கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் பச்சக்கிளி சீரியல் முடிவை எட்டுகிறது.
காலை முதல் இரவு வரை பல்வேறு வகையான சீரியல்கள் கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகி வருகின்றன. இதில் டெலிகாஸ்ட் செய்யப்படும் நெடுந்தொடர்களுக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை கொடுத்து வெற்றி பாதையில் எடுத்து செல்கின்றனர். அந்த வகையில் கலர்ஸ் தமிழில் வார நாட்களில் இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் தொடர் 'பச்சக் கிளி’. காதல் அனைவரையும் ஒன்றிணைக்கிறது என்பதையும், திருமணங்கள் குடும்பத்தை சேர்க்கிறது என்ற ஒன்லைனில் ஒளிப்பரப்பாகும் இந்த சீரியலில், பச்சக்கிளி ரோலில் (நடிகை மோனிஷா அர்ஷக்) மற்றும் ஆதித்யாவாக (நடிகர் தீபக்) ஆகியோர் நடிக்கின்றனர்.
பச்சக்கிளியின் மூன்று அண்ணன்களான மீனாட்சி சுந்தரம் (நடிகர் ஸ்டாலின் முத்து), அழகர் (விஜய் ஆனந்த்) மற்றும் வேலு (அஸ்வின்) ஆகியோர் பாசமிகு அண்ணன்கள் ரோலில் நடிக்கின்றனர். அண்ணன்கள் மீது பச்சக்கிளி வைத்திருக்கும் மரியாதையும் பாசமும் மொத்த ஊரையும் வியக்க வைக்கிறது.
இதற்கிடையே பச்சக்கிளி சீரியலில், பச்சக்கிளி கர்ப்பமாகிறாள். ஆனால் ஆதித்யா அவளையும் குழந்தையையும் ஏற்க மறுக்கிறான். இதனால் கோபமடைந்த பச்சக்கிளி, ஆதித்யாவைப் பிரிவதாக சொல்லி வீட்டை விட்டு வெளியேறுகிறாள். பின்னர் ஆதித்யா, பச்சக்கிளியை புரிந்துகொண்டு அவளைத் தேடிச் செல்கிறான்.
கர்ப்பம், கணவருடனான பிரச்னைகளுக்குப் பிறகு புதிய கார் வாங்கிய திவ்யா ஸ்ரீதர்!
தனது தவறுகளை ஒப்புக் கொண்டு, பச்சக்கிளியுடன் மீண்டும் இணைகிறான். 8 மாதங்களுக்குப் பிறகு பச்சக்கிளியின் வளைகாப்பு நடக்கிறது. அதற்கு ஆதித்யா தனது சகோதரர்களை அழைத்து வருகிறான். பின்னர் விவாகரத்துக்காக தன்னை நாடும் ஒரு ஜோடியை சேர்த்து வைக்கிறான்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.