நகைச்சுவை நடிகர் படவா கோபி கலர்ஸ் தமிழ் சேனலில் புதிய சீரியலில் நடிக்கிறார்.
புதுமையான மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக பெரிதும் எதிர்பார்க்கப்படும் அபி டெய்லரின் இரண்டாவது ப்ரோமோவை வெளியிட்டது. இதில், புகழ்பெற்ற பிரபல நகைச்சுவை நடிகரான படவா கோபி முக்கிய கதாபாத்திரத்தில் களமிறக்கியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அபி டெய்லர் சீரியலில் அபிராமியாக ரேஷ்மா முரளிதரன் நடித்துள்ளார். அவரது தந்தையாக சுந்தரமூர்த்தி என்ற பெயரில் நகைச்சுவை நடிகர்
படவா கோபி நடிக்கிறார். மேலும் அந்த ப்ரோமோவில் அபிராமியின் தங்கையாக
ஆனந்தி என்ற பெயரில் நடிக்கும் ஜெயஸ்ரீ மற்றும் அரவிந்த் என்ற பெயரில் தம்பியாக நடிக்கும் சஞ்சய் ராஜா ஆகியோரும் இடம் பெற்றிருக்கிறார்கள். பார்வையாளர்களை சிந்திக்க வைத்து அவர்களை கவரும் விதமாக அபி டெய்லரின் 2-வது ப்ரோமோ எடுக்கப்பட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்