மக்களுக்கான சேவையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட சிறப்பான பெண்மணிகளுக்கு கலர்ஸ் தமிழின் மங்கையர் திருவிழா நிகழ்வில் விருதுகள் வழங்கப்பட்டன.
பொழுதுபோக்கு சேனல்களிலிருந்து மாறுபட்டு தனித்துவமான நிகழ்ச்சிகளை வழங்கிவரும் கலர்ஸ் தமிழ் சேனல், மங்கையர் திருவிழா 2022 என்ற பெயரில் நடத்திவரும் சிறப்பான நிகழ்வில் தஞ்சாவூரைச் சேர்ந்த பெண் சாதனையாளர்களை மனதார பாராட்டி கௌரவித்து கொண்டாடியது. பல நபர்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தி சமூகத்திற்கு சீரிய சேவையாற்றிவரும் தற்காப்பு பயிற்சியாளரான திருமதி ஷீலா அவர்களை இந்நிகழ்வில் கலர்ஸ் தமிழ் கௌரவித்தது. பாரத் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் தஞ்சாவூர் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி.ரவளி ப்ரியா கந்தபுனேனி IPS, ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சாதனைப் பெண்மணிகளை பாராட்டி கௌரவித்தார்.
மகளிர் திருவிழா 2022 என்பது கலர்ஸ் தமிழ் சேனலின் ஒரு முதன்மை நிகழ்ச்சி. சமுதாயத்தின் நலனுக்காக பணியாற்றியிருக்கிற மற்றும் இதன் மூலம் சமுதாயத்தில் மாற்றத்தை உருவாக்கி நற்பெயரை மக்களிடமிருந்து பெற்றிருக்கிற பெண்களை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தேடி, அடையாளம் கண்டு அவர்களை பாராட்டி கௌரவிப்பதே இச்செயல்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் செயலாற்றிவரும் இத்தகைய தன்னலமற்ற, தைரியமிக்க பெண் சாதனையாளர்களை அங்கீகரிப்பதற்காகவே கலர்ஸ் தமிழ் இன்றைய நிகழ்வை நடத்தியது.
கல்வியாளரும், உத்வேகமளிக்கும் பேச்சாளருமான திரு P பிரசன்னா வழங்கிய ஊக்கமளிக்கும் சிறப்புரையோடு இந்நிகழ்வு ஆரம்பமானது. தங்களது கனவுகளை கைவிடாமல் அவற்றை நனவாக்குவதற்காக தளராமல் செயலாற்றவும் மற்றும் தங்களையே உள்ளூர ஆராய்ந்து தங்களது திறன்களை கண்டறியவும் அவரது உரை பெண்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்தது. அதைத் தொடர்ந்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற ஊக்கமளிக்கும் வகையில் Zumba அமர்வு நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மகப்பேறு மருத்துவர் டாக்டர் மணிமலர், பெண்கள் கவனிக்க தவறுகிற உடல் சுகாதாரம் பற்றிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்து பார்வையாளர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.

மங்கையர் திருவிழா
பெண்மையின் திறனையும், மகத்துவத்தையும் கொண்டாடிய ஒரு நாள் நிகழ்வாக நடைபெற்ற இதில் மேற்கூறப்பட்ட சிறப்புரைகளோடு நடனம், இசை, பாடல்கள் மற்றும் ஹென்னா ஆர்ட் போன்ற பல பொழுதுபோக்கு அம்சங்களும் சேர்த்து வழங்கப்பட்டன. கலர்ஸ் தமிழ் சேனலின் பிரபல நட்சத்திரங்கள் நாஞ்சில் விஜயன், தர்ஷினி கவுடா, சமீர், மற்றும் சுகுமார் ஆகியோரும் இதில் பங்கேற்று மக்களை மகிழ்விக்கும் நிகழ்ச்சிகளை வழங்கினர். இந்நாளை இன்னும் குதூகலமாக ஆக்கும் வகையில் பல்வேறு வயது பிரிவுகளைச் சேர்ந்த பெண்களும் பார்வையாளர்கள் முன்பு, தைரியத்தோடும், உற்சாகத்தோடும் தங்களது திறன்களை வெளிப்படுத்தினர்.
உயிரைப் பறித்த பிளாஸ்டிக் சர்ஜரி... சீரியல் நடிகை பரிதாப மரணம்
சமுதாயத்திற்கு ஆற்றிய தன்னலமற்ற சேவைக்காக தஞ்சாவூரைச் சேர்ந்த மேற்குறிப்பிடப்பட்ட பெண் சாதனையாளர்களுக்கு கௌரவமிக்க விருதுகள் வழங்கப்பட்டது இந்நாளின் மைய நிகழ்வாக அமைந்தது. நாள் முழுவதும் நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. பெண்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஆடிய நடனம் அனைவரையும் கவர்ந்தது.

மங்கையர் திருவிழா
இந்நிகழ்வின்போது தஞ்சாவூர் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆற்றிய உரையில், “இம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, இதுவரை கௌரவிக்கப்படாத பெண் சாதனையாளர்களை அடையாளம் காணும் மங்கையர் திருவிழா நிகழ்வில் பங்கேற்பது எனக்கு வழங்கப்பட்டிருக்கும் கௌரவமாகும். திருமதி ஷீபா அவர்களின் தன்னலமற்ற சேவைக்காக விருது பெற்றதற்காக அவர்களை நான் நெஞ்சாரப் பாராட்டுகிறேன். பெண்கள் தற்காப்பு அம்சங்களைக் கற்றுக்கொள்வதைப் பார்ப்பது உண்மையில் ஊக்கமளிக்கிறது. ஆண்களும் பெண்களும் தங்களை நிரூபிக்க எண்ணற்ற வாய்ப்புகள் உள்ள இந்த மாறிவரும் காலங்களில், பெண்கள் தங்கள் திறன்களைக் கண்டறிவது முக்கியம். பல்வேறு துறைகள் மற்றும் பணிகளைச் சேர்ந்த தனித்துவமான ஆளுமைகளைக் கொண்ட பல்வேறு சாதனையாளர்களை இந்நிகழ்வின்போது காண்பது மகிழ்ச்சியோடு உற்சாகத்தையும் சேர்த்து வழங்குகிறது. தைரியத்தோடு பெண்கள் முன் வரவும் மற்றும் தங்களது பணிகளிலும் சேவைகளிலும் இன்னும் உயர்வான சாதனை அளவுகளை எட்டவும் பெண்களுக்கு ஊக்கமளித்து வரும் கலர்ஸ் தமிழ் சேனலை பாராட்டுவதில் நான் பெருமைகொள்கிறேன்” என்றார்.
கலர்ஸ் தமிழ் சேனலின் பிசினஸ் ஹெட் திரு. ராஜாராமன். S இந்நிகழ்வு பற்றி பேசுகையில், “பெண்களுக்கு உத்வேகமளிக்கிற மற்றும் அவர்கள் எதையெல்லாம் சாதிக்கக்கூடிய திறமையாளர்களாக இருக்கின்றனர் என்று சுட்டிக்காட்டுகிற ஒரு புதுமையான முயற்சியே இந்த மங்கையர் திருவிழா. நிஜ வாழ்க்கையில் பெண்களிடமிருந்து கிடைத்திருக்கும் உத்வேகத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் எமது நிகழ்ச்சிகளின் மூலம் நேர்மறையான அம்சங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க நாங்கள் எப்போதும் செயலாற்றி வந்திருக்கிறோம். இக்குறிக்கோளையொட்டி, சமுதாயத்திற்கு முன்மாதிரி நபராகத் திகழக்கூடிய சிறப்பான சாதனையாளர்களை அடையாளம் காண்பதே மங்கையர் திருவிழா செயல்திட்டத்தின் நோக்கமாகும். அத்துடன், நேர்மறையான சமூக மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு பங்களிப்பை வழங்கியிருக்கிற சாதனைப் பெண்களை இந்நிகழ்வின் மூலம் கௌரவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பெண்மையின் மகத்துவத்தையும் மற்றும் அவர்களது சாதனைகளையும் இத்திட்டம் மூலம் கொண்டாட எமது சேனல் விழைகிறது. இந்நிகழ்வின் மூலம் திறன்மிக்க நபர்களை கண்டறிய முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்று கூறினார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.