Home /News /entertainment /

கலர்ஸ் தமிழின் புதிய படைப்பு ‘ஜமீலா’.. சீரியல் உலகில் ஒரு புதிய முயற்சி!

கலர்ஸ் தமிழின் புதிய படைப்பு ‘ஜமீலா’.. சீரியல் உலகில் ஒரு புதிய முயற்சி!

கலர்ஸ் தமிழ் சீரியல்

கலர்ஸ் தமிழ் சீரியல்

ஜமீலா சீரியல் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பாகும்

    சின்னத்திரையில் புது முயற்சிகளை மேற்கொண்டு வரும் கலர்ஸ் தமிழ், அடுத்து சீரியல் உலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட ‘ஜமீலா’ என்ற புத்தம் புதிய தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது.

    சின்னத்திரையை பொறுத்தவரையில் சீரியல்கள் முக்கிய ரோலை பிளே செய்கின்றன. காலை தொடங்கி இரவு வரை ஒளிப்பரப்பாகும் சீரியல்களை இல்லத்தரசிகள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி பார்க்கின்றனர். முன்பெல்லாம் சீரியல்கள் என்றாலே அது பெண்களுக்கானதாக இருந்தது. ஆனால் இப்போது இளைஞர்களும் சீரியல்களை விரும்பி பார்க்க தொடங்கி விட்டனர். அவர்களை கவரும் வகையில் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இப்போது சீரியல்கள் வெவ்வேறு கான்செப்டில் டெலிகாஸ்ட் செய்யப்படுகின்றன.

    அந்த வகையில், கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இதில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் மக்கள் மத்தியில்  நல்ல வரவேற்பு உண்டு. அம்மன், அபி டெய்லர், வள்ளி திருமணம், ஜில்லுன்னு ஒரு காதல், கண்ட நாள் முதல் என கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் அனைத்து சீரியல்களும் டி.ஆர்.பி ரேட்டிங்கில் கலக்கி வருகின்றன. இந்நிலையில் இந்த லிஸ்டில் புதியதாக இணையவுள்ள சீரியல்  ஜமீலா - சுதந்திர காற்று இங்கும் கொஞ்சம் வீசட்டும்.

    ரோபோ ஷங்கர் கையில் கொடுக்கப்பட்ட பெரிய பொறுப்பு.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

    இந்த புத்தம் புதிய சீரியலின் டீசர் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. டீசரில் முஸ்லீம் பெண் ஒருவர் புர்கா அணிந்து கொண்டு நிற்கிறார். அவரின் கண் மட்டுமே தெரிகிறது. டீசரை பார்த்ததும்  யார் இந்த ஜமீலா? என்ற கேள்வி எழாமல் இல்லை. சின்னத்திரையில் புதிய முயற்சியாக முழுக்க முழுக்க முஸ்லீம் பின்னணியை கொண்டு ஜமீலா சீரியல் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



     




    View this post on Instagram





     

    A post shared by Colors Tamil (@colorstvtamil)






    இந்த சீரியல் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜமீலா சீரியலில் லீட் ரோலில் நடிக்கும் நடிகர்,நடிகை குறித்த தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என தெரிகிறது. அதே போல் சீரியலின் டைட்டில் மற்றும் டீசரை வைத்து இது ஹீரோயின் லீட் சீரியல் என்பது தெரிய வருகிறது. ஜமீலாவை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் தான் சீரியலின் ஒன்லைனாக இருக்கும் என ரசிகர்கள் கணித்துள்ளனர். அதே போல் ஜமீலா ரோலில் நடித்து இருப்பவர் இதயத்தை திருடாதே ஹீமா பிந்துவாக இருக்கலாம் எனவும் ரசிகர்கள் கெஸ் செய்துள்ளனர். காரணம், இதயத்தை திருடாதே சீரியலுக்கு பின்பு அவர் புத்தம் புதிய சீரியலில் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது.அது ஜமீலாவாக தான் இருக்கும் என ரசிகர்கள் நினைக்கின்றனர்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், Television, TV Serial

    அடுத்த செய்தி