Home /News /entertainment /

கலர்ஸ் தமிழில் பாக்யராஜ் பட்டிமன்றம் உள்ளிட்ட பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்!

கலர்ஸ் தமிழில் பாக்யராஜ் பட்டிமன்றம் உள்ளிட்ட பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்!

பொங்கல் நிகழ்ச்சிகள்

பொங்கல் நிகழ்ச்சிகள்

கலர்ஸ் தமிழ் திருவிழா என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர்கள் ஆதவன் மற்றும் பரினா ஆசாத் ஆகியோர் தொகுத்து வழங்கவிருக்கிறார்கள்.

    பொங்கல் பண்டிகையையொட்டி சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி.

    குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஒன்றிணைந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடும் இத்தருணத்தில் அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் விதமாக வரும் வெள்ளிக்கிழமை ஜனவரி 14, 2022 முதல் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது.

    குறிப்பாக புகழ்பெற்ற நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் தலைமையில் நடைபெறும் சிறப்பு பட்டிமன்றம் முதல் நட்சத்திர பட்டாளங்கள் பங்கேற்கும் கலர்ஸ் தமிழ் திருவிழா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன. எனவே இவற்றை பார்த்து மகிழ கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள் வெள்ளிக்கிழமை 14 ஜனவரி, 2022 முதல் ஞாயிற்றுக்கிழமை 16 ஜனவரி 2022 வரை அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்த்து மகிழுங்கள்.

    அனைவரும் விரும்பும் நடிகரும் இயக்குனருமான பாக்யராஜின் சிறப்பு பட்டிமன்றத்துடன் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பொங்கல் நிகழ்ச்சிகள், துவங்குகின்றன. உங்களை உற்சாகப்படுத்தவிருக்கும் இந்த பட்டிமன்றத்தின் சிறப்பு பேச்சாளர்களாக நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜன், ரமேஷ் கண்ணா, தினேஷ், பட்டிமன்ற பேச்சாளர் சுமதி ஸ்ரீ, நடிகை ஜாங்கிரி மதுமிதா, நித்ய பிரியா ஆகியோர் பங்கேற்று அசத்துகிறார்கள்.

    பட்டியலிட்டால் நீண்டு தொடர்வது கணவன்மார் குறைகளா அல்லது மனைவிமார் குறைகளா? என்ற தலைப்பில் இவர்கள் பேசவிருக்கிறார்கள். 14–ம் தேதி அன்று காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சிறப்பு பட்டிமன்றத்தை கேட்பரி டைரி மில்க் சில்க் மற்றும் கார்டியா அட்வான்ஸ்டு கடலை எண்ணெய் சிறப்பு பங்குதாரர்களாக இணைந்து வழங்குகின்றன.



    அதனைத் தொடர்ந்து கலர்ஸ் தமிழ் திருவிழா என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர்கள் ஆதவன் மற்றும் பரினா ஆசாத் ஆகியோர் தொகுத்து வழங்கவிருக்கிறார்கள். 3 மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்த சிறப்பு நிகழ்ச்சியில் விதவிதமான நடனங்கள், பின்னணி பாடகர்கள் வேல்முருகன், முகேஷ் மற்றும் வினைத்தா சிவகுமார் ஆகியோரின் பாடல்கள், சிரிப்பு நிகழ்ச்சி மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை உங்களை உற்சாகப்படுத்த உள்ளன.

    மேலும் இந்த கொண்டாட்டத்தில் சந்தானம், மற்றும் "சில நேரங்களில் சில மனிதர்கள்" திரைப்படத்தின் குழுவினர் அசோக் செல்வன், ரித்விகா, மணிகண்டன் ஆகியோர் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பாக்க இருக்கின்றனர். கலர்ஸ் தமிழ் திருவிழா என்னும் இந்த நிகழ்ச்சி அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த சிறப்பு நிகழ்ச்சியை கேட்பரி டைரி மில்க் சில்க் மற்றும் கோல்டு வின்னர் சிறப்பு பங்குதாரராக இணைந்து வழங்குகிறது.



    இது குறித்து கலர்ஸ் தமிழ் வர்த்தக தலைவர் திரு ராஜாராமன் கூறுகையில், “சிறப்பு மற்றும் உற்சாகம் நிறைந்த இந்த பொங்கல் பண்டிகையானது குடும்ப ஒற்றுமையை காப்பதிலும் கவலைகளை மறக்கவும் செய்கிறது. குடும்பங்களை மிகுந்த ஈடுபாட்டுடனும் மகிழ்ச்சியுடனும் வைத்திருக்கும் விதமாக குறிப்பாக தற்போதைய தொற்று நோய் நிலையை கருத்தில் கொண்டு, பல மணி நேரம் பொழுதை போக்கும் விதமாக பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

    மேலும், இந்த பொங்கலை எங்கள் கலர்ஸ் தமிழ் குடும்பத்துடன் கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைவதோடு, எங்கள் தொலைக்காட்சியின் முதல் பட்டிமன்ற நிகழ்ச்சியையும் வழங்க இருக்கிறோம். இந்த பட்டிமன்றம் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த கலர்ஸ் தமிழ் திருவிழா உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்தார்.



    அதோடு பொங்கல் பண்டிகையை உற்சாகப்படுத்தும் விதமாக, மம்முட்டி, ஆர்யா, பிரித்விராஜ் மற்றும் பிரியா ஆனந்த் நடித்த லோக்கல் பாய்ஸ் திரைப்படம் சனிக்கிழமை, 15 ஜனவரி அன்று மாலை 4.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை, 16 ஜனவரி அன்று ஆர்.எஸ். கார்த்திக் மற்றும் அயிரா நடித்த என்னங்க சார் உங்க சட்டம் என்ற திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. எனவே பாப்கார்னை சாப்பிட்டுக் கொண்டே கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிகளை உங்கள் குடும்பத்துடன் பார்த்து மகிழுங்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ்

    அடுத்த செய்தி