ஆடையில்லாமல் புகைப்படம் வெளியிட்ட அம்மன் சீரியல் நடிகை - ரசிகர்கள் ஷாக்!

சுபா ரக்ஷா

அம்மன் சீரியல் நடிகை சுபா ரக்ஷா ஆடையில்லாமல் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

  • Share this:
கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தற்போது பெரும்பாலான ரசிகர்களை ஈர்த்து வருகிறது. அந்த சேனலில் திங்கள் முதல் சனி வரை இரவு 7:30 மணி முதல் 8.30 வரை 1 மணி நேரம் ஒளிபரப்பாகி வருகிறது அம்மன் பக்தி சீரியல். சமீபத்தில் 600 எபிசோட்களை கடந்த இந்த சீரியல் சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிநடை போட்டு கொண்டிருக்கிறது. தமிழ் டிவி சேனல்களில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் அம்மன் சீரியலுக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் பெருகி கொண்டே இருக்கின்றனர்.

ரவி பிரியன் இயக்கத்தில் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் இந்த பக்தி சீரியலில் சக்தி என்ற முக்கிய கேரக்டரில் பவித்ரா கவுடா மற்றும் ஈஸ்வர் என்ற கேரக்டரில் நடிகர் அமல்ஜித், ஷாரதாவாக ஜெனிபர், தாமோதரனாக ஹரிஷங்கர் நாராயணன், மந்த்ராவாக நடிகை சந்திரிகா, காந்தாரியாக சுபா ரக்ஷா என முக்கிய கதாபாத்திரங்களில் பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் கன்னட சின்னத்திரையில் பாப்புலர் ஆன சுபா ரக்ஷா, தமிழில் அம்மன் சீரியல் மூலமாக அவர் அறிமுகம் ஆனார்.

சோசியல் மீடியாவில் தன்னுடைய செம்ம ஹாட் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து திரைப்பட நடிகைகள் பலரும் போட்டோஷூட் நடத்தி அவர்களது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். சினிமா ஹீரோயின்களுக்கு நிகராக தற்போது சீரியல் நடிகைகளுக்கும் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் சமூக வலைத்தளங்களிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர்.

 இந்த நிலையில் அம்மன் சீரியல் நடிகை சுபா ரக்ஷா வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் ஆடை அணியாமல் வெறும் தொப்பியை வைத்து உடலை மறைத்து எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். ஏற்கனவே சன்னி லியோன் இது போல தொப்பியை வைத்து போட்டோஷூட் எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவரைப்போலவே சுபா ரக்ஷா போட்டோ வெளியிட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.சுபா இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது கவர்ச்சி போட்டோஷூட் நடித்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சில நேரங்களில் சேலையிலும் வருவார். ஆனால் இந்த புகைப்படம் கவர்ச்சியின் உச்சக்கட்டத்திற்கு சென்று எடுக்கப்பட்டுள்ளது. புகைப்படங்கள் மட்டுமின்றி இந்த காஸ்டியூமில் ஒரு வீடியோ ஒன்றையும் ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் பல்வேறு விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

PHOTOS : உள்ளாடை தெரியும்படி புகைப்படம் வெளியிட்ட அமலா பால் -செம்ம ஹாட் போட்டோஸ்

மேலும் இந்த செய்தியை ஒரு மலையாள பத்திரிகை வெளியிட்டுள்ள நிலையில் அதனை புகைப்படம் எடுத்து ஷேர் செய்து நன்றியும் கூறியுள்ளார். இன்ஸ்டாகிராமில் இவரை 60,000க்கும் மேற்பட்டோர் பாலோ செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: