முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் கைது… டிக்டாக் சூர்யா தேவி புகாரில் போலீசார் நடவடிக்கை

சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் கைது… டிக்டாக் சூர்யா தேவி புகாரில் போலீசார் நடவடிக்கை

நாஞ்சில் விஜயன் - சூர்யா தேவி

நாஞ்சில் விஜயன் - சூர்யா தேவி

விஜயன் மீது கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

யூடியூபர் சூர்யா தேவியை தாக்கியதாக கொடுக்கப்பட்ட பழைய வழக்கில் தற்போது வளசரவாக்கம் போலீசாரால் நடிகர் நாஞ்சில் விஜயன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சிகளில் இடம்பெற்று சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நாஞ்சில் விஜயன். இவர் தனக்கென யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

நாஞ்சில் விஜயனும் டிக்டாக் பிரபலமாக அறியப்படும் சூர்யா தேவியும் கடந்த 7 ஆண்டுகள் நண்பர்களாக பழகி உள்ளனர். இதற்கிடையே நடிகை வனிதா விஜய குமார் கடந்த 2020  ஜூன் மாதம் 27-ம் தேதி விஷூவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர்பால் என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார்.

தன்னிடம் சட்டப்படி விவாகரத்து பெறாமல் வனிதா விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டதாக பீட்டர்பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் போலீசில் புகாரளித்தார்.

நடிகை கியாரா அத்வானியின் அசத்தல் ஃபோட்டோஸ்!

இதையடுத்து ஹெலனுக்கு ஆதரவாக யூடியூபர் சூர்யா தேவி, லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தர் ஆகியோர் இணைய ஊடகங்களில் பேட்டியளித்தனர். இதனால் இந்த விவகாரம் சர்ச்சையானது.

அந்த வகையில் வனிதா விஜயகுமாரின் 3ஆவது திருமணம் குறித்து அவதூறு பரப்பியதாக சூர்யா தேவி மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. வனிதா விஜயகுமாருக்கும், சூர்யா தேவிக்கும் யூடியூப் முலம் பரஸ்பரம் குற்றச்சாட்டு பதிவு செய்து வெளியிட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..

இதில் நாஞ்சில் விஜயன் வனிதா விஜயகுமாருக்கு ஆதரவாக செயல்பட்டதால், நாஞ்சில் விஜயன் வீட்டுக்கு சூர்யா தேவி சென்றபோது, அவரை விஜயன் தாக்கியதாக கடந்த 2020 ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் வளசரவாக்கம் போலீசார் நாஞ்சில் விஜயன் மீது கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் அவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

First published:

Tags: Crime News, Television