Home /News /entertainment /

கலர்ஸ் தமிழில் களைக்கட்டும் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள்!

கலர்ஸ் தமிழில் களைக்கட்டும் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள்!

கலர்ஸ் தமிழ்

கலர்ஸ் தமிழ்

கலர்ஸ் தமிழில் அசோக் செல்வன் மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்த ‘ஹாஸ்டல்’ நகைச்சுவை திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
   கலர்ஸ் தமிழில் வரும்  ஆகஸ்ட் 15–ந்தேதி அன்று பல சுவாரசியமான நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகவுள்ளன

  . காலை 8.30 மணிக்கு ஜோதிடர் மகேஷ் ஐயரின் நலம் தரும் ஆவணி மாதம் நிகழ்ச்சியுடன் தொடங்கும் சுதந்திர தின நிகழ்ச்சி தொடர்ந்து 9.30 மணி இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் தலைமை ஏற்று நடத்தும் சிறப்பு பட்டிமன்றம் மற்றும் பல சிறப்பு நிகழ்ச்சிகளோடு பல்வேறு திரைப்படங்களும் ஒளிபரப்பபடவிருகின்றன. ஆகஸ்ட் 15–ந்தேதி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள் அன்றைய தினம் முழுவதும் இடைவிடாத பொழுதுபோக்கு நிகழ்ச்சியை பார்த்து மகிழுங்கள்.

  புகழ்பெற்ற இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் நடுவராக பங்கேற்கும் நகைச்சுவை மிக்க சிறப்பு பட்டிமன்றத்தில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், இயக்குனரும் நகைச்சுவை நடிகருமான பாண்டியராஜன், தம்பி ராமையா, சிங்கம்புலி, வசந்த பாலன் மற்றும் பேரரசு ஆகியோர் இன்றைய சினிமா முழு சுதந்திரத்துடன் எடுக்கப்படுகிறதா இல்லை கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளோடு எடுக்க படுகிறதா என்பது குறித்து விவாதிக்க இருக்கிறார்கள். வசந்த் அண்ட் கோ ஆடி அதிரடி தள்ளுபடி வழங்கும் இந்த நகைச்சுவை பட்டிமன்றத்தை கரூர் வைஸ்யா வங்கி மற்றும் குமரன் பிராண்ட் கருவாடு ஆகியவை இணைந்து வழங்குகின்றன.

  colors tamil independence day special shows and movies august 15th independence day television special colortamil

  இதனை தொடர்ந்து நடிகரும் இயக்குனருமான கெளதம் வாசுதேவ் மேனன் இந்திய சினிமாவில் 20 ஆண்டு பயணத்தை போற்றும் விதமாக சினிமா துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் சிறப்பு இசை நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை வசந்த் அன்ட் கோ ஆடி அதிரடி தள்ளுபடி வழங்குகிறது. 2 மணி நேரம் நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பாடகர்கள் கார்த்திக், பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் சிட் ஸ்ரீராம் உள்ளிட்டோர் பங்கேற்று ஆத்மார்த்தமான மெல்லிசை மற்றும் இசை சம்பந்தமான உரையாட இருக்கிறார்கள்.

  நீளமான முடியை கொண்ட பேரன்பு சீரியல் நடிகை வானதி!

  மேலும் 12 மணிக்கு முதல் முறையாக நடிகர்கள் வில் ஸ்மித் மற்றும் டாமி லீ ஜோன்ஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படமான மென் இன் பிளாக் II திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. வடிவத்தை மாற்றும் வேற்றுக் கிரகவாசிகள் இடமிருந்து கிரகத்தை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் இரண்டு ஏஜென்ட்களின் வாழ்க்கையை பற்றியதாகும். தொடர்ந்து மதியம் 2 மணிக்கு சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் வெளிவந்த அறிவியல் புனைக்கதை ஆங்கில திரைப்படத்தின் தமிழ் தழுவலான மிகமிக அவசரம் படம் திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.

  colors tamil independence day special shows and movies august 15th independence day television special colortamil

  அதனைத் தொடர்ந்து 4 மணிக்கு அசோக் செல்வன் மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்த ‘ஹாஸ்டல்’ நகைச்சுவை திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. மாணவர்கள் விடுதிக்குள் நுழைந்த இளம்பெண் அங்கிருந்து எப்படி தப்பிக்கிறாள் என்பதே இப்படத்தின் கதையாகும். இந்த திரைப்படங்களைத் தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு காமெடி நடிகர் சந்தானம் நடித்த சபாபதி திரைப்படமும், இரவு 9:30 மணிக்கு நடிகை ராய்-லட்சுமி நடித்த திகில் திரைப்படும் சிண்ட்ரால்லா ஒளிபரப்பாக உள்ளது.

  colors tamil independence day special shows and movies august 15th independence day television special colortamil

  சுந்தந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வர்த்தக பிரிவு தலைவர் திரு ராஜாராமன் கூறுகையில், “சுதந்திரம் என்பது விடுதலையின் மகத்துவத்தையும் உணர்வையும் வரையறுக்கிறது. இதுபோன்ற முக்கியமான சிறப்புமிக்க நாட்களில் குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து பொழுதுபோக்கும் விதமாக பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளையும் திரைப்படங்களையும் வழங்குவது குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். அவர்கள் தங்கள் வழக்கமான மன அழுத்தத்திலிருந்து விடுபடவும், ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடவும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் மிகச்சிறந்த ஒன்றாக இருக்கும். எங்கள் தொலைக்காட்சியில் சுதந்திர தினத்தன்று வரிசையாக ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு மகிழ்ச்சியானதொரு அனுபவத்தை வழங்கும் என்று தெரிவித்தார்”

  புடவையை விட 'ராஜா ராணி' ரியா மாடர்ன் ட்ரெஸ்ஸில் ரொம்ப அழகு!

  சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீட்டுக்கு வீடு தேசியக் கொடியையேற்றுவோம் எனும் மத்திய அரசின் “ஹர் கர் திரங்கா” முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் கலர்ஸ் தமிழ் அதன் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடக சேனல்களில் ஆகஸ்ட் 13–ந்தேதி முதல் 15–ந்தேதி வரை அதன் ஆதரவை வெளிப்படுத்தவிருக்கிறது. ஆகஸ்ட் 15–ந்தேதி சுதந்திர தினத்தன்று கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள் 75வது சுதந்திர தினத்தன்று இடைவிடாத நிகழ்ச்சிகளை உங்கள் குடும்பத்துடன் பார்த்து மகிழுங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sreeja
  First published:

  Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், Independence day, TV Serial

  அடுத்த செய்தி