Colors Tamil: ஒரே நாளில் இரண்டு முறை கலர்ஸ் தமிழில் ஆர்யாவின் ’கடம்பன்’!

கடம்பன்

காட்டைக் காப்பாற்ற கடம்பன் எவ்வாறு போராடுகிறான் என்பதே இந்த படத்தின் கதையாகும்.

  • Share this:
    கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி இந்த வார இறுதியில் பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக ஆர்யாவின் நடிப்பில் வெளிவந்த, ‘கடம்பன்’ திரைப்படத்தை 'சன்டே சினி ஜம்போ’வில் ஒளிபரப்ப உள்ளது. மூவி ஆப் தி மந்த் (Movie of the month) கலெக்ஸனில், வரும் ஞாயிற்றுக்கிழமை 27-ந்தேதி அன்று மதியம் 1 மணிக்கும் மாலை 4 மணிக்கும் இந்தப் படம் ஒளிபரப்பாகிறது.

    இயக்குனர் ராகவன் இயக்கியுள்ள இத்திரைப்படம் சுவாரஸ்யமான கதைக்களம் கொண்டதாகும். இதில் கேத்ரீன் தெரசா, தீப்ராஜ் ரானா, ஆடுகளம் முருகதாஸ், மசூதன் ராவ் மற்றும் ஒய்.ஜி. மகேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு புகழ்பெற்ற இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றவையாகும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ‘கடம்பன்’ திரைப்படம் தமிழ்நாட்டின் அடர்ந்த காட்டுப் பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய சிமெண்ட் தொழிற்சாலை உரிமையாளர்கள் அந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் இருக்கும் ஏராளமான சுண்ணாம்புக்கற்கள் மீது ஆசைப்பட்டு அதை வெட்டி எடுக்க முயற்சிக்கிறார்கள். அவர்களுக்கும் அந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களைச் சேர்ந்த கடம்பனுக்கும் (ஆர்யா) இடையே பிரச்சினை ஏற்படுகிறது. அவர்களிடம் இருந்து காட்டைக் காப்பாற்ற கடம்பன் எவ்வாறு போராடுகிறான் என்பதே இந்த படத்தின் கதையாகும்.

    கடம்பன் திரைப்படத்தை 27-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள். மதியம் 1 மணி மற்றும் மாலை 4 மணிக்கு இந்த திரைப்படத்தை பார்த்து ரசியுங்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: