ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் ’இன்பா டிவிங்கிள் லில்லி’.. பக்கா ஃபேமிலி டிராமா!

கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் ’இன்பா டிவிங்கிள் லில்லி’.. பக்கா ஃபேமிலி டிராமா!

இன்பா டிவிங்கிள் லில்லி

இன்பா டிவிங்கிள் லில்லி

இந்த பெண்களின் அதிரடி அட்டகாசத்தை கண்டு ரசிக்க தயாராகுங்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கலர்ஸ் தமிழில் வரும் ஞாயிறு (ஜூலை 10) அன்று ’இன்பா டிவிங்கிள் லில்லி’ திரைப்படம் ஒளிப்பரப்பாகிறது.

நகைச்சுவையும், ஆக்‌ஷனும் கலந்த திரைக்கதையின் மூலம் பெண்களை முன்னிலைப்படுத்தும் வகையில், ஜூலை 10 ஞாயிறு அன்று பிற்பகல் 2:00 மணிக்கு இன்பா டிவிங்கிள் லில்லி திரைப்படத்தின் உலகத் தொலைக்காட்சி ப்ரீமியரை, கலர்ஸ் தமிழ் வழங்குகிறது. நகைச்சுவையில் அதிரடியாக கலக்குகிற பிரபல நட்சத்திரங்களான நடிகை சரண்யா பொன்வண்ணன், நடிகை கோவை சரளா மற்றும் நடிகை கல்பனா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களாக நடித்திருக்கும் இந்த பொழுதுபோக்கு திரைப்படமானது, ஒரு வங்கி கொள்ளை சம்பவத்தையொட்டி நிகழ்கிற குழப்பத்தையும், கலாட்டாவையும் நகைச்சுவையாக சித்தரிக்கிறது.

சீரியலில் காட்டுவதெல்லாம் சும்மா... நம்பாதீங்க! ’முத்தழகு’ ஷோபனா வேற லெவல் மாடர்ன் பொண்ணு

ஆர்.கே. வித்யாதரன் எழுதி, இயக்கி 2018-ல் வெளிவந்த இத்திரைப்படத்தில் நடிகர் மனோபாலா, நடிகர் மன்சூரலிகான், நடிகை தேவதர்ஷினி மற்றும் நடிகர் இமான் அண்ணாச்சி உட்பட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.

சிறப்பான தோழிகளான இன்பா (நடிகை சரண்யா), டிவிங்கிள் (நடிகை கோவை சரளா) மற்றும் லில்லி (நடிகை கல்பனா) ஆகியோரின் வாழ்க்கையை இத்திரைக்கதை சித்தரிக்கிறது. இன்பாவின் பேத்தி அஷ்மிதாவுக்கு (நடிகை அஷ்மிதா) தீவிர நோய் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட அவளுக்கு சிகிச்சையளிப்பதற்காக இந்த மூன்று தோழிகளும் பணத்தைத் திரட்டுகின்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கல்லுத்து (நடிகர் மன்சூர் அலி கான்) மற்றும் அவனது ரவுடி கும்பலால் ஒரு வங்கியில் நடத்தப்படும் தீவிரவாத தாக்குதலில் தாங்கள் சேகரித்த அனைத்து பணத்தையும் இவர்கள் இழந்து விடுகின்றனர். வங்கி மேலாளரும் (நடிகை சித்ரா லட்சுமணன்), இவர்களுக்கு உதவ மறுத்துவிடுகிறார்.

அந்த விஷயம் தான் காரணமா? ‘அபி டெய்லர்’ சீரியலில் முக்கிய மாற்றம்!

வேறு வழியில்லாத காரணத்தால் தாங்கள் கஷ்டப்பட்டு திரட்டிய பணத்தை மீண்டும் திரும்பப் பெறுவதற்கு அதிரடியாக வங்கியில் திருட இத்தோழிகள் முடிவுசெய்கின்றனர். இந்த வங்கிக் கொள்ளை சம்பவத்தின்போது நிகழும் காமெடி கலாட்டாவும் மற்றும் அதைத் தொடர்ந்து அஷ்மிதாவின் உயிரை இவர்களால் காப்பாற்ற முடிகிறதா என்பதும் திரைக்கதையின் எஞ்சிய பகுதியாக சுவாரஸ்யமாக நீள்கிறது.

தொலைக்காட்சி ப்ரீமியர் ஒளிபரப்பு குறித்து பேசிய இத்திரைப்பட இயக்குநர் ஆர். கே. வித்யாதரன், “பெண்களை மையமாகக் கொண்ட சக்திவாய்ந்த கதாபாத்திரங்களை தமிழ் இரசிகர்களுக்கு அறிமுகம் செய்வது என்பது இத்திரைப்பட உருவாக்கத்தின் ஒரு கருத்தாக்கமாக இருந்தது. இட்லி (இன்பா, டிவிங்கிள், லில்லி) என்ற இத்திரைப்படத்தின் உலகத் தொலைக்காட்சி ப்ரீமியர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாவது எனக்கு அதிக மகிழ்ச்சியளிக்கிறது. இத்திரைப்படத்தை கண்டு இரசிப்பதன் மூலம் ஆனதமான வாரஇறுதி நாட்களை இரசிகர்கள் பெறுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று கூறினார்.

colors tamil movie time inba twinkle lilly Colors Tamil brings the World Television Premiere on sunday
இன்பா டிவிங்கிள் லில்லி’

இதைத் தொடர்ந்து பேசிய நடிகை சரண்யா, “இது உண்மையிலேயே எனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமான, தனிச்சிறப்பான திரைக்காவியம். பெண்கள் முதன்மையான கதாபாத்திரங்களாக இடம்பெறும் திரைக்கதைகளை பார்ப்பது மிகவும் அரிது. இத்திரைப்படத்தில் எங்களது நடிப்பையும், முயற்சிகளையும் கலர்ஸ் தமிழின் இரசிகர்கள் நிச்சயம் பாராட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன். வாய்விட்டு சிரிக்கக்கூடிய இனிய அனுபவத்தை இந்த வாரஇறுதி நாட்களில் இத்திரைப்படம் வழங்கும் என்பது நிச்சயம்,” என்று கூறினார்.

இந்த ஞாயிறு ஜுலை 10 பிற்பகல் 2:00 மணிக்கு கலர்ஸ் தமிழில் இந்த பெண்களின் அதிரடி அட்டகாசத்தை கண்டு இரசிக்க தயாராகுங்கள்.அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், Television