Home /News /entertainment /

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கலர்ஸ் தமிழின் ‘ஜமீலா’.. லீட் ரோலில் நடிப்பவர் இவர் தான்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கலர்ஸ் தமிழின் ‘ஜமீலா’.. லீட் ரோலில் நடிப்பவர் இவர் தான்!

ஜமீலா

ஜமீலா

இந்த தொடரில் பிரபல நடிகை தன்வி ராவ் நடித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தனது திறமையைக் கண்டறிந்து தனது கனவுகளை நிஜமாக்க துடிக்கும் ஒரு பெண்ணின் கதையான ‘ஜமீலா’ தொடர் விரைவில் கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகவுள்ளது.

    விரைவில் ஒளிபரப்ப உள்ள புத்தம் புதிய தொடர் ‘ஜமீலா’ வின் முதல் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது கலர் தமிழ் தொலைக்காட்சி. தனது திறமையைக் கண்டறிந்து தனது கனவுகளை நிஜமாக்க துடிக்கும் ஒரு இளம் பெண்ணின் ஆத்மார்த்தமான பயணத்தை மையமாக வைத்து, எடுக்கப்பட்டுள்ள இந்த தொடரில் பிரபல நடிகை தன்வி ராவ் நடித்துள்ளார்.

    விஜய் டிவி சீரியல் பிரபலத்தின் அக்கா அந்த நடிகையா? ஆச்சரியப்படும் ரசிகர்கள்!

    இருட்டான ஆடிட்டோரியத்தின் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இந்த ப்ரோமோவில் தலை முதல் கால் வரை கருப்பு நிற ஆடை அணிந்த ஒரு பெண் மேடையில் தோன்றுவதைப் போலவும், பார்வையாளர்கள் கூட்டம் கூட்டமாக ஆரவாரம் செய்வது போலவும் உள்ளது. எல்லோரும் ஆவலுடன் காத்திருந்து, அவள் யாராக இருக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்க, அந்தப் பெண் தன் முகத்திரையை விலக்கி தன்னை ஜமீலா என்று அறிமுகம் செய்து கொள்கிறாள். அவள் ஏன் மேடையில் இருக்கிறாள், அவள் உலகிற்கு என்ன சொல்ல வருகிறாள் என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



     




    View this post on Instagram





     

    A post shared by Colors Tamil (@colorstvtamil)






    ரங்பிரங்கி, கன்ஸ் ஆப் பெனாரஸ் மற்றும் குலாப் கேங் போன்ற திரைப்படங்களில் தனது நடிப்புத் திறமையால் புகழ் பெற்ற நடிகை தன்வி ராவ். ஒவ்வொரு பெண்ணும் தன் கனவுகளைத் துரத்தி பிடிப்பதற்கும், தனது விருப்பத்தை நிறைவேற்றுவதற்கும் உரிமை பெற்றவர்கள் என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி, வரவிருக்கும் புதிய தொடர், பார்வையாளர்களை உற்சாகப்படுத்துவதோடு, சின்னத்திரையில் அற்புதத்தை உருவாக்கும் என்பதற்கான உறுதியையும் அளிக்கிறது. எனவே விரைவில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இந்த தொடரை பார்த்து மகிழுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், TV Serial

    அடுத்த செய்தி