ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வெல்லும் திறமை ஃபைனல்ஸ்.. வெற்றி வாகை சூடியது யார் தெரியுமா?

வெல்லும் திறமை ஃபைனல்ஸ்.. வெற்றி வாகை சூடியது யார் தெரியுமா?

கலர்ஸ் தமிழ்

கலர்ஸ் தமிழ்

துரோணா அகாடமி பார்வையாளர்களை மயக்கி மயக்கியது மற்றுமின்றி ரூ 2,50,000 ரொக்கப் பரிசுடன் தங்கக் கோப்பையை வென்றது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வெல்லும் திறமை மாபெரும் இறுதிப்போட்டியில் வெற்றிவாகை சூடியது துரோணா அகாடமி குழு. 

  தென்னிந்தியாவின் தலைசிறந்த திறமையாளர்களை அடையாளம் காணும், Viacom 18 இன் தமிழ் என்டர்டெயின்மென்ட் சேனலான கலர்ஸ் தமிழ், அதன் பிரபலமான ரியாலிட்டி ஷோவான வெல்லும் திறமை நிகழ்ச்சியை அக்டோபர் 30 ஆம் தேதி ஞாயிறன்று மாபெரும் இறுதிப்போட்டி நிகழ்வோடு நிறைவு செய்தது. ஒரு கண்ணாடி மற்றும் பாட்டில் வைத்து மல்லர்கம்பம் காட்சியைக் காட்டி அனைவரையும் இருக்கையின் நுனிக்கு கொண்டு வந்த துரோணா அகாடமி பார்வையாளர்களை மயக்கி மயக்கியது மற்றுமின்றி ரூ 2,50,000 ரொக்கப் பரிசுடன் தங்கக் கோப்பையை வென்றது.

  colors tamil vellum thiramai finals title winner of vellum thiramai reality show 1st runner up with cash prize
  முதல் ரன்னர் அப் பெற்ற குழு

  பிரபலமான நடனக் குழுவான ஜே டி சி தங்கள் நேர்த்தியான நடன அசைவுகளால் பார்வையாளர்களின் இதயங்களை வென்று ₹1,25,000 ரொக்கப் பரிசுடன் நிகழ்ச்சியின் இரண்டாவது இடத்தையும், ஏணி யோகா மூலம் பார்வையாளர்களை திகைக்க வைத்த யோவா யோகா அகாடமி ₹75,000 ரொக்கப் பரிசுடன் நிகழ்ச்சியின் மூன்றாவது இடத்தையும் வென்றனர்.

  நடுவர்களாக பங்கேற்ற பிரபல நடிகை நிக்கி கல்ராணி, பிரபல நடிகரும் தற்காப்பு கலை நிபுணருமான ஷிஹான் ஹுசைனி மற்றும் பிரபல நடன இயக்குனரான ஸ்ரீதர் ஆகியோருக்கு இந்த இறுதிப்போட்டி கடும் சவாலானதாகவே இருந்தது. இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து குழுவினருமே அவர்களது திறமைகளை கொண்டு அனைவரையுமே ஈர்த்தன.

  colors tamil vellum thiramai finals title winner of vellum thiramai reality show 1st runner up with cash prize
  2வது இடம் பிடித்த குழு

  பிக் பாஸ் ஆயிஷா ஏற்கெனவே திருமணம் ஆனவர்.. போட்டுடைத்த முன்னாள் காதலன்!

  இதுகுறித்து நடிகை நிக்கி கல்ராணி பேசுகையில், “. துரோணா அகாடமி வெற்றி பட்டத்தை வென்றதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன், அவர்களின் திறைமைக்கு அங்கீகாரமாக இந்த வெற்றி கிடைத்தது, இருப்பினும் இங்குள்ள ஒவ்வொரு திறமையும் தனித்துவமானது என்று நான் உணர்கிறேன், மேலும் அவர்கள் ஒவ்வொருவரும் ஏற்கனவே தங்கள் சொந்த துறையில் வெற்றி பெற்றவர்கள். கலர்ஸ் தமிழ் சேனலானது, வெல்லும் திறமை மூலம் திறமையான வல்லுனர்களின் தகுதிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர முயற்சித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.

  இது குறித்து நடிகர் ஷிஹான் ஹுசைனி கூறுகையில், “வெல்லும் திறமையின் பயணம் ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி மாதிரி. இந்த நிகழ்ச்சியின் நடுவராக இருந்து இந்த இளம் பிரகாசமான போட்டியாளர்கள் தங்கள் கைவினைத்திறனை மேம்படுத்துவதைக் கண்டது நம்பமுடியாத அனுபவமாக இருந்தது. துரோணா அகாடமி மற்றும் இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு நான் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம், அவர்கள் தங்கள் திறமையை உலகிற்கு முன் வைக்க மேலும் மேலும் வாய்ப்புகளைப் பெறுவார்கள் என்றும் நான் நம்புகிறேன். " என்றார்.

  கொட்டும் மழையில் கோபிநாத் செய்த காரியம்... மனுஷன் பயந்துட்டாரு!

  மேலும், நடன இயக்குனர் ஸ்ரீதர் பேசுகையில், “திறமையை தவிர்த்து பலதரப்பட்ட கலை வடிவங்களை கொண்டு வரும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருப்பது உண்மையிலேயே ஒரு பாக்கியம். முழுப் பயணத்திலும் பல தடைகளைக் கடந்து வந்து எங்களுக்கு அவர்களின் திறைமைகளை வெளிப்படுத்திய கலைஞர்களைப் பார்ப்பது ஒரு அற்புதமான பயணமாகும். தங்களின் அதீத செயல்களால் நம்மை எப்போதும் வியப்பில் ஆழ்த்திய நிகழ்ச்சியின் வெற்றியாளர்களுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இருப்பினும் வெற்றியாளர்கள் வெற்றி பெற்ற போதிலும், இங்குள்ள அனைவரும் சம நிலையில் இருந்ததாக நான் உணர்கிறேன், மேலும் இறுதிப் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமான தேர்வாக இருந்தது.

  வேவ் மீடியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், கிரியேட்டிவ் டைரக்டர்-தக்ஷ்னா மூர்த்தியுடன் ஜூன் மாதம் தொடங்கிய இந்நிகழ்ச்சி, இறுதியில் ஐந்து போட்டியாளர்களைக் கொண்டு,பிரமாண்டமான மேடை, பல்வேறு திறமைகள் கொண்ட பலதரப்பட்ட போட்டியாளர்கள், சிறந்த நடுவர்கள், ஆர்வமுள்ள தொகுத்து வழங்குபவர்கள் என நிறைய அம்சங்களை கொண்டு தமிழ் பார்வையாளர்கள் மத்தியில் இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு வழிவகுத்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், Television