Colors Tamil: திரை நட்சத்திரங்கள் கலந்துக் கொள்ளும் கலர்ஸ் சண்டே கொண்டாட்டம்!

கலர்ஸ் தமிழ்

கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் நிகழ்ச்சியில் திரைப்பட நட்சத்திரங்களுடன் கலர்ஸ் தமிழ் நட்சத்திரங்கள் இந்த வாரம் மோதுகின்றனர். இதனை ஞாயிறு ஏப்ரல் 18 இரவு 7 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கண்டு களியுங்கள்.

  • Share this:
    கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் நிகழ்ச்சியில் திரைப்பட நட்சத்திரங்களுடன் கலர்ஸ் தமிழ் நட்சத்திரங்கள் இந்த வாரம் மோதுகின்றனர். இதனை ஞாயிறு ஏப்ரல் 18 இரவு 7 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கண்டு களியுங்கள்.

    கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், ரியால்டி ஷோவான கலர்ஸ் சண்டே கொண்டாட்டம், இந்த ஞாயிற்றுக் கிழமை பொழுதுபோக்கின் உச்சத்தை எட்டப்போகிறது. திரைப்பட நட்சத்திரங்களுடன், கலர்ஸ் தமிழ் நட்சத்திரங்கள் நேருக்கு நேர் மோதும் சுவாரஸ்யம் நிறைந்த போட்டியாக இந்நிகழ்ச்சி இருக்கும். நடிகர்களின் வேடிக்கையும், கேளிக்கை நிறைந்த பேச்சுக்களும், பரபரப்பான விளையாட்டுக்களும் பார்வையாளர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தவிருப்பதால் வரும் ஞாயிறு 2021 ஏப்ரல் 18 இரவு 7:00 மணிக்கு கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் (CSK) நிகழ்ச்சியை கட்டாயம் பார்த்து ரசியுங்கள்.

    தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் கதாநாயகிகளான உபாசனா ஆர்சி, ரிஷா ஜேகப், அஷ்மிதா சிங், ஷாஷ்வி பாலா மற்றும் சாய் பிரியங்கா ரூத் ஆகியோர் அவர்களது பல்வேறு ஃபெர்பார்மன்ஸ் மூலம் பார்வையாளர்களை பரவசப்படுத்தவிருக்கின்றனர். அதே நேரத்தில் கலர்ஸ் தமிழ் அலைவரிசையின் நெடுந்தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் ஹிமா பிந்து, சோபனா, தர்ஷினி கௌடா, கீர்த்தனா மற்றும் சங்கீதா ஆகியோர் திரை நட்சத்திரங்களுடன் மோதுகின்றனர்.

    VJ அஞ்சனா ரங்கன் மற்றும் கமல் தண்டபாணி ஆகியோர் தொகுத்து வழங்கும் இந்த வாரத்தின் CSK எபிசோட், பல்வேறு விளையாட்டுக்களின் அற்புதமான கலவையாக இருக்கிறது. ஒவ்வொரு நட்சத்திரத்தின் அறிவையும் மற்றும் சமயோஜித திறனையும் பரிசோதிப்பதாக இந்த விளையாட்டுகள் இருக்கும்.

    கேளிக்கையும், வேடிக்கையும் நிறைந்த கலர்ஸ் தமிழ் கொண்டாட்டம் நிகழ்ச்சியை 2021 ஏப்ரல் 18 ஞாயிறு இரவு 7:00 மணிக்கு கண்டு ரசிக்க கலர்ஸ் தமிழ் அலைவரிசையை மறவாது டியூன் செய்யுங்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை கிடைக்கப்பெறுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: