• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கலர்ஸ் சேனல் சீரியலில் சன் டிவி நடிகை! அந்த வில்லி ரோலுக்காக தான் போனாராம்

கலர்ஸ் சேனல் சீரியலில் சன் டிவி நடிகை! அந்த வில்லி ரோலுக்காக தான் போனாராம்

கலர்ஸ் டிவி சீரியல்

கலர்ஸ் டிவி சீரியல்

தினமும் இரவு 10 மணிக்கு கலர்ஸ் தமிழ் சேனலில் என்னைப் பாருங்கள்

  • Share this:
    மக்களை கவர்ந்திழுக்கும் வகையில் எண்ணற்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி தமிழகத்தில் பிரபல முன்னணி சேனலாக இருந்து வருகிறது கலர்ஸ் தமிழ்.

    ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்கள் மூலம் தனி ரசிகர் வட்டாரத்தை கொண்டுள்ள கலர்ஸ் தமிழ் சேனலில் திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணிக்கு "சில்லுனு ஒரு காதல்" மெகா சீரியல் ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலில் தற்போது புதிதாக இணைந்து உள்ளார் பிரபல சீரியல் நடிகை துர்கா ஸ்ரீ. அம்மன், மாங்கல்ய சந்தோஷம், இதயத்தை திருடாதே, அபி டெய்லர் உள்ளிட்ட பல ஹிட் சீரியல்கள் கலர்ஸ் தமிழில் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில், இரவு 10 மணிக்கு போடப்பட்டு வரும் சில்லுனு ஒரு காதல் சீரியலும் ரசிகர்களின் ஆதரவு பெற்று விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் அபியும் நானும் சீரியலில் மஹா என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களிடையே நடித்து பிரபலமான நடிகை துர்கா ஸ்ரீ, சில்லுனு ஒரு காதல் சீரியலில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் துர்கா ஸ்ரீ, விஷுவல் கம்யூனிகேஷனில் பட்டம் பெற்றுள்ளார். மேலும் இவர் ஒரு திறமையான நடனக் கலைஞரும் ஆவார். இந்நிலையில் கலர்ஸ் தமிழ் சீரியலில் இணைந்துள்ள தகவல் குறித்து தனது இன்ஸ்டா மூலம் ரசிகர்களுக்கு வெளிப்படுத்தி உள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    "சில்லுனு ஒரு காதல்" ஷூட்டிங் ஸ்பாட்டில் சீரியல் நாயகன் நடிகர் சமீர் அகமது மற்றும் நாயகி நடிகை தர்ஷினி கவுடாவுடன் எடுத்து கொண்ட செல்ஃபிக்களை ஷேர் செய்து, "ஹாய் நான் துர்கா, சில்லுனு ஒரு காதல் சீரியலில் நிஷா என்ற வில்லி கேரக்டரில் நடிக்க புதிதாக இணைந்துள்ளேன். இந்த தகவலை உங்களுடன் ஷேர் செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தினமும் இரவு 10 மணிக்கு கலர்ஸ் தமிழ் சேனலில் என்னைப் பாருங்கள். நான் நடிக்கும் எபிசோட்களை தவறாமல் பார்த்து தொடர்ந்து எனக்கு ஆதரவளிக்க வேண்டும்"என்று ரசிகர்களை நடிகை துர்கா ஸ்ரீ கேட்டு கொண்டுள்ளார்.



     




    Instagram இல் இந்த இடுகையை காட்டு





     

    @durgaashreee இடுகையைப் பகிர்ந்துள்ளார்





    சீரியலின் முக்கிய வில்லன் நாகாவின் மகளாக வில்லி நிஷா கேரக்டரில், நடிகை துர்கா ஸ்ரீ நடிக்கும் காட்சிகள் ஏற்கனவே கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது.மேலும் நாயகி கயல் பயிற்சி பெரும் போலீஸ் பயிற்சி அகாடமியில் இருக்கும் நிஷா, மோதிரத்தை திருடிய பழியை போடும் சதி வேலையில் இறங்குவது தொடர்பான ஒரு டீஸர் வீடியோ ஒன்றையும் நடிகை துர்கா ஸ்ரீ தனது இன்ஸ்டா பேஜில் ஷேர் செய்து இருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: