அம்மன் சீரியல் நடிகர்கள் பட்டியலில் புதிதாக இணைந்துள்ள பிரபல நடிகர்.!

சீரியல் நடிகர் ராஜசேகர்

நடிகர் ராஜசேகர் தமிழ் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட துறையில் பணியாற்றி வருகிறார். இவர் நடித்துள்ள ஓரிரு திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதற்காக காத்திருக்கிறார்.

  • Share this:
கலர்ஸ் தமிழ் சேனலில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி ரசிகர்களை ஈர்த்து வரும் நிலையில், திங்கள் முதல் சனி வரை இரவு 7:30 மணி முதல் 8.30 வரை 1 மணி நேரம் ஒளிபரப்பாகி வருகிறது அம்மன் பக்தி சீரியல். சமீபத்தில் 600 எபிசோட்களை கடந்த இந்த சீரியல் சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிநடை போட்டு கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த சீரியலில் புதிதாக இணைந்துள்ளார் சீரியல் நடிகர் ராஜசேகர். தமிழ் டிவி சேனல்களில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் அம்மன் சீரியலுக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் பெருகி கொண்டே இருக்கின்றனர். பல சேனல்களில் காதல், பாசம், அதிரடி கலந்த பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில் தாய்மார்கள், அம்மன் சீரியல் மூலம் பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை தன் பக்கம் ஈர்த்துள்ளது கலர்ஸ் தமிழ்.

Also Read : சினமாவில் நடிகர், நடிகையாக ஆசையா? நடிக்க வாய்ப்பு தரும் பிரபல தயாரிப்பு நிறுவனம்!

இதனால் கலர்ஸ் தமிழின் டிஆர்பி ரேட்டிங் இந்த சீரியல் டைமிங்கின் போது உச்சத்தில் இருக்கிறது. இதனால் இந்த சீரியலை நாளுக்கு நாள் விறுவிறுப்பாக கொண்டு செல்வதில் கவனம் செலுத்தி வருகிறது தயாரிப்பு நிர்வாகமும், கலர்ஸ் தமிழ் நிர்வாகமும். ரவி பிரியன் இயக்கத்தில் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் இந்த பக்தி சீரியலில் சக்தி என்ற முக்கிய கேரக்டரில் பவித்ரா கவுடா மற்றும் ஈஸ்வர் என்ற கேரக்டரில் நடிகர் அமல்ஜித், ஷாரதாவாக ஜெனிபர், தாமோதரனாக ஹரிஷங்கர் நாராயணன், மந்த்ராவாக நடிகை சந்திரிகா, காந்தாரியாக சுபா ரக்ஷா என முக்கிய கதாபாத்திரங்களில் பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது அரவான் என்ற கேரக்டரில் நடிக்க சீரியல் நடிகர் ராஜசேகர் அம்மன் சீரியலில் புதிதாக இணைந்துள்ளார்.



 




View this post on Instagram





 

A post shared by Sekar raja (@sekar.muthu.3)






அரவான் வேடத்தில் ராஜசேகர் நடித்த அம்மன் சீரியல் காட்சிகள் நேற்று முதல் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்நிலையில் தான் அம்மன் சீரியலில் இணைந்துள்ளது பற்றி நடிகர் ராஜசேகர் இன்ஸ்டாவில் ஒரு சிறிய டீஸர் வீடியோ ஒன்றை போஸ்ட் செய்துள்ளார்.கதையின் படி, அரவானின் நாட்கள் எண்ணப்பட்டுள்ளன. சக்தியை (பவித்ரா அரவிந்த்) பழிவாங்க மந்த்ரா அரவான் உட்பட பலரின் உதவியை நாடுகிறாள். இதைத் தொடர்ந்து, என்ன நடக்கும் என்பதே அடுத்தடுத்த திருப்பமாக கதையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Also Read : என்னை திருமணம் செய்துகொள்வீர்களா? குதர்கமான கேள்வி கேட்ட ரசிகர்க்கு மீனா சொன்ன சுவாரஸ்ய பதில்

நடிகர் ராஜசேகர் தமிழ் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட துறையில் பணியாற்றி வருகிறார். இவர் நடித்துள்ள ஓரிரு திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதற்காக காத்திருக்கிறார். தற்போது சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் அபியும் நானும், சூர்யவம்சம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார். பாசமலர், மோகினி, தெய்வமகள், ரோமாபுரி பாண்டியன், வம்சம் உள்ளிட்ட சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். பேரழகி சீரியலில் மோகன் என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: