Home /News /entertainment /

ரசிகையின் மன அழுத்தம் மெசேஜ்.. குக் வித் கோமாளி குரேஷி கொடுத்த ரிப்ளை!

ரசிகையின் மன அழுத்தம் மெசேஜ்.. குக் வித் கோமாளி குரேஷி கொடுத்த ரிப்ளை!

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி எபிசோடை  பார்த்த பெண் ரசிகை ஒருவர் குரேஷிக்கு இன்ஸ்டாவில் மேசேஜ் செய்துள்ளார்.

    குக் வித் கோமாளி புகழ் குரேஷிக்கு ரசிகை ஒருவர் இன்ஸ்டாவில் மேசேஜ் அனுப்பியுள்ளார். அதற்கு குரேஷி கொடுத்த பதில் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

    குக் வித் கோமாளி முதல் மற்றும் இரண்டாவது சீசனுக்கு கிடைத்த ஏகபோக வரவேற்பை அடுத்து தற்போது மூன்றாவது சீசன் கலக்கலாக ஒளிபரப்பாகி வருகிறது. குக் வித் கோமாளி சீசன் 3 அம்மு அமிராமி, கிரேஸ் கருணாஸ், தர்ஷன், பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினி ஹரிப்பிரியன், சந்தோஷ் பிரதாப், ஸ்ருத்திகா அர்ஜுன், வித்யுலேகா ராமன், அந்தோணி தாஸ், ராகுல் தாத்தா ஆகியோருடன் தொடங்கியது. பல கட்டங்களை கடந்து இப்போது நிகழ்ச்சியில் தர்ஷன், அம்மு அபிராமி, ஸ்ருதிக்கா, வித்யுலேகா, ஆகியோர் உள்ளனர். கூடிய விரைவில் குக் வித் கோமாளி ஃபைனல்ஸ் நடைபெறவுள்ளது.

    கோவிலுக்கு வந்த இடத்தில் சீரியல் கதை.. சினேகா - சங்கீதா - சரண்யா கொடுத்த ஷாக்!

    அதே போல் இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளாக பாலா, குரேஷி, மணிமேகலை, சிவாங்கி, மூக்குத்தி முருகன், சுனிதா, அதிர்ச்சி அருண், சக்தி ராஜ், பரத் கே ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதில் புகழ் இல்லாத குறையை குரேஷி தீர்த்து வருகிறார். இந்த சீசன் மூலம் குரேஷிக்கு பயங்கர ஃபேன்ஸ் கூட்டம் உருவாகியுள்ளது. அதிலும் குறிப்பாக ஸ்ருதிக்கா போல் கெட்டப் போட்டு குரேஷி கலக்கிய எபிசோடு டி. ஆர்.பியில் கலக்கியது.



    இந்த எபிசோடு வீடியோக்களும் இணையத்தில் ஹிட் அடித்தது. ஸ்ருதிக்கா போலவே டிரெஸ் செய்து கொண்டு பேசி, ஆடி கலக்கினார் குரேஷி. இந்த எபிசோடை  பார்த்த பெண் ரசிகை ஒருவர் குரேஷிக்கு இன்ஸ்டாவில் மேசேஜ் செய்துள்ளார். அதில் குரேஷி ,ஸ்ருதிகா போல் கெட்டப் போட்ட எபிசோடை 100 முறைக்கு மேல் பார்த்ததாகவும் கடந்த சில தினங்களாக மன அழுத்தத்தில்  இருந்த தன்னை இந்த எபிசோடு அப்படியே மாற்றி விட்டதாக தெரிவித்து நன்றியும் கூறி தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளார்.

    ரசிகையின் இந்த மெசேஜை அப்படியே ஷேர் செய்த குரேஷி , அதில் ஸ்ருதிக்காவை டேக் செய்து  அனைத்து புகழும், ஸ்ருதிக்காவை சேரும் எனவும் ரிப்ளை கொடுத்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Cook With Comali Season 2, Vijay tv

    அடுத்த செய்தி