Colors Tamil: கலர்ஸ் தமிழில் இந்த வாரம் ’ஸ்டைல்’ - ’வர்மா’!

ஸ்டைல் - வர்மா

அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய வர்மா 2020-ம் ஆண்டில் வெளிவந்த ஒரு காதல் – டிராமா கலந்த திரைப்படமாகும்.

  • Share this:
    சிறந்த பொது பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் வரும், ஆகஸ்ட் 15-ம் தேதி ஞாயிறு அன்று அதன் மிக பிரபலமான சன்டே சினி காம்போ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ‘ஸ்டைல்’ திரைப்படத்தை வரும் ஞாயிற்றுக்கிழமை 15 ஆகஸ்ட், அன்று மதியம் 1 மணிக்கும், ஸ்பெஷல் பார்ட்னர் தஞ்சாவூர், பெரியார் மணியம்மை இன்ஸ்டிடூட் ஆப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி வழங்கும் ’வர்மா’ திரைப்படத்தை மாலை 4:30 மணிக்கும் ஒளிபரப்பவிருக்கிறது.

    உன்னி முகுந்தன், டொவினோ தாமஸ், பாலு வர்கீஸ், மாஸ்டர் இல்ஹான் மற்றும் பிரியங்கா கந்த்வால் என பிரபல நடிகர்கள் பங்கேற்பில் வெளிவந்த ஸ்டைல் திரைப்படத்தின் கதை, தியா என்ற இளம் பெண் மீது (பிரியங்கா கந்த்வால்-ன் நடிப்பில்) ஒரு இளம் ஆட்டோமொபைல் மெக்கானிக்கான டாம் (உன்னி முகுந்தன் நடிப்பில்) காதலில் விழுவதை சுற்றியதாக அமைந்திருக்கிறது. அவர்களது வாழ்க்கையில் ஒரு அந்நிய நபரான எட்கர் (டொவினோ தாமஸ் நடிப்பில்) நுழையும்போது எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது. பூனை மற்றும் எலி விளையாட்டுப்போல டாம் மற்றும் எட்கர் இடையில் நிகழும் மோதல்களும், நிகழ்வுகளும், இத்திரைக்கதையை விறுவிறுப்பானதாக, பரபரப்பின் உச்சிக்கே பார்வையாளர்களை அழைத்துச் செல்வது நிச்சயம். இச்சிறப்பான திரைப்படத்தை பினு சதானந்தன் இயக்கியிருக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய வர்மா 2020-ம் ஆண்டில் வெளிவந்த ஒரு காதல் – டிராமா கலந்த திரைப்படமாகும். பாலா பழனிசாமியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தின் கதை, கோபமும், ஆக்ரோஷமும் நிறைந்த வர்மா வாசுதேவன் (துருவ் விக்ரமின் நடிப்பில்) கதையை சித்தரிக்கிறது. கல்லூரியில் தனக்கு ஜுனியரான மேகாவுடன் (மேகா சௌத்ரி நடிப்பில்) வர்மா காதலில் விழ, கதை விறுவிறுப்பாக நகர்கிறது. நாட்கள் செல்லச்செல்ல மேகாவுக்கும், வர்மாவுக்கு இடையில் கசப்பும், பிரிவும் ஏற்பட, மேகாவின் குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை மேகா திருமணம் செய்துகொள்ள நேர்கிறது. அதன் பிறகு, தனிமையில் வாடும் வர்மாவின் வாழ்க்கை, இரண்டு நாட்களுக்குள் மெல்ல மெல்ல தலைகீழாக மாறுகிறது.

    ஆகஸ்ட் 15 ஞாயிறு அன்று பிற்பகல் 01:00 மணி மற்றும் 4:30 மணிக்கு இந்த சிறப்பான இரு திரைப்படங்களை கண்டு மகிழ கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்ய மறவாதீர்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: