• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிரபல ஷோவுக்கு எண்டு கார்டு போட்ட விஜய் டிவி.. சோகத்தில் ரசிகர்கள்!

பிரபல ஷோவுக்கு எண்டு கார்டு போட்ட விஜய் டிவி.. சோகத்தில் ரசிகர்கள்!

விஜய் டிவி ஷோ

விஜய் டிவி ஷோ

இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள் யார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை

  • Share this:
    காமெடி ராஜா கலக்கல் ராணி" ஷோ விரைவில் முடிவடைய உளளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென்றே பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இந்த சேனலில் ஒளிபரப்பாகும் சீரியலாகட்டும், ரியாலிட்டி ஷோக்கள் ஆகட்டும் மக்களின் பெருவாரியான ஆதரவை பெற்று சூப்பர் டூப்பர் ஷோக்களாக ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்து வருகின்றன. எனவே சின்னத்திரை ரசிகர்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் தமிழ் சேனலாக விஜய் டிவி இருந்து வருகிறது. ரசிகர்களை தக்க வைத்து கொள்வதற்கு ஏற்ப அவ்வப்போது பல புதுமையான சீரியல்கள் மற்றும் ஷோக்களை களமிறக்கி அசத்தி வருகிறது விஜய் டிவி.

    குறிப்பாக காமெடி சார்ந்த ஷோக்களை ஒளிபரப்பி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பதில் விஜய் டிவியை அடித்து கொள்ள ஆளில்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு பல காமெடி பிரபலங்கள் விஜய் டிவி மூலம் உருவாக்கி ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர். இதில் பலர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று கலக்கி வருகின்றனர். இதற்கு உதாரணமாக நடிகர் சந்தானம், சிவகார்த்திகேயன், ராமர், பாலா, புகழ் உள்ளிட்ட பலரை சொல்லலாம். நடிகர்களை போலவே விஜய் டிவி-யில் கலக்கிய சில காமெடி மற்றும் குணசித்திர நடிகைகளும் திரைப்படங்களில் நடித்து மக்களிடையே மேலும் பிரபலமடைந்து வருகின்றனர்.

    கலக்கப்போவது யாரு, அசத்த போவது யாரு, அது இது எது என பல்வேறு டைட்டில்களில் காமெடியை தெறிக்கவிட்ட விஜய் டிவி ஒரு சமையல் நிகழ்ச்சியை கூட இப்படி வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் ஒளிபரப்ப முடியுமா என்று குக் வித் கோமாளி மூலம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்நிலையில் விஜய் டிவி-யில் சில மாதங்களுக்கு முன்னர் துவக்கப்பட்ட "காமெடி ராஜா கலக்கல் ராணி" ஷோ விரைவில் முடிவடைய உளளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சீரியல் பிரபலங்கள் மற்றும் விஜய் டிவி காமெடியன்கள் ஜோடி போட்டு கலக்கி வரும் இந்த காமெடி ஷோவின் ஃபைனல் எபிசோடின் ஷூட்டிங் நிறைவடைந்து விட்டதாக கூறி ஷூட்டிங் செட்டில் எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் ஃபோட்டோக்கள் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன.

    எனினும் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள் யார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே காமெடி ராஜா கலக்கல் ராணி ஷோ துவங்கிய போது ரசிகர்களின் மனம் கவர்ந்த பிரபலமான புகழும் பங்கேற்று இருந்தார்.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் குழந்தைகளால் வரும் பிரிவு.. குணம் மாறும் மீனா!

    ஆனால் திடீரென இந்த ஷோவில் விலகுவதாக அறிவித்தார். பின்னர் அளித்த விளக்கத்தில் தனக்கு சினிமா வாய்ப்புகள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருப்பதால், வேறுவழியின்றி தற்காலிகமாக விலகுவதாக கூறி இருந்தார். மீண்டும் புகழ் வருவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ஷோவிற்கே எண்டு கார்டு போட்டு விட்டதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: