Colors Tamil: ஞாயிற்றுக் கிழமையை கொண்டாட கலர்ஸ் தமிழின் 2 அட்டகாச படங்கள்!

கலர்ஸ் தமிழ் படங்கள்

இந்த 2 திரைப்படங்களையும் பார்த்து ரசித்து ஞாயிற்கிழமையை மகிழ்ச்சியாக கழிக்க கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை மதியம் 1 மணிக்கும் மாலை 4 மணிக்கும் டியூன் செய்யுங்கள்

  • Share this:
    தமிழகத்தின் மிகச் சிறந்த பொழுது போக்கு சேனலாக திகழும் கலர்ஸ் தமிழ், மக்களின் மன அழுத்தத்தை போக்கி உற்சாகப்படுத்தும் வகையில் ’சன்டே சினி காம்போ’ என்னும் பெயரில் பல விதமான பொழுதுபோக்கு திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து ஒளிபரப்பவிருக்கிறது. இதன் முதல் தொகுப்பாக மே 30, அதாவது நாளை மதியம் 1 மணிக்கு மதுர வீரனும், மாலை 4 மணிக்கு தாரை தப்பட்டை என இரு அட்டகாசமான பிளாக்பஸ்டர்கள் திரைப்படங்களை ஒளிபரப்பவுள்ளது.

    மதுர வீரன் திரைப்படமானது கதாநாயகன் துரையை பற்றியும் அவனது வாழ்க்கையில் அவன் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள் பற்றியதாகும். தனது தந்தையின் மரணத்திற்கு பழிவாங்குவதற்காக 20 ஆண்டுகளுக்கு பிறகு மலேசியாவில் இருந்து தனது சொந்த கிராமத்திற்கு வரும் கதாநாயகன் தனது கிராமத்தில் 2 சமூகங்களுக்கு இடையில் பல்வேறு பிரச்சினைகளை கண்டறிகிறான். இந்த நிலையில் அந்த சவால்களையும் மோதல்களையும் அவன் எவ்வாறு எதிர்கொண்டு தனது தந்தையின் சாவுக்கு பழிவாங்குகிறான் என்பதே இப்படத்தின் கதையாகும். கடந்த 2018-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது பற்றியும் அதன் பெருமைகள் பற்றியும் இயக்குனர் அழகாக எடுத்துக்கூறியுள்ளார். இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி உள்ளார். இதில் சமுத்திரகனி மற்றும் மைம் கோபி, கதாநாயகியாக மீனாட்சி ஆகியோர் நடித்துள்ளனர்.

    தாரை தப்பட்டை திரைப்படமானது நாட்டுப்புற கலை சம்பந்தமான திரைப்படம் ஆகும். இதை தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் சசிகுமார் நடித்துள்ளார். இதில் இவர் கரகாட்டக் குழுவின் இசை கலைஞராக சன்னாசி என்ற பெயரிலும், கரகாட்டக் கலைஞராக சூரவல்லி என்ற பெயரில் வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

    இந்த 2 திரைப்படங்களையும் பார்த்து ரசித்து ஞாயிற்கிழமையை மகிழ்ச்சியாக கழிக்க கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை மதியம் 1 மணிக்கும் மாலை 4 மணிக்கும் டியூன் செய்யுங்கள். அதிரடி சண்டைகள், பாடல்கள் மற்றும் காதல் நிறைந் திரைப்படங்களை பார்த்து வார இறுதி நாளை உற்சாகத்துடன் கொண்டாடுங்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: