Colors Tamil: 'அவள்’ படத்துடன் வார இறுதியைக் கொண்டாடுங்கள்!

Colors Tamil: 'அவள்’ படத்துடன் வார இறுதியைக் கொண்டாடுங்கள்!

அவள் திரைப்படம்

விமர்சன ரீதியாக அனைவரிடமும் பாராட்டைப்பெற்ற ‘அவள்’ பல்வேறு திருப்பங்கள் நிறைந்த திகில் திரைப்படம்.

  • Share this:
    வார இறுதி நாளில் பார்வையாளர்களை உற்சாகப்படுத்த கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, ‘அவள்’ திரைப்படத்தை ஒளிபரப்புகிறது.

    முன்னணி பொழுது போக்கு சேனலான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. அதேபோல் இந்த வார இறுதியிலும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்த சித்தார்த் – ஆண்ட்ரியா நடித்த திகில் திரைப்படமான ‘அவள்’ படத்தை 14-ம் தேதி மாலை 4 மணிக்கு ஒளிபரப்புகிறது.

    விமர்சன ரீதியாக அனைவரிடமும் பாராட்டைப்பெற்ற ‘அவள்’ பல்வேறு திருப்பங்கள் நிறைந்த திகில் திரைப்படம். ஒவ்வொரு காட்சியும் உங்களை இருக்கையின் விளிம்பிற்கு கொண்டு செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தப் படத்தை மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். நிப்பான் பெயிண்ட்ஸ் உடன் இணைந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பவிருக்கிறது.

    கடந்த 2017-ம் ஆண்டு தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது ‘அவள்’. இந்த படத்தின் ஒளிப்பதிவும், இசையும் அனைவராலும் பாராட்டப்பட்டது. இதன் கதை ஒரு இளம் தம்பதியின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை சுற்றி அமைந்துள்ளது. நடிகர் சித்தார்த் மூளை அறுவை சிகிச்சை நிபுணராக டாக்டர் கிருஷ்ணாவாகவும் அவரது இளம் மனைவியாக லட்சுமி என்ற பெயரில் ஆண்ட்ரியாவும் நடித்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: