கலர்ஸ் தமிழின் ஜமீலா சீரியல் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகர்கிறது.
நம்பிக்கை மற்றும் தனது கனவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து குடும்ப பிரச்சினைகளுக்கு மத்தியில், எப்படி தனது இசை பயணத்தை தொடர்கிறார் என்பதே ஜமீலா தொடரின் கதையாகும். அவளது இலக்கை அடைய அவளது குடும்பத்தினரே அவளுக்கு உதவ மறுக்கின்றனர். பிறகு தனது லட்சியத்தை அடைவதற்கான நம்பிக்கை எண்ணம் அவளது மனதில் துளிர்விடுகிறது. இந்த தொடரின் துணை கதாபாத்திரங்களாக ஐஸ்வர்யா பாஸ்கரன் - சலீமா வாகவும் மற்றும் கெளதம் சுந்தர்ராஜன் - ஹனிஃபா வாகவும் நடித்திருக்கிறார்கள்.
ஜமீலா சீரியலில் தற்போது அனைத்து குடும்ப பிரச்சனைகளையும் தீர்க்கும் முயற்சியில் காசிமை நிச்சயதார்த்தம் செய்துக் கொள்ள ஜமீலா ஒப்புக்கொள்கிறார். இதனால் கோபமடைந்த அப்பாஸ் அவளை திட்டுகிறார். இந்த சூழ்நிலையை ஏகே சமரசமாக கையாள்கிறார். ஜமீலா இனி ஒருபோதும் பாட மாட்டாள் என உறுதியளிக்கிறார்.
விஜய் தான் நம்பர் 1... வாரிசு தயாரிப்பாளர் பேச்சால் எழுந்த சர்ச்சை!
ஏ.கே மற்றும் ஜமீலா பேசுவதை தவறாக புரிந்துக் கொண்ட கீர்த்தி, பின்னர் ஜமீலா நிச்சயதார்த்தம் செய்து கொள்வதை உணர்ந்து அவளிடம் மன்னிப்பு கேட்கிறார். நிச்சயதார்த்தம் தொடங்கிய நிலையில், காசிமை கைது செய்ய போலீஸ் வந்ததால் அனைவரும் அதிர்ச்சியில் உறைகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.