Colors Tamil: பஜனை முதல் நடனம் வரை - உங்களை புத்துணர்வு பெறச் செய்யும் கலர்ஸ் தமிழ் நிகழ்ச்சிகள்!

Colors Tamil: பஜனை முதல் நடனம் வரை - உங்களை புத்துணர்வு பெறச் செய்யும் கலர்ஸ் தமிழ் நிகழ்ச்சிகள்!

கலர்ஸ் தமிழ் நிகழ்ச்சிகள்

அம்மன் தொடரை மேலும் போற்றும் விதமாக இந்த நிகழ்ச்சியில் பார்வை திறன் குறைந்த ரசிகர் ஒருவர் கடவுளைப் போற்றி பாடல் ஒன்று பாட இருக்கிறார்.

  • Share this:
இளமைமிக்க பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வரும் வாரத்தில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் பார்வையாளர்களை மகிழ்விக்க உள்ளது. கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் மற்றும் பஜன் சாம்ராட் ஆகிய 2 நிகழ்ச்சிகள் உங்களை மகிழ்விக்க வருகிறது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு ‘கலர்ஸ் சண்டே கொண்டாட்டம்’ நிகழ்ச்சியும் திங்கள் முதல் புதன் வரை மாலை 7 மணிக்கு பஜன் சாம்ராட் நிகழ்ச்சியும் ஒளிபரப்பாக உள்ளது.

கலர்ஸ் சண்டே கொண்டாட்டத்தில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் புகழ்பெற்ற தொடர்களான ’அம்மன்’ மற்றும் ’சில்லுனு ஒரு காதல்’ நிகழ்ச்சிகளின் நடிகர், நடிகைகள் கலந்துக் கொண்டு சிறப்பிக்கவிருக்கிறார்கள். இவர்கள் உற்சாகத்துடன் போட்டி போட்டுக் கொண்டு நடனம், பாட்டு, நடிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்த இருக்கிறார்கள். அம்மன் தொடரின் நடிகர்கள் விவாத நிகழ்ச்சியில் தங்கள் திறமையை திறம்பட வெளிப்படுத்தும் அதே வேளையில், சில்லுனு ஒரு காதல் தொடரின் நடிகர்கள் தங்கள் வசீகரம், புத்திசாலித்தனம் மற்றும் நகைச்சுவையுடன் பார்வையாளர்களின் இதயங்களை வெல்லத் தயாராக உள்ளனர்.

Simbu Manmadhan: மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் சிம்புவின் மன்மதன்!

அம்மன் தொடரை மேலும் போற்றும் விதமாக இந்த நிகழ்ச்சியில் பார்வை திறன் குறைந்த ரசிகர் ஒருவர் கடவுளைப் போற்றி பாடல் ஒன்று பாட இருக்கிறார். எனவே வரும் 20 மற்றும் 21-ம் தேதிகளில் மாலை 7 மணிக்கு உங்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் நிகழ்ச்சியை காணத்தவறாதீர்கள்.

திங்கள் முதல் புதன் வரை மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகும் பஜன் சாம்ராட், நிகழ்ச்சியில் பங்கேற்கும் அணிகள் போட்டியில் வெற்றி பெற்று பட்டத்தை வெல்வதற்காக தங்கள் திறமைகளை வெளிப்படுத்த தயாராக உள்ளனர். நாக்-அவுட் சுற்றில் பங்கேற்கும் அணிகள், பாடுவதற்கு மிகவும் சிரமமான பாடல்களை நுணுக்கமாக பாடி நடுவர்களிடம் தங்கள் தகுதியை நிரூபிக்க உள்ளனர். இறுதி சுற்றில் பங்கேற்க, பெண்கள் அடங்கிய 2 அணிகள் தயாராக இருக்கும் சூழலில், நாக் அவுட் சுற்றில் தகுதி பெறும் அணியும் அவர்களுடன் போட்டி போட உள்ளது. இதனால் இறுதிச் சுற்று மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். எனவே கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள்!



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: