திருமணம் உள்ளிட்ட தொடர்களின் புதிய எபிசோட்கள் ஒளிபரப்பு எப்போது? கலர்ஸ் தமிழ் வெளியிட்ட அறிவிப்பு

கடந்த சில நாட்களாக சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கியுள்ள நிலையில் புதிய எபிசோட்கள் ஒளிபரப்பாகும் தேதியை கலர்ஸ் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

திருமணம் உள்ளிட்ட தொடர்களின் புதிய எபிசோட்கள் ஒளிபரப்பு எப்போது?  கலர்ஸ் தமிழ் வெளியிட்ட அறிவிப்பு
திருமணம் தொடர்
  • Share this:
கொரோனா ஊரடங்கால் சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதையடுத்து பொழுதுபோக்கு தொலைக்காட்சிகள் பழைய தொடர்களையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வந்தன.

இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கில் கடந்த 1-ம் தேதி முதல் பழைய படி தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து சின்னத்திரை படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதையடுத்து கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களின் புதிய எபிசோட்கள் 20-ம் தேதி திங்கள் கிழமை முதல் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலர்ஸ் டிவி நிர்வாகம் விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,


ஓவியா:

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் மெகா ஹிட் தொடரான ஓவியா இந்த வார துவக்கத்தில் 400 அத்தியாயங்களை தாண்டி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த தொடர் அனைவரிடையேயும் மிகுந்த வரவேற்பை பெற்ற தொடராகும். சரவணனுடன் தான் செய்து கொண்ட திருமணத்தின் பின்னணியில் உள்ள உண்மை குறித்து ஓவியா தெரிந்து கொள்கிறாள். இந்த நிலையில் இந்த தொடர் ஒரு புதிய பயணத்தில் பரிணமிக்கிறது. அவளுக்கும் சூர்யாவுக்கும் இடையிலான உறவை வசீகரனும் சரவணனும் சந்தேகிக்கக் தொடங்கியதால் இருவரது வாழ்க்கையிலும் எதிர்பாராத பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. இந்த சிக்கல்களில் இருந்து அவர்கள் எப்படி வெளியே வந்தார்கள்?

அம்மன்: அம்மன் மீது அதீத பக்தி கொண்ட சக்தி என்ற பெண், நீதிபதி உயிருக்கு ஆபத்து இருப்பதாக சொல்கிறாள். சங்குலிங்கத்தின் சதி திட்டத்திலிருந்து அவரை காப்பாற்ற அம்மனிடம் அவள் பிரார்த்தனை செய்கிறாள். சக்தியின் கடும் பிரார்த்தனையின் காரணமாக பார்வதி தனது கணவரை மீட்டாரா? இல்லையா? என்பதை காண கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் அம்மன் தொடரை பாருங்கள்.

இதயத்தை திருடாதே:

சகானாவும் சிவாவும் இருவேறு துருவங்களாக இருக்கிறார்கள். எதிரிகளாக இருந்த அவர்கள் வாழ்க்கை துணைவர்களாக மாறுகிறார்கள். இந்த நிலையில் பவானியுடன் ஏற்பட்ட சண்டைக்கு பின் நீலகண்டன் காணாமல் போய் விடுகிறார். நீலகண்டனை அவரது குடும்பத்தினர் கண்டுபிடித்தனரா? என்பதை காண கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இதயத்தை திருடாதே தொடரை பாருங்கள்.

மாங்கல்ய தோஷம் :

தருண் நித்யாவை திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஆறுமுகத்திடம் கூறுகிறார். அதற்கு ஆறுமுகம் மறுத்தபோதிலும், நித்யாவை திருமணம் செய்வதில் தருண் பிடிவாதமாக இருக்கிறார். இதற்கிடையே ரகுவரன் நித்யாவை திருமணம் செய்ய ஒரு மகத்தான திட்டத்தை வகுக்கிறான். இந்த நிலையில் தருணிடம் இருந்து நித்யாவை திருமணம் செய்யத் துடிக்கும் ரகுவரனின் திட்டம் நிறைவேறுமா? நித்யா மற்றும் தருண் ஆகியோரின் தலைவிதி என்ன? என்பதைக் காண கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பாகும் மாங்கல்ய தோஷம் தொடரை பாருங்கள்.

உயிரே : 

செழியனும் பவித்ராவும் தங்கள் வாழ்க்கையை துவங்குகையில், பவித்ரா மீதான நரேனின் காதல் வலுவடைகிறது. இந்த நிலையில், நரேன் பிறந்த நாள் அன்று பவித்ராவும் நரேனும் நேருக்கு நேர் சந்திப்பதை தடுக்க செழியன் தந்திரம் செய்கிறான். இதற்கிடையே சுந்தரபாண்டி கையில் ஒரு பைலுடன் வருகிறார். அது அந்த முழுக் குடும்பத்தையும் திடுக்கிட வைக்கிறது. மறைக்கப்பட்ட பவித்ராவின் உண்மையை சுந்தரபாண்டி வெளியே சொல்கிறாரா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் உயிரே தொடரை பாருங்கள்.

திருமணம்:

தன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள இயலாது என்பது குறித்து தெரிந்தவுடன் ஜனனி மிகுந்த வேதனையடைகிறாள். வேறொரு பெண்ணை மணந்து அவளுடன் குடும்பம் நடத்தி குழந்தை பெற்றுக் கொண்டு சந்தோஷ் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்த அவளுக்கு மேலும் வேதனை அதிகமாகிறது. சந்தோஷை தவிர்ப்பதற்காக அவள் சில நாட்கள் தன் தந்தையின் வீட்டில் தங்க முடிவு செய்கிறாள்.

சந்தோஷ் மற்றும் ஜனனிக்கு இடையே இந்த சிக்கலான சூழ்நிலையில் ஒரு இளம் பெண் சந்தோஷின் அலுவலகத்தில் வேலைக்கு சேருகிறாள். இது அவர்களது திருமண வாழ்க்கையில் எவ்வாறு பேரழிவை ஏற்படுத்துகிறது என்பதைக் காண உங்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் திருமணம் தொடரை பாருங்கள்.
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading