Home /News /entertainment /

கம்மான் பேபி Lets Go Bulletu ! வைரலாகும் கேபி, ஆஜித்தின் புல்லட்டு ரீல்ஸ் வீடியோ..

கம்மான் பேபி Lets Go Bulletu ! வைரலாகும் கேபி, ஆஜித்தின் புல்லட்டு ரீல்ஸ் வீடியோ..

கேப்ரியெல்லா - ஆஜித்

கேப்ரியெல்லா - ஆஜித்

Bulletu Reels Video : பிக்பாஸ் கேப்ரியெல்லா, ஆஜித் செய்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போட்டியாளர்களின் பெரும்பாலனவர்கள் விஜய் டிவி பிரபலங்களே. அந்த வகையில் விஜய் டிவி டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றின் மூலம் பிரபலமான கேப்ரியெல்லா பிக்பாஸ் சீசன் 4 -ல் போட்டியாளராக கலந்துக்கொண்டார். அதே சீசனில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராகி பிரபலமான ஆஜித்தும் கலந்துக்கொண்டார்.

    பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு நட்பாக பழகியவர்கள், வெளியே வந்தும் கூட அந்த நட்பை தொடருவார்கள். அப்படி தான் கேபி, ஆஜித்தும் அடிக்கடி மீட் செய்யும் புகைப்படங்களை பகிர்வார்கள். கேப்ரியெல்லா, ஆஜித் இருவரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துக்கொண்டனர் .

    கேப்ரியெல்லா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஈரமான ரோஜாவே 2 ’சீரியலில் காவியா என்ற கதாபாத்திரத்தில் பின்னி பெடலெடுத்து வருகிறார். கேப்ரியெல்லாவின் நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கேப்ரியெல்லா சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த யூடியூப் சேனலில் ஈரமான ரோஜாவே காவ்யா மேக்கப், நியூ கார் வாங்கிய வீடியோ, what i eat in a day என பல வீடியோக்களை அப்லோட் செய்து லைக்ஸ்களை அள்ளி வருகிறார்.



    இந்நிலையில் பிசியான ஷூட்டிங்கிற்கு நடுவிலும் கேப்ரியெல்லா, ஆஜித்துடன் இணைந்து தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் ‘கம்மான் பேபி லெட்ஸ் கோ புல்லட்டு’ என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளனர். இந்த ரீல்ஸை 8.8 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

    also read : பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸிற்கு ‘மாலத்தீவை’ அவ்ளோ பிடிச்சிருச்சாம்!



     
     

     

     


    View this post on Instagram


     

     

     

     

    A post shared by Gaby (@gabriellacharlton_)





    ‘கம்மான் பேபி’ பாடல் 'வாரியர்' என்ற தெலுங்கு படத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் நடிகை க்ரித்தி ஷெட்டி மற்றும் ராம் பொதினேனி இணைந்து நடித்துள்ளனர். ‘கம்மான் பேபி’பாடலை தமிழில் நடிகர் சிம்பு பாடியுள்ளார்.

    also read : வளைகாப்பு முடிஞ்சிடுச்சு..பேபிக்கு வெயிடிங்! வைரலாகும் ப்ரணித்தாவின் கர்ப்பகால போட்டோ ஷூட்..

    'கம்மான் பேபி’ பாடலின் ஒரிஜினல் வீடியோ இதோ:


    இந்த பாடலுக்கு பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து பதிவிடுகின்றனர்.
    Published by:Tamilmalar Natarajan
    First published:

    Tags: Bigg Boss Tamil

    அடுத்த செய்தி