Home /News /entertainment /

கிரைம் சீரிஸ் ரசிகர்களின் கவனத்திற்கு.. கலர்ஸ் தமிழில் வருகிறது ’ஜகமே தந்திரம் கதைகள்’

கிரைம் சீரிஸ் ரசிகர்களின் கவனத்திற்கு.. கலர்ஸ் தமிழில் வருகிறது ’ஜகமே தந்திரம் கதைகள்’

கலர்ஸ் தமிழ்

கலர்ஸ் தமிழ்

விழிப்புணர்வை உருவாக்க, மக்களின் குரலாக பிரபல நடிகர் செந்தில் குமார் தொகுப்பாளராக இந்நிகழ்ச்சியை வழங்குகிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
  மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் தனது பல்வேறு நிகழ்ச்சிகளின் வெற்றியை இன்னும் வலுவாக்கும் வகையில் தமிழ்நாட்டின் மிக இளைய பொதுப் பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ், ஜகமே தந்திரம் கதைகள் என்ற பெயரில் ஒரு புத்தம் புதிய கிரைம் டாக்கு – டிராமா நிகழ்ச்சியை தொடங்குவதன் மூலம் அதன் க்ரைம் டைம் தொகுப்பினை இன்னும் சுவாரஸ்யமானதாக ஆக்குகிறது.

  நிஜ-வாழ்க்கையில் நடந்த குற்றச் செயல்களின் பரபரப்பான விசாரனையை இந்த கிரைம் சீரிஸ் மிக நேர்த்தியாக கதை வடிவத்தில் மக்களின் பார்வைக்கு வழங்குகிறது. இந்த நிகழ்ச்சியை வழங்குவதற்கு பிரபல நடிகர் செந்தில் குமாருடன் கலர்ஸ் தமிழ் கைகோர்த்திருக்கிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10:30 மணிக்கு இந்த அதிரடியான நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். 2021 டிசம்பர் 27, திங்கள்கிழமை இரவு 10.30 மணிக்கு முதன் முதலாக ஒளிபரப்பாகிறது.

  இப்புதிய நிகழ்ச்சியின் தொடக்கம் குறித்து கலர்ஸ் தமிழ் சேனலின் பிசினஸ் ஹெட் திரு. எஸ். ராஜாராமன் கூறியதாவது: ”சமுதாயத்தில் நடைபெறும் நிகழ்வுகளின் ஒரு பிரதிபலிப்பாக ஜகமே தந்திரம் கதைகள் இடம்பெறும். சமூகத்திலுள்ள மிக முக்கிய சிக்கல்கள் பலவற்றின் மீது விழிப்புணர்வை உருவாக்க, மக்களின் குரலாக பிரபல நடிகர் செந்தில் குமார் தொகுப்பாளராக இந்நிகழ்ச்சியை வழங்குகிறார்.

  ஆரம்பத்தில் 30 எபிசோடுகளாக ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி குடும்ப வன்முறை, தவறான நடத்தை, போலீஸின் சித்ரவதை மற்றும் அராஜகம், மாணவர்களின் தற்கொலைகள், பாலின ரீதியில் பாகுபாடுகள், ஆன்மீகத்தின் பெயரில் நடைபெறும் ஏமாற்று வேலைகள் மற்றும் மோசடிகள் போன்ற பல்வேறு சமூக பிரச்சனைகள் மீது தமிழ் பேசும் பார்வையாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்க முயற்சிக்கும்”

  இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது பற்றி தனது சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்ட நடிகர் செந்தில் குமார், “சமுதாயத்தின் பாதிக்கப்பட்ட ஒரு பிரிவின் பிரதிபலிப்பாக இருக்கும் ஜகமே தந்திரம் கதைகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது எனக்கு கிடைத்திருக்கும் கௌரவமாகும். இந்நாட்டில் பல நபர்கள் எதிர்கொள்கின்ற இத்தகைய முக்கியமான பிரச்சனைகள் பற்றி இந்நிகழ்ச்சியின் மூலம் விவாதிக்க கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு எனக்கு பல விஷயங்களில் எனது கண்ணோட்டத்தை விரிவாக்கி உண்மை நிலையை உணரச் செய்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியை பார்த்த பிறகு நான் உணர்ந்தது போலவே பார்வையாளர்களும் உணர்வார்கள் என்று நான் நம்புகிறேன். இந்நிகழ்ச்சியை தொகுத்து பார்வையாளர்களுக்கு வழங்கும் அந்த நாளை நான் ஆவலோடு எதிர்நோக்குகிறேன்,” என்று கூறினார்.

  இதையும் படிங்க.. பிரபல நடிகையின் தம்பியா இவர்? பிக்பாஸ் போட்டியாளர் பற்றி வெளியான தகவல்!

  இந்த நிகழ்ச்சி தொடங்கப்படுவதற்கு ஒரு முன்னோட்டமாக கலர்ஸ் தமிழ் அதன் ஹேண்டில்கள் அனைத்திலும் ஒரு புதுமையான சமூக ஊடக பரப்புரையையும் தொடங்கியிருக்கிறது. சமுதாயத்தில் நிகழும் சமூக அநீதி தொடர்பான அவர்களது கருத்துகளையும், அனுபவங்களையும் தைரியமாக ஒலிக்கச் செய்ய மக்களை இது ஊக்குவிக்கும். குடும்ப வன்முறை / குடும்பத்தில் தவறான நடத்தை, பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் / தொந்தரவு மற்றும் குழந்தைகள் மீதான துஷ்பிரயோகம் ஆகியவை மூன்று முதன்மையான கருத்தாக்கங்களாக இந்நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன.

  இதையும் படிங்க.. பாக்கியலட்சுமி சீரியலின் வெற்றிக்கு காரணமே இந்த 2 ஆண்கள் தான்!

  நாட்டின் பல்வேறு பிராந்தியங்களில் நடைபெற்ற மயிர்கூச்செரியச் செய்யும் நிஜ நிகழ்வுகளின் கதைகளைக் காண திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் அலைவரிசையை டியூன் செய்யுங்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம். பார்வையாளர்கள் அவர்களது வசதிக்கேற்ப எந்த நேரத்திலும் இந்நிகழ்ச்சியை காண VOOT-ஐ டியூன் செய்யலாம்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published:

  Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், TV Serial

  அடுத்த செய்தி