்தில் ஒரு ரியாலிட்டி டிவி ஷோவில் பாரத பிரதமர் அவர்கள் மாண்பை குறைப்பது போல் சில காட்சிகளை வைத்திருப்பதைப் பற்றி கேட்டறிந்தார். நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்! அவருக்கு என் நன்றிகள்” என்று குறிப்பிட்டிருந்தார்.



    அவரின் இந்த ட்வீட் கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெறிப்பது போல் இருப்பது போலுள்ளதாக நெட்டிசன்களிடமும் காங்கிரஸ் தலைவர்களிடமும் கடும் விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் அண்ணாமலையின் ட்வீட்டுக்கு பதிலளித்திருக்கும் காங்கிரஸ் மக்களை உறுப்பினர் ஜோதிமணி, “பாஜக எப்படி ஊடகங்களை மிரட்டுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். பிரதமரின் மாண்பு அவரது ஆட்சியால், செயல்பாடுகளால் தீர்மானிக்கப்படும். அந்த ஆட்சியின் மீது வைக்கப்படும் விமர்சனங்களால் அல்ல. பாஜக ஊடகங்களை மிரட்டலாம். ஆனால் 8 கோடி தமிழக மக்களை எதுவும் செய்ய முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து இவ்விவகாரம் மேலும் தீவிரமடைந்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Zee tamil, Zee Tamil Tv

    அடுத்த செய்தி