• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கலர்ஸ் தமிழ் சேனலில் சண்டே சினி ஜம்போ... அதர்வாவின் 100!

கலர்ஸ் தமிழ் சேனலில் சண்டே சினி ஜம்போ... அதர்வாவின் 100!

செப்டம்பர் 19-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கும் மாலை 3 மணிக்கும் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

  • Share this:
    கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் த்ரில்லர் திரைப்படமான 100 ஒளிபரப்பாகவிருக்கிறது.

    கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் பொம்மி B.A.B.L, இதயத்தை திருடாதே, அபி டெய்லர், சில்லுனு ஒரு காதல் ஆகியவற்றை வாரத்தின் ஏழு நாட்களும் ஒளிபரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. வரும் செப்டம்பர் 19-ந்தேதி முதல் கலர்ஸ் தமிழின் பார்வையாளர்கள் அவர்களுக்கு பிடித்த தொடர்களை இனி திங்கள் முதல் ஞாயிறு வரை புதிய நேரத்தில் பார்த்து மகிழலாம்.

    உற்சாகத்தை மேலும் உயர்த்தும் வகையில் கலர்ஸ் தமிழ் அதன் பிரபல சன்டே சினி ஜம்போவின் ஒரு பகுதியாக தொலைக்காட்சியில் முதல் முறையாக அதர்வா நடித்து 2019-ம் ஆண்டில் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான 100 திரைப்படம் ஒளிபரப்பாகவிருக்கிறது.

    செப்டம்பர் 19-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கும் மாலை 3 மணிக்கும் இந்தப் படத்தைப் பார்க்கலாம். சாம் ஆண்டன் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன் கதை லட்சியமிக்க போலீஸ்காரரான சத்யாவை (அதர்வா) சுற்றி வருகிறது. காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் போலீஸ்காரரான அவர், அங்கு வரும் அவசர தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் கடத்தப்பட்ட பெண்ணிடம் இருந்து சத்யாவுக்கு ஒரு போன் வருகிறது. இறந்துவிட்டதாக கருதப்பட்ட அந்த பெண்ணிடம் இருந்து போன் வந்ததால், அது எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் சத்யா குற்றவாளியை பிடித்து அந்த பெண்ணை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் மீதிக் கதையாகும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: