Home /News /entertainment /

’ஆம் நாங்கள் காதலிக்கிறோம்’ - சின்னத்திரையில் மற்றொரு காதல் ஜோடி!

’ஆம் நாங்கள் காதலிக்கிறோம்’ - சின்னத்திரையில் மற்றொரு காதல் ஜோடி!

அமல்ஜித் - பவித்ரா

அமல்ஜித் - பவித்ரா

பவித்ரா மற்றும் அமல்ஜித் பகிரங்கமாக நாங்கள் காதலிக்கிறோம் என்று தங்களுடைய சமூக வலைத்தள கணக்கு வழியாக தெரிவித்துள்ளது ஆச்சரியமாக இருக்கிறது.

    ஒரே துறையில் இருப்பவர்கள், ஒன்றாக பணிபுரிபவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது மிகவும் இயல்பானது தான். திரைப்படங்களில் இணைந்து நடித்த பல நடிகர் நடிகைகளும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இதற்கு சின்னத்திரையும் விதிவிலக்கல்ல. பல சின்னத்திரை காதல் ஜோடிகள் தம்பதிகளாக வலம் வருகிறார்கள்.

    மேலும், சமீபகாலமாக சின்னத்திரையில் சீரியல்களில் ரீல் ஜோடிகளாக வலம் வந்த பல நடிகர் நடிகைகள் ரியல் ஜோடிகளாக மாறியுள்ளனர். கடந்த மாதத்திலே பல சின்னத்திரை ஜோடிகள் திருமணங்கள் கோலாகலமாக நடைபெற்றது. இந்த வரிசையில் இப்போது புதிதாய் ஒரு ஜோடியும் இணைந்துள்ளது. கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் அம்மன் சீரியலில் அமல்ஜித் மற்றும் பவித்ரா ஆகிய இருவரும் தாங்கள் காதலிப்பதாக வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.

    கலர்ஸ் தமிழ் ஒளிபரப்பான ‘திருமணம்’ என்ற மெகா ஹிட் சீரியல் மூலம் சின்னத்திரையில் முதல் முதலாக அறிமுகமான சித்து மற்றும் ஸ்ரேயா, சந்தோஷ் மற்றும் நஜனியாக மக்கள் மனதை கொள்ளை கொண்டு இப்பொழுது நிஜ வாழ்விலும் தம்பதியாகியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இவர்களுக்கு திருமணம் நடந்தது. அதே போல ஜீ தமிழ் தொலைக்காட்சியின் மதன் மற்றும் ரேஷ்மாவும் நீண்டகாலமாக காதலித்து வந்துள்ளனர்.

    சில நாட்களுக்கு முன்புதான் இவர்களுக்கும் திருமணம் நடந்தது. தேசம் விட்டு தேசம் சென்று திருமணம் செய்து கொள்வது, வெவ்வேறு சேனலில் நடித்து வந்தவர்கள் காதலித்து திருமணம் செய்துள்ளனர். ஜீ தமிழில் செம்பருத்தி சீரியல் புகழ் ஷபானா மற்றும் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் புகழ் ஆரியனும் சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by AMALJITH (@iam__amaljith)






    இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதும், ஷபானாவின் திருமணத்திற்கு பெற்றோர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் செய்திகள் தெரிவித்தன. இவர்களுக்கெல்லாம் சீனியராக விஜய் டிவியின் சூப்பர் ஹிட்டான சீரியலான ராஜா ராணியில் நடித்த ஆல்யா மானசா சஞ்சீவ் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by AMALJITH (@iam__amaljith)






    இவர்களின் வரிசையில், கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் அம்மன் என்ற சீரியலில் நாயகன் மற்றும் நாயகியாக நடித்து வரும் அமல்ஜித் மற்றும் பவித்ரா நடித்து வருகின்றனர். பொதுவாக சீரியல்களில் நடிக்கும் பொழுது காதல் வசப்படும் ஜோடிகள் தங்களுடைய காதலை மீடியாவில் அல்லது சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். திருமணம் முடிவாகும் வரை காத்திருந்து,
    தங்கள் காதலை வெளிப்படுத்துவது வழக்கம்.



     




    View this post on Instagram





     

    A post shared by Pavithra Gowda (@pavithraarvind)






    ஆனால் பவித்ரா மற்றும் அமல்ஜித் பகிரங்கமாக நாங்கள் காதலிக்கிறோம் என்று தங்களுடைய சமூக வலைத்தள கணக்கு வழியாக தெரிவித்துள்ளது ஆச்சரியமாக இருக்கிறது. இருவரும் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்து தாங்கள் காதலிப்பதை வெளிப்படுத்தியுள்ளனர். அதைப் பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு தங்கள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ்

    அடுத்த செய்தி