ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஜமீலாவின் வாழ்க்கையை மாற்ற போகும் ஹீரோ.. கலர்ஸ் தமிழ் சீரியல் அப்டேட்!

ஜமீலாவின் வாழ்க்கையை மாற்ற போகும் ஹீரோ.. கலர்ஸ் தமிழ் சீரியல் அப்டேட்!

ஜமீலா

ஜமீலா

இந்த தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி இரவு 7 மணிக்கு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜமீலா தொடரின் மூன்றாவது ப்ரோமோவை வெளியிட்டுள்ளது கலர்ஸ் தமிழ். 

  தனது இலக்குகளை அடைய எதிர்பார்த்து காத்திருக்கும் இளம் பெண்ணின் சிக்கலான பயணத்தை விவரிக்கும் ஜமீலா தொடர் கலர்ஸ் தமிழில் அக்டோபர் 10ஆம் தேதி இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது

  கோபிக்கு கல்யாணம்.. சமைக்க கிளம்பிய பாக்கியா! பரபரப்பான திருப்பத்தில் பாக்கியலட்சுமி

  பல உணர்வுகளை உள்ளடக்கிய ஓர் பெண்ணின் கனவுகளை வெளிப்படுத்தும் வகையில் பார்வையாளர்களின் ஆர்வத்தையும் கவனத்தையும் ஈர்த்து,பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் தனது புத்தம் புதிய புனைகதை நிகழ்ச்சியான ஜமீலா தொடரின் மூன்றாவது ப்ரோமோவை வெளியிட்டது. அக்டோபர் 10ஆம் தேதி இரவு 7 மணி முதல் ஒலிபரப்பை தொடங்கும் இந்த நிகழ்ச்சி தன் குடும்பம் எதிர்கொண்ட கடந்தகால சோகத்தின் காரணமாக தனது இசை பயணத்தை மேற்கொள்ள முடியாமல் தவிக்கும் ஒரு பெண்ணின் கதையாகும்.

  colors tamil jamelaa promo got more likes, jamelaa serial, jamelaa time, jamelaa serial timing, jamelaa serial hero, jamelaa heroine, jamelaa tamil serials time colorstamil ,jamelaa new serial from oct 10th, jamelaa ஜமீலா, ஜமீலா சீரியல், ஜமீலா தொடர், கலர்ஸ் தமிழ், கலர்ஸ் தமிழி சீரியல், ஜமீலா சீரியல்,
  ஜமீலா சீரியல்

  கதாநாயகனாக நடிகர் அஜய்யை அறிமுகம் செய்யும் மூன்றாவது ப்ரோமோ , ஏ.கே -வின் (நடிகர் அஜய்யை ) வருகையால் ஜமீலாவின் (தன்வி ராவ்) வாழ்க்கையில் ஒலிபெருகுமா என்ற கேள்வியோடு தொடர்கிறது. தனக்கு மெல்லிசையை பரிசாக கொடுத்து தனது இசை ஆர்வத்திற்கு எதிராக குடும்ப சூழ்நிலையை மாற்றி அமையுமாறு ஒரு இக்கட்டான வாழ்க்கையை அமைத்தது ஏன்? என கடவுளிடம் பிரார்த்தனை செய்வதோடு கேள்வி எழுப்பும் காட்சியோடு தொடர்கிறது இந்த ப்ரோமோ. அதே வேளையில் ஒரு கோவிலில் ஏ.கே பிரார்த்தனை செய்வதையும் ப்ரோமோ அறிமுகப்படுத்துகிறது.

  colors tamil jamelaa promo got more likes, jamelaa serial, jamelaa time, jamelaa serial timing, jamelaa serial hero, jamelaa heroine, jamelaa tamil serials time colorstamil ,jamelaa new serial from oct 10th, jamelaa ஜமீலா, ஜமீலா சீரியல், ஜமீலா தொடர், கலர்ஸ் தமிழ், கலர்ஸ் தமிழி சீரியல், ஜமீலா சீரியல்,
  ஜமீலா சீரியல்

  பூசாரி அவரை ஆனந்த கண்ணா என்று அழைக்கிறார். ஜமீலா பிரார்த்தனை செய்து, தன்னிடம் நம்பிக்கையின் ஒளியைக் காட்டுமாறு கெஞ்சுகிறார். இந்நிலையில் ஜமீலாவின் வீட்டில் வசிக்க அப்துல் காதர் என்று தனது பெயரை மாற்றிக்கொள்ளும் எ கே அவ்வாறே தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார். எ கே வின் உண்மையான அடையாளம் என்ன, அவரால் ஜமீலாவின் வாழ்க்கையில் என்ன திருப்பம் உண்டாகவிருக்கிறது என்பது காண்போரை வியாபிக்கும் என்பது நிச்சயம்.
   
  View this post on Instagram

   

  A post shared by Colors Tamil (@colorstvtamil)  ஒவ்வொரு பெண்ணும் இலக்கை அடைய முழு மனதுடன் போராடி வெற்றி பெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் இந்த தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி இரவு 7 மணிக்கு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், TV Serial