கலர்ஸ் தமிழில் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘99 சாங்ஸ்’ திரைப்படம்!

ஏ.ஆர்.ரஹ்மான்

தான் நேசிக்கின்ற இளம் பெண்ணை திருமணம் செய்வதற்கு முன்பு, 100 பாடல்களை எழுதவேண்டும் என்ற சவாலை மையப்படுத்தியது தான் 99 சாங்ஸ் படம்.

  • Share this:
    கலர்ஸ் தமிழ் சேனல், இந்த வார இறுதி நாட்களில் மூவி ஆஃப் தி மன்த் (movie of the month)-ன் ஒரு பகுதியாக இந்த ஆண்டில் அதிக எதிர்பார்ப்புகளை பெற்றிருக்கும் இசை சார்ந்த திரைப்படமான ஏஆர். ரகுமானின் 99 ஸாங்ஸ் (99 Songs) திரைப்படத்தை ஒளிபரப்பவிருக்கிறது.

    காதல், சோகம், ஈர்ப்பு மற்றும் மனதை கவரும் கதைக்களத்தோடு உங்களை மெய்மறக்கச் செய்து, இசையோடு வெளி வந்த இந்தப் படத்தை ஏ.ஆர்.ரஹ்மானின் YM பேனர்ஸின் முதல் தயாரிப்பாக உருவாகியிருந்தது. ஆகஸ்ட் 22, ஞாயிறன்று பிற்பகல் 1.00 மணி மற்றும் 4.00 மணிக்கு இத்திரைப்படத்தை கண்டு ரசிக்க கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை மறவாமல் டியூன் செய்யுங்கள்.

    தான் நேசிக்கின்ற இளம் பெண்ணை திருமணம் செய்வதற்கு முன்பு, 100 பாடல்களை எழுதவேண்டும் என்ற சவாலுக்கு உட்படுத்தப்பட்ட இசையில் பேரார்வம் கொண்ட இசைக்கலைஞரான ஜே (எஹான் பட் – ன் நடிப்பில்) என்ற கதாபாத்திரத்தைச் சுற்றி இதன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. காட்சிகளின் மூலம் கதையை மிக நேர்த்தியாக சொல்கின்ற 99 ஸாங்ஸ் (99 Songs) திரைப்படப் பாடல்கள் இசை ரசிகர்களுக்கு சிறப்பான விருந்து. இசையின் நேர்த்தியை இன்னும் உச்சத்திற்கு எடுத்துச்செல்லும் வகையில் பென்னி தயாள், ஸ்வேதா மோகன், அர்ஜித் சிங் உட்பட, பல பிரபல பாடகர்கள் இதில் பாடியிருக்கிறார்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த முதல் அறிமுக நிகழ்வு குறித்துப் பேசிய இசைப்புயல் ஏஆர். ரகுமான், “எனது திரைப்படமான 99 ஸாங்ஸ் (99 Songs), கலர்ஸ் தமிழ் போன்ற தமிழகத்தின் பிரபல சேனலில் ஒளிபரப்பப்படவிருப்பதை அறிந்து நான் மிகவும் உற்சாகமும், ஆனந்தமும் கொண்டிருக்கிறேன். YM பேனர்ஸின் கீழ் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படமாக இது இருப்பதால், பார்வையாளர்களும், ரசிகர்களும் இந்த திரைப்படமாக்கல் அனுபவத்தை எந்த அளவிற்கு அனுபவித்து ரசிக்கவிருக்கின்றனர் என்று அறிய மிகவும் ஆர்வத்தோடும், எதிர்பார்ப்போடும் இருக்கிறேன். 99 ஸாங்ஸ் (99 Songs), திரைப்படத்திற்கான பாடல்களை எழுதுவது ஒரு இசைக்கலைஞராக எனது இசை திறனை மேலும் உயர்த்தி அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல உதவியிருக்கிறது. இத்திரைப்படத்தை ரசித்து, அனுபவிப்பதோடு, இப்பாடல்களின் இசையையும் உணர்ந்து இனிய அனுபவம் பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

    அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1555), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம். தங்களது சௌகரியத்திற்கேற்றவாறு எந்த நேரத்திலும் இத்திரைப்படங்களைக் காண VOOT – ஐ பார்வையாளர்கள் டியூன் செய்யலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: