முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கலர்ஸ் தமிழின் ’போட்டிக்கு போட்டி’ ... நடுவராக இணைந்த ஸ்ரீதர் மாஸ்டர்!

கலர்ஸ் தமிழின் ’போட்டிக்கு போட்டி’ ... நடுவராக இணைந்த ஸ்ரீதர் மாஸ்டர்!

ஸ்ரீதர் மாஸ்டர்

ஸ்ரீதர் மாஸ்டர்

ஸ்ரீதர் மாஸ்டர் மற்றும் அவரது மகள் இருவரும் இன்ஸ்டாவில் பயங்கர வைரல்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் ’போட்டிக்கு போட்டி’ ரியாலிட்டி நிகழ்ச்சியில் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் நடுவராக இணைந்துள்ளார்.

போட்டிக்கு போட்டி நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் டாஸ்க்குகள் சுவாரசியத்தை அதிகரிக்க செய்கின்றன. அந்த வகையில் போட்டியாளர்களின் நடன திறமையை மதிப்பிடவும் அவ்வப்போது சிறப்பு விருந்தினர்களாக டான்ஸ் மாஸ்டர்கள் போட்டிக்கு போட்டி நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு வருகிறார்கள். இந்த லிஸ்டில் இப்போது டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரும் இணைந்துள்ளார். இவர் 'சூப்பர் ஆடியன்ஸ்' ரோலில் நடுவராக இந்த நிகழ்ச்ச்சிக்கு தலைமை தாங்குகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது, சமீபத்தில் போட்டிக்கு போட்டி நிகழ்ச்சிக்கு நடன இயக்குனர்கள் பாபா பாஸ்கர், கலா  மாஸ்டர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர்.

6 வருடமாக அந்த நடிகையின் மகனுக்கு விஷால் செய்து வரும் மிகப் பெரிய உதவி!

அந்த வகையில், தற்போது நடுவராக இனணைந்துள்ள ஸ்ரீதர் மாஸ்டர், சூப்பர் ஆடியன்ஸ் ரோலில் தலைமை தாங்கி அவரது மதிப்பெண் மற்றும் பார்வையாளர்களின் வாக்குகளுடன் சேர்த்து வெற்றி அணியை தீர்மானிப்பார் என தெரிகிறது. இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகர், நடிகைகள், சீரியல் குழுவினர் ஆகியோர் 2 அணிகளாக பிரிந்து போட்டி போடுவர். இவர்களுக்கு பல விதமான டாஸ்க்குகள் வழங்கப்படும். டான்ஸ், பாடல்கள், வினாடி வினாக்கள் , வேடிக்கையான செயல்பாடுகள்  டாஸ்க்குகளாக கொடுக்கப்படும் அதில் அணியின் சார்பாக ஒருவர் வந்து கலந்து கொள்வார்.




 




View this post on Instagram





 

A post shared by Colors Tamil (@colorstvtamil)



எல்லா  டாஸ்க்குகளுக்கும் முடிவில் எந்த அணி அதிக மதிப்பெண் பெறுகிறதோ அந்த அணி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவர். இந்த சுவாரசியமான விளையாட்டு நிகழ்ச்சியில்  இப்போது ஸ்ரீதர் மாஸ்டரும் இணைந்துள்ளார்.

நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டரை இதற்கு முன்பு பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பார்த்து இருப்பீர்கள். பல்வேறு நடன ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் இருந்து இருக்கிறார். ஸ்ரீதர் மாஸ்டர் மற்றும் அவரது மகள் இருவரும் இன்ஸ்டாவில் பயங்கர வைரல், இருவரின் டான்ஸ் ரீல்ஸ்  வீடியோக்கள் ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்படுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், Television