கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் உள்ளத்தை அள்ளித்தா சீரியல் அடுத்தடுத்த திருப்பங்களை நோக்கி நகர்கிறது.
குடும்பத்திற்காக உழைத்து, சம்பாதித்து காப்பாற்றும் முதன்மை நபராக ஆண்களே இருக்கின்றனர் என்ற சமூக கண்ணோட்டங்களை மக்கள் மனதிலிருந்து மாற்றுகின்ற ஒரு முயற்சியாக, உள்ளத்தை அள்ளித்தா எனும் நெடுத்தொடரை டெலிகாஸ்ட் செய்து வருகிறது கலர்ஸ் தமிழ் சேனல்.
இக்கதை தமிழ் என்ற ஆட்டோ ராணியின் வாழ்க்கையைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கிறது. ஆட்டோ ஓட்டுனரான தமிழ் என்ற இந்த இளம்பெண், தனது பணியின் மூலம் குடும்பத்தை காப்பாற்றவும், முன்னேற்றவும் கடுமையாக உழைக்கின்ற அதே வேளையில், அதற்காக தனது உறவுகளை விட்டுக்கொடுக்கவோ, காயப்படுத்தவோ தயாராக இல்லை. கடமையுணர்வும், தன்மான உணர்வும் கொண்ட இந்த இளம்பெண்ணின் வாழ்க்கையைச் சுற்றி இரு வெவ்வேறு உலகங்கள் மற்றும் கருத்தியல்களின் முரண்களையும், மோதல்களையும் விவரிக்கிறது.
தற்போது, ஹீரோயின் தமிழின் அக்கா, காவ்யாவின் திருமணம் நெருங்கிவிட்டதால், முழு குடும்பமும் பணத்திற்கு சிரமப்படுகின்றனர், ஆனால் காவ்யாவோ தமிழின் ஆட்டோவை விற்க திட்டமிடுகிறாள். ஆனால் காவ்யாவுக்கு ஷாப்பிங் செய்ய, பணத்திற்காக தமிழ் கடன் வாங்குகிறார். பின்னர் சகோதரிகள் ஷாப்பிங்கிற்கு செல்கிறார்கள். தமிழின் அன்பை காவ்யா புரிந்துக் கொள்வாளா என இனி தெரிய வரும்.
பின்னர் ஒரு குடிகாரன் தமிழுக்கு பிரச்சனையை ஏற்படுத்துகிறான், இருப்பினும் அவள் சக ஆட்டோ டிரைவரால் காப்பாற்றப்படுகிறாள். காவ்யா தன் படத்தை தவறுதலாக ஆதித்யாவுக்கு அனுப்புகிறாள்.
திருமணப் புடவையில் காவ்யாவைப் பார்த்த ஆதித்யா உற்சாகமாக இருக்கிறான். இருப்பினும் சேலை படத்தைப் பார்த்த சந்தோஷ் எதுவும் பதிலளிக்காததால் வருத்தத்தில் இருக்கிறாள் காவ்யா.
பிரபல நடிகை தனது கசின் சிஸ்டர் என்பதை 40 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறிந்த வனிதா விஜயகுமார்!
எதிர்காலத்தில் தன்னையும் தமிழையும் நன்றாக கவனித்துக்கொள்வதாக காவ்யா தன் தாயிடம் பொய் சொல்கிறாள். இதற்கிடையில், அவள் திருமணத்திற்கு பணம் குவிக்க இரவிலும் கடினமாக உழைக்கிறாள் தமிழ். அடுத்து என்ன நடக்கும் என்பதை தெரிந்துக் கொள்ள கலர்ஸ் தமிழ் சேனலில் உள்ளத்தை அள்ளித்தா சீரியலை தொடர்ந்து பாருங்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.