பொழுதுபோக்கு தொலைக்காட்சியாக திகழும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் ஜூலை 4–ம் தேதி முதல் ‘பச்சக்கிளி’ என்னும் வித்தியாசமான புத்தம் புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இந்த தொடர் குறித்த முதல் ப்ரோமோ வெளியானதில் இருந்து பார்வையாளர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
காதல் அனைவரையும் ஒன்றிணைக்கிறது என்பதையும், திருமணங்கள் ஒரு புனிதமான பந்தம் என்பதை வலியுறுத்தும் வகையில் இருவேறு துருவங்களான பச்சைக்கிளி (நடிகை மோனிஷா அர்ஷக்) மற்றும் ஆதித்யா (நடிகர் தீபக்) ஆகியோரின் வாழ்க்கையை பற்றி இந்த ப்ரோமோ குறிப்பிடுகிறது.
இந்த ப்ரோமோவில் பச்சைகிளியின் மூன்று அண்ணன்களான மீனாட்சி சுந்தரம் (நடிகர் ஸ்டாலின் முத்து), அழகர் (விஜய் ஆனந்த்) மற்றும் வேலு (அஸ்வின்) ஆகியோர் அவளது தங்கைக்கு கிளி ஜோசியம் பார்க்கிறார்கள். அப்போது தனது தங்கையின் எதிர்காலத்தைப் பற்றி கூறுமாறு கிளி ஜோசியம் பார்ப்பவரிடம் கேட்கிறார்கள். கிளி அவளுக்கு கடவுள் முருகன் படத்தை எடுத்துக் கொடுக்கிறது. எனவே அவளது வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும் என்று கிளி ஜோசியம் பார்ப்பவர் கூறுகிறார். இதேபோல் அந்த ப்ரோமோவில் ஊரில் உள்ள அனைவரின் பிரச்சினைகளையும் தீர்க்கும் மகிழ்ச்சியான பெண்ணாகவும் பச்சைக்கிளி வலம் வருகிறார். மறுபுறம் ஆதித்யா வழக்கறிஞராக வருவதும் இதில் இடம் பெற்றுள்ளது.
10 வருடங்களுக்குப் பிறகு பிறந்தநாளில் வேலை செய்த விஜய்... காரணம் என்ன தெரியுமா?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கன்னட நடிகருக்கு ரஜினிகாந்த் கொடுத்த சர்ப்ரைஸ்!

பச்சக்கிளி
காதல் மற்றும் மனப் போராட்டம், குடும்பங்களின் முக்கியத்துவம், உடன்பிறந்த உறவுகளின் பாசம் ஆகியவற்றுடன் வாரம் முழுவதும் பார்வையாளர்களை மகிழ்விப்பதோடு, மேலும் குடும்பங்களை ஒன்றிணைப்பதில் பெண்களின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்க வருகிறாள் பச்சைக்கிளி. எனவே இந்த தொடரைக் காண வரும் 4–ம் தேதி இரவு 7.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள் புத்தம் புதிய தொடரை பார்த்து மகிழுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.