முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / உஷா - ஆதி ரொமான்ஸ்... கோலங்கள் சீரியலில் இனி வருவது இதுதான்!

உஷா - ஆதி ரொமான்ஸ்... கோலங்கள் சீரியலில் இனி வருவது இதுதான்!

கோலங்கள் சீரியல்

கோலங்கள் சீரியல்

அபி கட்டட வேலை செய்யும் இடத்தில் கோர்ட் அதிகாரிகள் வந்து மண் பரிசோதனை செய்கிறார்கள்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்பாகி வரும் கோலங்கள் சீரியலில் அடுத்தடுத்த அத்தியாயங்களை சுருக்கமாகக் குறிப்பிடுகிறோம்.

மனோ, ஆதி வீட்டில் வேலை பார்த்த விஷயம் அபிக்கு தெரிய வருகிறது. அங்குச்சாமி சென்னை வருவதாக தந்தி அனுப்பியிருப்பதை சாந்தி பெற்றுக் கொள்கிறாள். அந்த தகவல் தொல்காப்பியனுக்கு தெரிய வருமா? அங்குச்சாமி வருவதை விரும்பாத சாந்தி தன் மனக்குழப்பத்தை வெளிப்படையாக தொல்காப்பியனிடம் சொல்வாளா?

சாந்தி தற்கொலை செய்து கொள்ள திட்டமிடுகிறாள். தற்செயலாக அங்கு அபி வர அவள் அதை ஒத்தி வைக்கிறாள். தொல்காப்பியன் அங்குச்சாமியை தேடிவிட்டு, அவன் இல்லாமல் வீட்டுக்கு வருகிறான். ஆதியின் பாட்டி, மனோ செய்த உதவிக்காக அவன் அம்மாவிடம் பணத்தை உதவியாக வைத்துக் கொள்ள கொடுக்கிறாள். அதை அபி வீட்டில் யாரும் வாங்க மறுக்கிறார்கள். அபி, ஆதியின் பாட்டிக்கு எடுத்து சொல்லி புரிய வைப்பாளா?

ஆதித்யா உஷாவை தன்னுடன் பெங்களூர் அழைத்துச் செல்கிறான். உஷா ஆதியிடம் மனம்விட்டு பேசுகிறாள். அபியை வேலை செய்யவிடாமல் ஸ்டே ஆர்டர் வாங்குவதற்காக ஆதியின் சார்பில் சுஜாதா கோர்ட்டுக்கு வருகிறாள். அபிக்கு சாதகமாக கோர்ட்டில் தீர்ப்பு கிடைக்குமா?

ஆதிக்கு சாதகமாகவும் அபிக்கு எதிராகவும் கோர்ட்டில் ஸ்டே ஆர்டர் கிடைத்துவிடுகிறது. இதனால் அபி மனம் உடைகிறாள். அபி ஆதிக்கு போன் செய்து இந்த பிஸ்னஸை சிறப்பாக செய்து ஆதியை தோற்கடிப்பேன் என சவால் விடுகிறாள் . ஆதி அபியிடம் தன் கோபத்தை காட்டுவானா?

உஷாவின் பெற்றோர் வீட்டுக்கு ஆதி, உஷாவை அழைத்துச் செல்கிறான். அங்கு உஷாவுக்கும் அவள் அப்பாவுக்கும் இருந்த நெடுநாள் மனஸ்தாபம் விலகி இருவரும் இணைந்துவிடுகிறார்கள். அபி தன் கன்ஸ்ட்ரக்‌ஷன் வேலை தடைபடாமல் இருக்க சட்டப்படி செய்ய வேண்டிய அடுத்த முயற்சியில் ஈடுபடுகிறாள். ஆனால் சுஜாதா அதிலும் தலையிடுகிறாள்.

ரஞ்சனி பாஸ்கருக்கு புதிய வீடு வாங்கியிருப்பதாகவும் உடனடியாக அங்கு குடியேறலாம் என்றும் அவன் குடும்பத்தாரிடம் சொல்கிறாள். அபி கட்டட வேலை செய்யும் இடத்தில் கோர்ட் அதிகாரிகள் வந்து மண் பரிசோதனை செய்கிறார்கள். ஏன் எதற்கு என அங்கு வந்து கேள்வி கேட்கும் உஷாவிடம் ஆதிதான் காரணம் என அபி உண்மையை சொல்வாளா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ்