கலர்ஸ் தமிழின் மங்கையர் திருவிழா 2022 என்ற சிறப்பான செயல்முயற்சியின் ஒரு அங்கமாக மானுடத்திற்கு பெண்கள் வழங்கி வருகின்ற உன்னதமான சேவையை கௌரவிக்கும் வகையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த Ms. R. ஹேமலதா மற்றும் Ms. R. அம்சவேணி என்ற சாதனை பெண்மணிகளை கலர்ஸ் தமிழ் இன்று கௌரவித்தது. சேலம், குஜராத்தி சமாஜ் கல்யாண மண்டபத்தில் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட இந்த மாபெரும் நிகழ்வில் சேலம் மாவட்ட காவல்துறையின் துணை கண்காணிப்பாளர் திருமதி. தையல் நாயகி, தலைமை விருந்தினராகவும், தருமபுரி மாவட்ட வருவாய் அதிகாரி திருமதி. சத்யா, சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்றனர்.
1500-க்கும் அதிகமான பெண்கள் இந்நிகழ்வில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. தூய்மைபராமரிப்பை ஊக்குவித்து முன்னிலைப்படுத்தும் நோக்கத்தோடு, சேலம் புதிய பேருந்து நிலையம் போன்ற நகரின் முக்கிய அமைவிடங்களில் பசுமை வண்ணம் தீட்டி நகரை அழகுப்படுத்தும் முயற்சியில் சேலம் மாநகராட்சி நிர்வாகத்தோடும் கவின் அரசு கலைக் கல்லூரியோடும் கலர்ஸ் தமிழ் சேனல் கைகோர்த்து இதன் சமூகப் பொறுப்புறுதியை கோடிட்டுக் காட்டியது.
கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த ’ஹாஸ்டல்’
தனது தனி முத்திரை பதித்த நிகழ்வாக மங்கையர் திருவிழா 2022 – ஐ கலர்ஸ் தமிழ் சேனல் சிறப்பாக நடத்தி வருகிறது. தாங்கள் வசிக்கும் சமூகங்களுக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கின்ற மற்றும் சமுதாயத்தில் வலுவாக தங்களை நிலைநிறுத்திக்கொள்ள சீரிய முயற்சிகளை எடுத்திருக்கும் பெண்களை அங்கீகரிக்கவும் மற்றும் அவர்களைப் பாராட்டி கௌரவிக்கவும் இத்திருவிழாவை கலர்ஸ் தமிழ் நடத்தி வருகிறது. ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் தேனி ஆகிய நகரங்களில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட இந்நிகழ்வைத் தொடர்ந்து சேலத்தில் தைரியத்துடன், சமூகசேவையாற்றி வரும் சாதனைப் பெண்களை கொண்டாடி கௌரவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மங்கையர் திருவிழாவை இம்மாநகரில் கலர்ஸ் தமிழ் ஏற்பாடு செய்து நடத்தியது.

கலர்ஸ் தமிழின் மங்கையர் திருவிழா
சமூகம் சார்ந்த, சுற்றுச்சூழல்பாதுகாப்பு சார்ந்த பிரச்சனைகளின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வதற்கு உதவியிருக்கும் சிறப்பான கலைத்திறனுக்காகவும் மற்றும் உலக சாதனைகளை நிகழ்த்த இளம் சிறார்களுக்கு உதவியிருப்பதற்காகவும் Ms. R. ஹேமலதாவிற்கு கௌரவம் மிக்க இவ்விருது வழங்கப்பட்டது. உடல் ஊனமுற்ற நபர்களுக்கு வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்க ஆதரவளித்து வரும் சுபம் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற அறக்கட்டளை நிறுவனத்தை நடத்தி வரும் Ms. R. அம்சவேணி அவர்களின் சிறப்பான சமூகப் பணியை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கும் மங்கையர் திருவிழா விருது வழங்கி சிறப்பித்தது.
முடிவுக்கு வந்த குஷ்புவின் ’மீரா’ சீரியல்.. கிளைமாக்ஸில் காத்திருக்கும் ட்விஸ்ட்!
காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர். சத்யா சுதாகர் பங்கேற்ற பொது சுகாதார அமர்வோடு மங்கையர் திருவிழா நிகழ்ச்சி ஆரம்பமானது. ஆரோக்கியமான, சமநிலையான வாழ்க்கையை நடத்த, வாழ்க்கைமுறை மேம்பாடுகள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் பற்றி பெண்களுக்கு மிக நேர்த்தியான ஆலோசனைகளை அவர் வழங்கினார். உணர்வுசார்ந்த மற்றும் உடல் சார்ந்த நலத்தைப் பராமரிக்க எப்படி நேர்மறை மாற்றங்களை எப்படி செய்ய முடியுமென்று Ms. வித்யா நாகநாதன் ஆலோசனை வழங்கினார். அத்துடன், பெண்கள் எப்படி அவர்களது உணர்வு சார்ந்த துயரத்திலிருந்து விடுபட்டு நிவாரணம் காண்பது மற்றும் நெருக்கடியான பிரச்சனைகளை எப்படி கையாள்வது என்பது பற்றியும் அவர் எடுத்துரைத்தார். அதைத்தொடர்ந்து ஜும்பா நடன உடற்பயிற்சி நிகழ்வும் நடைபெற்றது. ரெட்டியூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைந்து இலவச தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் வழங்கும் தடுப்பூசி முகாமும் கலர்ஸ் தமிழ் மேற்கொண்ட ஒரு முயற்சியாகும்.
ஒரு நாள் கொண்டாட்டமாக நடைபெற்ற இந்நிகழ்வில் நடனம், இசைப்பாடல், ஹென்னா கலை, கரிகேட்டுர் ஆர்ட் ஆகியவை உட்பட பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் பெண்களின் திறனையும், மனஉறுதியையும் எடுத்துக்காட்டும் வகையில் அமைந்தன. இந்த கொண்டாட்ட நிகழ்வின்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் பிரபல கலைஞர்களான ரஷ்மிதா ரோஜா, சங்கவி, நாஞ்சில் விஜயன், சுகுமார் மற்றும் ஶ்ரீதேவி ஆகியோர் பங்கேற்று தங்களது நிகழ்ச்சிகளின் மூலம் பார்வையாளர்களை குதூகலப்படுத்தினர். அதுமட்டுமின்றி, பல்வேறு வயது பிரிவைச் சேர்ந்த பெண்கள் தைரியமாக மேடையேறி தங்களது திறமைகளை பலரும் அறியுமாறு வெளிப்படுத்தியது இக்கொண்டாட்டத்திற்கு இன்னும் கூடுதல் சிறப்பு சேர்த்தது. கவின் கலைக் கல்லூரி மாணவி திருமதி நிஷாவால் 2 நிமிட இடைவெளியில் ஆர்வமுள்ள ஒவ்வொரு நபரின் அற்புதமான கரிகேட்டுர் ஆர்ட் வரையப்பட்டது.

கலர்ஸ் தமிழின் மங்கையர் திருவிழா
சமுதாயத்திற்கு ஆற்றிய சேவைக்காக சேலத்தைச் சேர்ந்த பெண் சாதனையாளர்களுக்கு கௌரவம் மிக்க விருது வழங்கப்பட்டது மற்றும் அதைத்தொடர்ந்து நாள் முழுவதும் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதி நிகழ்வாக அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஆடும் நடன நிகழ்ச்சியுடன் இத்திருவிழா நிறைவடைந்தது. மேலும், இந்நிகழ்விற்கு முன்னதாக இப்பிராந்தியத்தைச் சேர்ந்த மக்களுக்காக நடத்தப்பட்ட கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பெயர்களையும் கலர்ஸ் தமிழ் சேனல் அறிவித்தது. இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த வெற்றியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தங்க நாணயம் வெகுமதியாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின்போது உரையாற்றிய சேலம் மாவட்ட காவல்துறையின் துணை கண்காணிப்பாளர் திருமதி. தையல் நாயகி, “மாநிலம் முழுவதிலும் இதுவரை இன்னும் அங்கீகரிக்கப்படாத சாதனையாளர்களை கௌரவிக்கிற நிகழ்வான மங்கையர் திருவிழாவில் பங்கேற்பதை சிறந்த கௌரவமாக நான் கருதுகிறேன். சமுதயாத்திற்கு அவர்கள் செய்து வருகின்ற சிறப்பான அறப்பணி மற்றும் சேவைக்காக ஹேமலதா மற்றும் அம்சவேணி என்ற இந்த சாதனைப் பெண்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் செயலாற்றுகின்ற தளங்களில் சாதனைகள் நிகழ்த்தி, தங்களது சொந்த பண்பியல்புகளை கொண்டிருக்கின்ற எண்ணற்ற பெண்கள் ஒரு அமைவிடத்தில் ஒன்றாகக் கூடி வந்திருப்பதை காண்பது உத்வேகமளிக்கிறது. கலை வடிவங்களை தங்களது வாழ்க்கைப் பணியாக தேர்வு செய்து சாதிக்க விரும்பும் அனைத்து பெண்களுக்கும் ஒரு சிறப்பான எடுத்துக்காட்டு நபராக Ms. ஹேமலதா இருக்கிறார்.

கலர்ஸ் தமிழின் மங்கையர் திருவிழா
வசதியற்ற மற்றும் உடல்ஊனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையையும், தைரியத்தையும் வழங்கி ஊக்குவிப்பது நமது கடமையென்று தனது செயலின் மூலம் வலுவாக எடுத்துரைப்பராக Ms.அம்சவேணி திகழ்கிறார். பெண்கள், அவர்களது முழு சாத்தியத்திறனை எட்டுவதற்கு அவர்கள் திறனதிகாரம் பெறுவதை இலக்காக கொண்டு இத்தகைய அற்புதமான முயற்சியை மேற்கொண்டு வரும் கலர்ஸ் தமிழ் சேனலை நான் மனமார பாராட்டுகிறேன்.” என்று கூறினார்.
கலர்ஸ் தமிழின் பிசினஸ் ஹெட் திரு. எஸ். ராஜாராமன் இந்நிகழ்வில் பேசுகையில், “பார்வையாளர்களுக்கும் மற்றும் இந்த சேனலுக்கும் மங்கையர் திருவிழா எப்போதும் மகிழ்ச்சியளிக்கும் மிகச்சிறப்பான நிகழ்வாக இருந்து வருகிறது. இம்முறை சேலம் மக்களுக்கு இத்திருவிழாவை நாங்கள் அறிமுகம் செய்திருக்கிறோம். சேலம் மற்றும் சுற்றியுள்ள பிராந்தியத்தில் எமது நிகழ்ச்சிகளுக்கு எப்போதும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வந்திருக்கிறது. இத்திருவிழாவை இங்கு நடத்துவதன் மூலம் எமது பார்வையாளர்களோடு இன்னும் எமது பிணைப்பை வலுப்படுத்திக்கொள்ளவும் மற்றும் அவர்களிடமிருந்து நாங்கள் பெறுகின்ற பாசத்தை கௌரவிக்கவும் நாங்கள் விரும்பினோம். இம்மாநகரின் சில பகுதிகளை வண்ணம் தீட்டி அழகுபடுத்தியிருப்பதன் மூலம் எமது நன்றிக்கடனை எளிய முறையில் நாங்கள் செலுத்தியிருக்கிறோம். மிகப்பெரிய எண்ணிக்கையில் பெண்கள் இந்நிகழ்விற்காக வந்திருப்பது எங்களுக்கு அதிக உற்சாகம் அளிக்கிறது. மேலும், இதை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்ள உறுதி கொண்டிருக்கிறோம்.” என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.