Colors Tamil: கலர்ஸ் தமிழின் இந்த வார அட்டகாச நிகழ்ச்சிகள்!

Colors Tamil: கலர்ஸ் தமிழின் இந்த வார அட்டகாச நிகழ்ச்சிகள்!

கலர்ஸ் சண்டே கொண்டாட்டம்

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் மற்றும் பஜன் சாம்ராட் இந்த வாரம் உங்களுக்கு புதுவித அனுபவத்தைத் தரும்.

  • Share this:
    கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் மற்றும் பஜன் சாம்ராட் இந்த வாரம் உங்களுக்கு புதுவித அனுபவத்தைத் தரும்.

    பஜன் சாம்ராட் நிகழ்வில் கௌரவம் மிக்க விருதை வெல்வதற்கான கடுமையான போட்டி, மற்றும் மனதை ஈர்க்கும் வேறுபிற நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. நாளை (ஞாயிறு) இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாகும் கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் மற்றும் திங்கள் முதல் புதன் வரை காலை 7.00 மணிக்கு ஒளிபரப்பாகும் பஜன் சாம்ராட் நிகழ்ச்சிகளை தவறாமல் நீங்கள் பார்ப்பதற்கான காரணங்கள் நிறைய இருக்கின்றன.

    Colors Tamil TV Bhajan Samraat colors sunday kondattam shows
    பஜன் சாம்ராட்


    அதில் கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் நிகழ்ச்சியின் கீழ் ஒளிபரப்பாகவிருக்கும், அடுத்த எபிசோடு நிச்சயம் தவறவிடக்கூடாத ஒன்றாகும். சில்லுனு ஒரு காதல் மற்றும் அம்மன் நெடுந்தொடர்களின் முன்னணி நடிகர்கள், அவர்களது அற்புதமான நடிப்பு மற்றும் ஆர்வமூட்டும் விளையாட்டுகளால் பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுப்பது நிச்சயம். இந்த இரு நெடுந்தொடர்களின் நடிகர்கள், பவித்ரா கௌடாவை (அம்மன் கதாபாத்திரத்தில் நடிப்பவர்), அம்மனாக அலங்காரப்படுத்தி இந்த வார எபிசோடை கலகலப்பாக மாற்றவிருக்கிறார்கள்.

    இறுதிப் போட்டியை நெருங்கிக் கொண்டிருக்கும் பஜன் சாம்ராட் நிகழ்ச்சியில், கடுமையான போட்டி உண்டாகிறது. முதல் 7 இடங்களைப் பிடித்திருக்கும் குழுக்கள், தீவிர மோதலுக்கு தயாராக இருக்கின்றன. தங்களது தனித்துவமான முறையில் சிறப்பாக செயல்பட அனைத்து குழுக்களும் முயற்சிக்கும். இறுதிப்போட்டியில் பங்கேற்பதற்கான தகுதியை வெல்வதற்காக, உண்மையான திறனையும், மனஉறுதியையும் இந்த நிகழ்வு அழகாக காட்சிப்படுத்தும். கர்நாடக இசை நிபுணர்களான டாக்டர் கணேஷ் மற்றும் மஹதி வழங்கவிருக்கின்ற பஜனை பாடல்கள், மனதை சாந்தப்படுத்துகின்ற அமைதியான உலகிற்கு பார்வையாளர்களை கூட்டிச் செல்லும் என்பது நிச்சயம். பஜனைஆர்வலர்கள் மத்தியில் என்றும் மறக்க இயலாத பதிவுகளை இது விட்டுச்செல்லும் என்பதும் உறுதி.

    கலர்ஸ் தமிழ், கீழ்க்கண்ட அனைத்து முன்னணி வலையமைப்புகளிலும் மற்றும் அனைத்து டிடிஹெச் தளங்களிலும் கிடைக்கிறது. சன் டைரக்ட் (CH NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO553).



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: