Home /News /entertainment /

கலர்ஸ் தமிழில் நடிகை குஷ்பு எடுத்திருக்கும் புதிய அவதாரம்! - பிரபலங்கள் வாழ்த்து!

கலர்ஸ் தமிழில் நடிகை குஷ்பு எடுத்திருக்கும் புதிய அவதாரம்! - பிரபலங்கள் வாழ்த்து!

நடிகை குஷ்பு

நடிகை குஷ்பு

நடிகையாக மட்டுமே நமக்கு தெரிந்த குஷ்பு, எழுத்தாளராக எவ்வாறு மிளிர்கிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

    இந்த நடிகையை தெரியாதவர் யாருமே இருக்க முடியாது! இரண்டு தலைமுறை நடிகர்களோடு நடித்து, இன்னும் மூன்றாவது தலைமுறை நடிகர்களோடு நடித்துக் கொண்டிருக்கும் இவர் வெள்ளித்திரையில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர். அதே போல சின்னத்திரையிலும் தனக்கான முத்திரையை பதித்துள்ளார். தமிழகத்தில் இந்த நடிகைக்காக மட்டுமே கோவில் கட்டப்பட்டுள்ளது என்று கூறினாலே அந்த நடிகை யார் என்று தெரிந்து விடும்! ஆம், நடிகை குஷ்பு தான். போட்டியே இல்லாத, பல ஆண்டுகள் முன்னணி நடிகையாக திரைப்படங்களில் நடித்த குஷ்பு, 20 வருடங்களுக்கு முன்பாகவே சின்னத்திரையில் அறிமுகமானவர்.

    நடிகை என்பதைக் கடந்து தயாரிப்பாளர், கிரியேட்டிவ் டைரக்டர் மற்றும் தொழில் முனைவோராகவும் பல ஆண்டுகளாக பணிபுரிந்தார். பன்முகத்தன்மை கொண்ட நடிகை குஷ்பு தற்போது புதிய அவதாரம் ஒன்றை கொண்டுள்ளார்.

    நடிகை குஷ்பு தற்போது ஒரு சீரியல் எழுத்தாளராக தனது புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகவிருக்கும் புத்தம் புதிய சீரியலான ‘மீரா’ என்ற சீரியலுக்கான எழுத்தாளராக நடிகை குஷ்பு அறிமுகமாகிறார்.

    இந்த சீரியலில் மீரா என்ற பாத்திரத்திலும் இவர் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகர் சுரேஷ் மேனன் நடிக்கிறார். இந்த சீரியல் கலர்ஸ் தமிழில் விரைவில் ஒளிபரப்பாகும் என்று அதிகாரபூர்வமான செய்தி வெளியாகியுள்ளன.

    இதையும் படிங்க.. பாரதி கண்ணம்மா வெண்பாவின் உண்மையான முகம் இதுதானாம்.. வருத்தெடுக்கும் ரசிகர்கள்! அப்படி என்ன செய்தார்?

    மீரா சீரியலுக்கு முன்பு, மங்கலம் என்ற கதாபாத்திரத்தில் கோகுலத்தில் சீதை சீரியலில் இறுதியாக குஷ்பு நடித்திருந்தார். குஷ்பு தொலைக்காட்சிகளில் 1995 ஆம் ஆண்டே அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகாமி தொடரில் ஜோதி என்ற பாத்திரத்திலும், நந்தினி சீரியலில் பார்வதி என்ற பாத்திரத்திலும், மகாலட்சுமி என்ற பாத்திரத்தில் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலிலும் குஷ்பு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க.. முடிவில் உறுதியாக இருக்கும் டாக்டர் பாரதி… என்ன செய்ய போகிறார் கண்ணம்மா?

    நடிகை குஷ்பு


    டைட்டில் ரோலில் நடிப்பதோடு, சீரியலின் கதாசரியரும் குஷ்பு தான். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் மீரா சீரியலின் படப்பிடிப்பு தொடக்க நிகழ்வு நேற்று, பிப்ரவரி 14 அன்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வில் மீரா சீரியலின் கதையை குஷ்பு தான் எழுதியுள்ளார் என்பதை வெளிப்படுத்தினார். நடிகை குஷ்புவுக்கு பல இடங்களிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கிறது.



    “இன்று என்னுடைய புதிய முயற்சியாக மீராவை நான் தொடங்குகிறேன்! இந்த சீரியல் கலர்ஸ் தமிழ் சேனலில் விரைவில் ஒளிபரப்பாகும். நான்தான் இதற்கு கதையும் எழுதி இருக்கிறேன். எனக்கு உங்களுடைய அன்பும் ஆதரவும் உற்சாகமும் தேவை” என்று ட்விட்டரில் புகைப்படங்களோடு நடிகை குஷ்பு ட்வீட் செய்துள்ளார்.

    நடிகையாக மட்டுமே நமக்கு தெரிந்த குஷ்பு, எழுத்தாளராக எவ்வாறு மிளிர்கிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், Kushboo, TV Serial

    அடுத்த செய்தி