ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கலர்ஸ் தமிழில் புத்தம் புது சீரியல்.. சாயா சிங் நடிப்பில் நம்ம மதுரை சிஸ்டர்ஸ் !

கலர்ஸ் தமிழில் புத்தம் புது சீரியல்.. சாயா சிங் நடிப்பில் நம்ம மதுரை சிஸ்டர்ஸ் !

கலர்ஸ் தமிழ்

கலர்ஸ் தமிழ்

நாடகத்தின் அறிமுகம் குறித்த ஒரு விளம்பர வீடியோவையும் ":நம்ம மதுரை சிஸ்டர்ஸ்" சீரியல் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  தனுஷ் நடிப்பில் வெளியாகி தியேட்டர்களில் நம்மை குத்தாட்டம் போட வைத்த ‘திருடா திருடி’ திரைப்பட புகழ் நடிகை சாயா சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உடன் சுனிதா, சங்கவி, மற்றும் ஐரா அகர்வால் ஆகியோர் நடித்துள்ள புத்தம் புதிய சீரியல் தான் நம்ம மதுரை சிஸ்டர்ஸ்.

  கலர்ஸ் தமிழ் சேனல் வழியாக வருகிற பிப்ரவரி 21 அன்று மாலை 7 மணி முதல் தினமும் ஒளிபரப்பாகவுள்ள இந்த சீரியல் தான் தற்போதைக்கு "டாக் ஆப் தி சின்னத்திரை டவுன்"!

  சுருக்கமாக, மதுரை மார்கெட்டில் கடுமையாக, நேர்மையாக உழைத்து முன்னுக்கு வந்த இந்திராணி, மேகலா, புவனா மற்றும் காவ்யா என்கிற நான்கு சகோதரிகளை பற்றிய கதையே இந்த 'நம்ம மதுரை சிஸ்டர்ஸ்'. சிறுவயதிலேயே அனாதையாக்கப்பட்ட இந்த நால்வரும் தங்கள் பல வருட கடின உழைப்பின் விளைவாக ‘அன்னம் அங்காடி’ என்கிற டிபார்ட்மெண்டல் ஸ்டோரைத் திறக்கிறார்கள்.

  இதையும் படிங்க.. குக் வித் கோமாளி சீசன் 3ல் இணைந்த சூப்பர் சிங்கர் பரத் பற்றி உலா வரும் கருத்துக்கள்! உண்மை என்ன?

  இந்த நாடகத்தின் அறிமுகம் குறித்த ஒரு விளம்பர வீடியோவையும் ":நம்ம மதுரை சிஸ்டர்ஸ்" சீரியல் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

  அதன் வழியாக இளம் வயதிலேயே அனாதையான நான்கு சகோதிரிகள், எதிரிகளையும் அவர்களது செல்வாக்கையும் தாக்குப்பிடித்து, பல ஆண்டுகள் கழித்து எப்படி முன்னேறுகிறார்கள், எப்படி மதுரை மார்க்கெட்டில் தனக்கான இடத்தை பிடித்தார்கள், எப்படி நகரம் முழுக்க தங்களை பற்றி பேச வைத்தார்கள் என்பதை காட்சிப்படுத்துகிறது.

  ப்ரோமோ வீடியோவை வைத்து பார்க்கும் போது, நம்ம மதுரை சிஸ்டர்ஸ் சீரியலானது குடும்ப போட்டி, தொழில் போட்டி, ஆணாதிக்கம், பெண் கல்வி, காதல் மற்றும் பாசம் போன்ற களங்களை கொண்டிருக்கலாம் என்பதை அறிய முடிகிறது.

  சுவாரசியமாக, இந்த நிகழ்ச்சிக்கான பின்னணி இசையை பார்வையற்ற இசைக்கலைஞர் ஆன வைக்கம் விஜயலட்சுமி அமைத்துள்ளார். தயாரிப்பாளர்களின் கூற்றுப்படி, வெளியிடப்பட்ட அறிவிப்பில், விஜயலட்சுமி மற்றும் அவரைப் போன்ற மற்ற சக்திவாய்ந்த பெண்களால் ஈர்க்கப்பட்டு வெளியாகும் இந்த புனைகதை நிகழ்ச்சி ஆனது பெண்களின் பல்வேறு அம்சங்களை முன்னிலைப்படுத்தும்,  பெண்களின் துணிச்சலையும் தைரியத்தையும் வெளிப்படுத்தும்.

  நினைவூட்டும் வண்ணம், நடிகை சாயா சிங், கடந்த 2019 ஆம் ஆண்டில், கே. ராஜீவ் பிரசாத் இயக்கிய "ரன்" என்கிற திரில்லர் நாடகத்தின் மூலம் தமிழ் தொலைக்காட்சி உலகிற்குள் காலடி எடுத்து வைத்தார். ஆரம்பத்தில் ரன் சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் கூட, உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்று காரணமாக 197 எபிசோட்களுடன் முடிந்தது.

  இதையும் படிங்க.. பிக் பாஸ் 5ல் சம்பளமே வேண்டாம் என்ற போட்டியாளர்! ஆனாலும் கடைசியில் நடந்த ட்விஸ்ட்!

  சாயா சிங் தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகை மற்றும் நடன இயக்குனர் ஆவார். இவர் தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக விஜி என்கிற கதாபாத்திரத்தில் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘திருடா திருடி’ மூலம் தமிழில் அறிமுகமானார்.

  குறிப்பிட்ட திரைப்படத்தில் வரும் 'மன்மத ராசா' பாடலின் வழியாக நடிகைகளும் கூட நடிகர்களுக்கு இணையாக, அவர்களை விட சிறப்பாகவே நடனம் ஆடுவார்கள் என்பதை சாயா சிங் நிரூபித்து காட்டி இருந்தார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: TV Serial