கந்தசஷ்டி தினத்தில் கலர்ஸ் தமிழ் டிவியில் “முருகன் ரகசியம்”

கந்தசஷ்டி தினத்தில் கலர்ஸ் தமிழ் டிவியில் “முருகன் ரகசியம்”

கந்தசஷ்டி தினத்தில் கலர்ஸ் தமிழ் டிவியில் “முருகன் ரகசியம்”!

ஆடி மாதத்தில் நடைபெறுகின்ற கந்த சஷ்டி திருவிழா நிகழ்வையொட்டி ஸ்ரீ ரவிசங்கரின் ஆசிரமத்திலிருந்தே ஒரு சிறப்பு நிகழ்வை கலர்ஸ் தமிழ் பிரத்யேகமாக ஒளிபரப்பவிருக்கிறது.

 • Share this:
  கொரோனா பெருந்தொற்றையொட்டி உலகெங்கும் மட்டுமன்றி, தமிழ்நாட்டிலும் பெரும்பாதிப்புகளை உருவாக்கியிருக்கின்ற நடப்பு நெருக்கடி நிலையின்போது நம்பிக்கையளிக்கும் நேர்மறை உணர்வையும் மற்றும் நல்ல மனநிலையையும் வழங்கி, தனது பார்வையாளர்களை ஊக்கப்படுத்தும் ஒரு முயற்சியாக கலர்ஸ் தமிழ் அலைவரிசையானது மற்றுமொரு நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

  வீட்டில் இருந்துகொண்டே முருகப்பெருமான் பற்றி குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வழங்குகின்ற அற்புதமான கற்பித்தல்கள் மற்றும் விளக்கங்களைப் பெற்று கலாச்சார பாரம்பரிய பிணைப்பில் ஈடுபாட்டுடன் தனது பார்வையாளர்கள் தொடர்ந்து நீடிப்பதை உறுதி செய்வதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

  ஆடி மாதத்தில் நடைபெறுகின்ற கந்த சஷ்டி திருவிழா நிகழ்வையொட்டி ஸ்ரீ ரவிசங்கரின் ஆசிரமத்திலிருந்தே ஒரு சிறப்பு நிகழ்வை கலர்ஸ் தமிழ் பிரத்யேகமாக ஒளிபரப்பவிருக்கிறது. சஷ்டியின் முக்கியத்துவத்தை நேர்த்தியாக எடுத்துரைக்கும் இந்த நிகழ்வானது, பார்வையாளர்கள் மனரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் வலுவோடும், ஆரோக்கியத்தோடும் வாழ்க்கையை நடத்துவதற்கு பெரும் உதவியாக இருக்கும்.  இதைத்தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்களை உணர்வுரீதியாக ஒருங்கிணைக்கின்ற, கந்தசஷ்டியை அனைவரும் ஒன்றுகூடி ஓதுகின்ற ஒரு நிகழ்வும் இடம்பெறும். ‘முருகன் ரகசியம்’ என்ற பெயரில் இச்சிறப்பு நிகழ்ச்சியானது, 2020 ஜுலை 26 ஞாயிறன்று மாலை 5.30 மணியிலிருந்து கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் மட்டும் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது.

  கலர்ஸ் தமிழ் அலைவரிசையின் பிசினஸ் ஹெட் அனுப் சந்திரசேகரன் இது குறித்து பேசியபோது, “புதுமையான மற்றும் தரமான உள்ளடக்கத்தைக் கொண்டு தமிழ்நாட்டு கலாச்சாரத்தின் வளமான பாரம்பரியத்திற்கு பொருத்தமான முறையில் கதை சொல்வது மற்றும் நிகழ்ச்சிகளை வழங்குவது மீது கலர்ஸ் தமிழ் எப்போதுமே சிறப்பு கவனம் செலுத்தி வந்திருக்கிறது.

  கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக, அறிவிக்கப்பட்ட பொதுமுடக்க காலத்திலும் கூட எமது பார்வையாளர்கள் தொடர்ந்து மகிழ்விக்கப்படுவதையும் மற்றும் பிணைப்பில் இருப்பதையும் உறுதி செய்வதற்காக தொடர்ந்து சிறப்பான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்ளத் தொடங்கினோம். கந்தசஷ்டி திருவிழா கொண்டாடப்படும் நன்னாளில், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் ஆசிரமத்திலிருந்து ஒளிபரப்படுகின்ற இந்த நிகழ்ச்சியானது, எமது பார்வையாளர்கள் அனைவரின் உள்ளார்ந்த சமநிலை மற்றும் ஆன்மீக நலனை மேம்படுத்தும். எமது பார்வையாளர்களை இன்னும் மகிழ்ச்சியிலும், திருப்தியிலும் ஆழ்த்த வேண்டும் என்ற எமது பொறுப்புணர்வானது, முக்கியமான கலாச்சார நிகழ்வுகளை நாங்கள் தவறவிடாமல் இருப்பதை உறுதிசெய்ய எங்களை பொறுப்புள்ளவர்களாக ஆக்கியிருக்கிறது. இந்த தெய்வீக அனுபவமானது, இந்த நெருக்கடியான காலத்தை நம்பிக்கையோடு கடந்துசெல்ல உதவுவதோடு, அவர்களின் நேர்மறையான எண்ணங்களை சிறப்பாக உயர்த்தும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று கூறினார்.

  முருகப்பெருமான், தமிழ் கடவுளாக, தமிழ் பேசும் மக்களால் அறியப்படுகிறார். உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் மனிதாபிமானம் மிக்க தலைவரும், ஆன்மீக குருவுமான குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், முருகப்பெருமானின் உபதேசங்கள் பற்றியும் சஷ்டியின் முக்கியத்துவம், தனிநபர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீதான அதன் தாக்கங்கள் பற்றியும் சிறப்பான சிந்தனைகளை பகிர்ந்துகொள்ளும் இந்நிகழ்வானது, மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகிறது.

  உலகெங்கிலும் உள்ள தமிழ்பேசும் மக்களை பிரார்த்தனையில் ஒருங்கிணைத்து, மனவலிமையை வழங்கி, அவர்களை பாதுகாக்கக்கூடிய கந்தசஷ்டி கவசத்தை அனைவரும் ஒன்றுகூடி பாடுகின்ற அமர்வானது, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஆசிரமத்தில் மாலை 6.00 மணிக்கு நடைபெறும். நடப்பு பொதுமுடக்க சூழலின் காரணமாக, அமலிலுள்ள கட்டுப்பாடுகளை கருத்தில்கொண்டு இந்நிகழ்வை ஒளிபரப்ப கலர்ஸ் தமிழ் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருக்கிறது.
  Published by:Sankaravadivoo G
  First published: