கலர்ஸ் தமிழ் பஜன் சாம்ராட் மாபெரும் இறுதிப்போட்டி!

கலர்ஸ் தமிழ் பஜன் சாம்ராட் மாபெரும் இறுதிப்போட்டி!

பஜன் சாம்ராட்

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும், பஜன் சாம்ராட் நிகழ்ச்சியின் மாபெரும் இறுதிப்போட்டியை ஏப்ரல் 12 முதல், ஏப்ரல் 14 ஆம் தேதி வரை காலை 7.00 மணி முதல் பார்த்து மகிழும்.

 • Share this:
  கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும், பஜன் சாம்ராட் நிகழ்ச்சியின் மாபெரும் இறுதிப்போட்டியை ஏப்ரல் 12 முதல், ஏப்ரல் 14 ஆம் தேதி வரை காலை 7.00 மணி முதல் பார்த்து மகிழும்.

  கலர்ஸ் தமிழ், அதன் தெய்வீக ரியாலிட்டி நிகழ்ச்சியான பஜன் சாம்ராட்டின் மாபெரும் இறுதிப்போட்டியை ஒளிபரப்ப தயாராக இருக்கிறது. இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கும் சிறந்த நான்கு குழுக்கள், கௌரவம் மிக்க வெற்றி விருதை கைவசப்படுத்திக்கொள்ள தங்களது இசைத்திறனை சிறப்பாக வெளிப்படுத்த முயல்கிறார்கள். இந்நிகழ்ச்சியானது, கண்களுக்கு மட்டுமல்ல, செவிகளுக்கும், மனங்களுக்கும் இனிய விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.

  புகழ்பெற்ற கர்நாடக இசை பாடகர்களான டாக்டர். ஆர். கணேஷ் மற்றும் திருமதி மஹதி ஆகியோர் நடுவர்களாக இந்த இசை நிகழ்ச்சியை வழிநடத்தும் நிலையில், 2021 ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 14 வரை காலை 7.00 மணிக்கு ஒளிபரப்பாகும் பஜன் சாம்ராட்ஸ் நிகழ்ச்சியின் மாபெரும் இறுதிப்போட்டியை தவறாமல் கண்டு களியுங்கள்.

  பஜன் சாம்ராட் விருதை வெல்வதற்கான வாய்ப்பாக இந்த இறுதிப்போட்டி இருப்பதனால், இதில் பங்கேற்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 4 குழுக்களும் அவர்களது அனுபவம், செயல்திறன் அனைத்தையும் பயன்படுத்தி, கர்நாடக இசையின் அற்புதமான நுணுக்கங்கள் மற்றும் சங்கதிகளை இன்னும் நேர்த்தியாக வெளிப்படுத்துவார்கள். கடுமையான இந்த போட்டி, இறுதி நிலையை நெருங்கியிருப்பதால் இந்த வார எபிசோடுகள் பார்வையாளர்களுக்கு ஆத்மார்த்தமான உன்னத அனுபவத்தை வழங்குவது நிச்சயம்.

  பிரபல கர்நாடக இசை விற்பன்னர்களான டாக்டர். ஆர். கணேஷ் மற்றும் திருமதி. மஹதி ஆகியோரை நடுவர்களாக கொண்ட இந்த இசை நிகழ்ச்சியில் ஶ்ரீவித்யவாணி சங்கீத வித்யாலயா, மோகனம் அகாடமி ஆஃப் மியூசிக், ஶ்ரீ பக்த பிரேம பஜன் மண்டலி மற்றும் ஸ்மரனே சுகம் என்ற நான்கு பஜனை குழுக்கள், இறுதிப்போட்டியில் பங்கேற்க தகுதி உள்ளவர்களாக தேர்வு செய்யப்பட்டிருப்பதால், இறுதிப்போட்டி என்பதை உணர்ந்து, இதுவரை வெளிப்படுத்தப்படாத தங்கள் திறன்களை மிகச்சிறப்பான பாடல்களின் வழியாக நிரூபிப்பார்கள் என்பது நிச்சயம்.

  திறமைமிக்க விஜே. பிரியதர்ஷினி, சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கும் பஜன் சாம்ராட் மாபெரும் இறுதிப்போட்டியானது, மிக நுணுக்கமான கிருதிகள் உட்பட, அரிதாகப் பாடப்படும் பஜனைப் பாடல்களை கொண்டிருக்கும். இந்நிகழ்ச்சியைப் பார்க்கும் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களது இதயங்களை தெய்வீக மணமும், சுவையும் கலந்த ஆனந்தமான அனுபவத்தில் இந்நிகழ்ச்சி ஆழ்த்தும் என்பது நிச்சயம்.

  ஆகையால் திங்கள் முதல் புதன் வரை (ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 14 வரை) கலர்ஸ் தமிழின் பஜன் சாம்ராட் நிகழ்ச்சியை காலை 7.00 மணிக்கு கண்டு மகிழுங்கள்.

  கலர்ஸ் தமிழ், கீழ்க்கண்ட அனைத்து முன்னணி வலையமைப்புகளிலும் மற்றும் அனைத்து டிடிஹெச் தளங்களிலும் கிடைக்கிறது. சன் டைரக்ட் (CH NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO553).
  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: