ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

குழந்தைகளை குஷிப்படுத்த வரும் ‘ராதா கிருஷ்ணா’.. கலர்ஸ் தமிழில் கண்டு மகிழுங்கள்!

குழந்தைகளை குஷிப்படுத்த வரும் ‘ராதா கிருஷ்ணா’.. கலர்ஸ் தமிழில் கண்டு மகிழுங்கள்!

ராதா கிருஷ்ணா

ராதா கிருஷ்ணா

கலர்ஸ் தமிழில், ராதா கிருஷ்ணா திரைப்படம் உலகத் தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பாக உள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  உலக தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒரு சிறுவன் மற்றும் யானையின் உறவை அற்புதமாக சித்தரிக்கும் ராதா கிருஷ்ணா திரைப்படம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது

  ஒரு சிறுவனின் வாழ்க்கையை விவரித்து, அவன் யானையுடன் பகிர்ந்து கொள்ளும் பாசத்தை சுற்றி இந்த கதை நகர்கிறது. iஇவர்களின் நட்பு மற்றும் அன்பான உறவின் பயணத்தைக் காண, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்  இந்த பாடத்தை பார்த்து ரசிக்கலாம்.

  நடிகர் ஆதித்யா, நடிகர் புகழ், நடிகர் லிவிங்ஸ்டன் மற்றும் நடிகர் மனோபாலா ஆகியோர் துணை நடிகர்களாக நடித்துள்ளனர்.

  காட்டின் பின்னணியில், சிறுவன் கிருஷ்ணா (நடிகர் ஆதித்யா), யானை (ராதா) இருவரும் உடன்பிறவா சகோதரர்களாக வளர்கிறார்கள். பல வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் வனத்துறையினர் யானையை அழைத்துச் செல்கிறார்கள். கிருஷ்ணா தனது சகோதரனும் நண்பனுமாகிய யானையை நினைத்து மிகவும் ஏங்குகிறான். பின்னர் யானையை தேடி காட்டுக்குள் தன்னந்தனியே பயணத்தை மேற்கொள்கிறான். ராதாவும் கிருஷ்ணனும் மீண்டும் சந்திக்கிறார்களா என்பதே கதையின் முடிவு.

  உறவினருடன் பிக் பாஸ் வீட்டில் தங்கி இருக்கும் மைனா நந்தினி?

  இயக்குநர் ரஜினி கூறுகையில், “ராதா கிருஷ்ணா திரைப்படம், மௌக்லி போன்ற குழந்தைகளின் விருப்பமான திரைப்படம் போன்று இருக்கும் என நம்புகிறேன். இது ஒரு அற்புதமான மற்றும் சவாலான அனுபவமாக இருந்தது, யானையிடம் ஒரு குழந்தையைப் பயிற்றுவிப்பது கடினமானது.

  பெருமைமிகு கலர்ஸ் தமிழ் சேனலில், ராதாகிருஷ்ணா திரைப்படத்தை பார்த்த பரவலான பார்வையாளர்களின் ஈர்ப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பார்வையாளர்கள் குறிப்பாக குழந்தைகள் பார்க்க ஒரு வேடிக்கையான திரைப்படத்தை வழங்குவதே ராதாகிருஷ்ணா திரைப்படத்தின் நோக்கம்.

  Colors Tamil to present the world television premiere of Radha Krishna dont miss it to watch on sunday
  ராதா கிருஷ்ணா

  இது குறித்து நடிகர் ஆதித்யா கூறுகையில், “முதலில் யானையுடன் இணைந்து நடிப்பது உற்சாகமான அனுபவமாக இருந்தது மட்டுமில்லாமல் ஒரு மிருகத்துடன் நடிப்பதன் நுணுக்கங்களைப் புரிந்துகொள்வது சவாலாக இருந்தது. ஆனால் யானையும் நானும் இப்போது ஒரு தனித்துவமான தொடர்பைப் பகிர்ந்து கொள்கிறோம் என்று உணர்கிறேன். ராதாகிருஷ்ணா திரைப்படம் இந்த வார இறுதியில் குடும்பங்களுக்கு ஒரு சுவாரஸ்யமான மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட ஒரு திரைப்படமாக இருக்கும் என நம்புகிறேன்.

  இந்த ஞாயிறு, நவம்பர் 13 ஆம் தேதி மதியம் 2:00 மணிக்கு கலர்ஸ் தமிழில், ராதா கிருஷ்ணா திரைப்படம் உலகத் தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பாக உள்ளது.

  சன் டைரக்ட் (CH NO 128), Tata Sky (CHN NO 1515), Airtel (CHN NO 763), Dish TV(CHN NO 1808), மற்றும் Videocon D2H (CHN NO 553)

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், Kollywood movies, TV Serial